வெள்ளி, 19 ஜூன், 2009

விஜய் அரசியலுக்கு வருகிறார??? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் வெள்ளம்

விஜய் அரசியலுக்கு களமிறங்குவாரா, இல்லையா, வருவாரா ,வரமாட்டாரா, என்று பலரிடம் உலகத்தமிழினம்மட்டுமில்லை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் பல்வேறுபட்ட சந்தேகங்களுடன் உலாவந்தன விஜயின் அரசியல் பிரவேசம்.
வருகிற செய்திகளை மக்களை நம்பவைக்குமோ என்று ஒரு கூட்டம் கூறஇல்லை, இல்லை ரஜினியின் இடத்தை பிடிக்க ரஜினியை போல் இவரும் மக்களை குழப்புகிறார் என்று இணையத்தளங்களில் வராதா செய்திகளே இல்லை.
இந்நிலையில் விஜய் அரசியல் பிரவேசம் இன்னும் சூடு பிடிக்க இணையத்தளங்களில் முதல் பக்க செய்தியாக அமைகிறது.

இதற்க்கு எல்லம் விஜயின் இறுதியாகவும் உறுதியாகவும் விஜய் தனது பிறந்த தினமாகிய (22 ஜீன்) வருகின்ற திங்கள் அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க போகிறார். 22 ஜீன் மாதம் திங்கள்கிழமையை ஆர்வமாக எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள் மட்டுமில்லை மக்களும்.
அன்று விஜய் கூறப்போவது என்ன ????????
இரண்டு நாள் பொறுத்திருங்கள்!!!!!

விஜய் தனிக்கட்சி துவங்குகிறார் என்று பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து சில வார இதழ்களுக்கும் அவர் பேட்டியளித்து வருகிறார். நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்ற ரீதியில்தான் அவரது பதில்கள் அமைந்துள்ளன.


இதற்கு விஜய் அளித்துள்ள விளக்கம்: நான் அரசியலுக்கு வர விரும்புவது உண்மையே. அதற்கான ஆலோசனைகளும் நடந்தன. இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

இந்த நற்பணி மன்றங்களை அரசியல் அமைப்பாக மாற்றி, இன்னும் பெரிய அளவில் ஜனங்களுக்கு உதவணும் என்பது இவர்களின் விருப்பம். அவர்கள் சொல்வதில் உள்ள உண்மையும், நடைமுறை நியாயமும் எனக்குப் புரிகிறது.

என் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக எனக்குள் திட்டம் இருந்தது. அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் என்னை குடும்பத்தில் ஒருவனாக நினைக்கும் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய ஆசைப்படுகிறேன். அதனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளில், எனக்கும் உடன்பாடு ஏற்பட்டது உண்டு. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.

இது தொடர்பாக ரசிகர்களின் விருப்பத்தை மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் கேட்டு அறிய விரும்பினேன். இதற்காக சென்னையிலும், சில மாவட்ட தலைநகரங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. படித்த இளைஞர்கள், பெண்கள் என பல பிரிவினரிடம் கருத்துக்களை கேட்டு, என் மூளையில் பதிவு செய்து, அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்திருக்கிறேன்.

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று உடனடியாக அரசியலில் குதிப்பதிலும், கட்சி தொடங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Podaangoiyale
ean padathula vangura sampalam paththunnu, kollay, lanjam ellam vendap pohutha.
Poda...... antha animal ellam evan thalaivan endu solrano avanellam vela vatti illama unna mathiri oothariya suthurathugal. unnayum seththuthan solran. eanda evanayo kadavula kubuduringa avan enna mathiri aalendu theriyama. muthal unakula irukira unoda real face paru athuku pirahu neye intha ulahathuku hero aahalam. PONGADA POI UNGA VELAYA PARUNGA. EATHI VITAVANODA ULAIPPA SURANDURAVANGA IVANGALLEM.

கருத்துரையிடுக

talk me