செவ்வாய், 14 ஏப்ரல், 2009

vijay's wallpapersஇந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை

இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை என்று அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடிகர் விஜய் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ரே சாலையில் நடந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஏழை மாணவர்கள் 2 பேருக்கு கம்ப்யூட்டர், 10 பேருக்கு தையல் மிஷின்களை இலவசமாக வழங்கினர். பின்னர் விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.


அவர் கூறியதாவது: எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்குப் பிறகு நடிகர் விஜய்யின் ரசிகர்கள்தான் பொது நோக்கோடு ஏழை மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், தையல் மிஷின் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளா மற்றும் மும்பை என பல்வேறு இடங்களிலும் ரசிகர்கள் இருப்பது பெருமையாக உள்ளது.


விஜய்யை நான் மகனாக பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நற்பணிகள் செய்வதில் ஒரு தலைவராக செயல்பட்டு வருகிறார் விஜய். ஆனால் வருங்காலத்தில் விஜய் தேர்தலில் நிற்பாரா என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போதாக்கு எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார் என்றார்.

ர‌ஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்?


ர‌ஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்? கமல் என்று பதிலளித்தவர்களுக்கு மதிபெண்கள் பூ‌ஜ்யம். ச‌ரியான விடை, விஜய்.படத்துக்குப் படம் உயர்ந்து கொண்டிருக்கிறது. அவரது சம்பளம் ஐந்து சி என்கிறார்கள். கூடுதலாக சென்னை நகர உ‌ரிமை. தற்போது நடித்துக் கொண்டிருக்கும் வேட்டைக்காரனுக்கும் வெயிட்டான சம்பளம் வாங்கியதோடு, சென்னை நகர உ‌ரிமையையும் கேட்டு பெற்றிருக்கிறாராம். கூட்டிக் கழிக்கும் போது மொத்த லாபம் எங்கேயோ போய்விடும். கமலே இதைவிட குறைவாக‌த்தான் சம்பளம் வாங்குகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

விஜய்க்கு இரண்டு ஜோடி

பாபு சிவன் இயக்கத்தில் வேட்டைக்காரனில் நடித்து வருகிறார் விஜய்.முதல்கட்டமாக ராஜமுந்‌‌தி‌ரியில் விஜய்யின் ஓபனிங் பாடல் படமாக்கப்பட்டது. இதில் விஜய்யுடன் அவரது மகன் சஞ்ச‌ய்யும் ஒரு வ‌ரிக்கு ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.


அருந்ததீ புகழ் அனுஷ்கா விஜய்யின் ஜோடி. இவர் தவிர இன்னொரு ஜோடியும் விஜய்க்கு இருக்கிறாராம். இரண்டாவது ஹீரோயினான அந்த வேடத்தில் நடிக்கப் போகிறவர் யார்? இரண்டாம் வ‌ரிசை நாயகிகள் அந்த வேடத்துக்காக தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், பிரகாசமான வாய்ப்பு மாடல்ஷாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.


"கே.டி". "குஞ்சுமோனின்" "காதலுக்கு மரணமில்லை" படத்தில் மீராநந்தனுடன் இன்னொரு ஹீரோயினாக அறிமுகமானவர்தான் இந்த மாடல்ஷா. முதல் படம் வெளிவரும் முன்பே விஜய் வரைக்கும் இவரது புகழ் எட்டியிருக்கிறது. வேட்டைக்காரனில் இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு இவருக்கே என்கிறார்கள்.
மாடல்ஷாவின் அதிர்ஷ்டம் எப்படி என்பது இன்னும் ஓ‌ரிரு நாளில் தெ‌ரிந்துவிடும்.


40 லட்ச ரூபாய் செட்டில் வேட்டைக்காரன்.
வேட்டைக்காரன் விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம்.

தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பாடல் காட்சிக்கும், சண்டைக் காட்சிக்கும் சுமார் 40 லட்ச ரூபாய் செட் போடப்பட்டிருக்கிறது. மொத்தம் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். மேலும், பாடல் காட்சிக்கும், சண்டைக் காட்சிக்கும் ஏராளமான ஜுனியர் நடிகர்கள் தேவைப்படுவதால் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளனர்.


அதேபோல், சண்டைக் காட்சியில் இதுவரை இல்லாத பல புது யுக்திகளை பயன்படுத்தப் போகிறார்களாம். அது என்ன என்று கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர்.

புதன், 1 ஏப்ரல், 2009

PUB : coco cola shooting imagesvijay's wallpaper

BEST OF KOLLYWOOD’S ‘CHEMISTRY’

1: Vijay - Shalini - Kadhalukku Mariyadhai


This is perhaps the most celebrated love story of our times. A beautiful tale of two people who are made for each other but resist their feelings for the sake of their families. But, love, especially if destined in one’s life, will happen. No matter what the circumstances are. The movie stated in a very cute way that true love will always get its due from the family and society, it will never go unrecognized. The film created a huge impact among the youngsters, so much so that they names of the lead characters in the film – Jeeva and Mini – remain etched in the memories.


7: Vijay - Trisha - Ghilli
This was one classic case where love is left unexpressed dangerously till the climax. We knew that the heroine wouldn’t fly leaving the hero behind, but there was sense of apprehension in the final moments before Trisha finally appeared. Love that goes untold and unknown has a charm that connects instantly to a large section of the people. The audience empathize with the tongue tied lover who is not able to open his heart or who realized too late that the feeling he had in his heart was love indeed.

விஜய்யுடன் நடிப்பது வித்தியாசமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது, அனுஷ்கா

விஜய்யுடன் நடிப்பது சந்தோஷமாகவும், அனுபவிக்கும் வகையிலும் இருப்பதாக கூறியுள்ளார் அனுஷ்கா.

ரெண்டு படத்தோடு தெலுங்குக்குப் போய் விட்டார் அனுஷ்கா. இப்போது அங்குள்ள ஹீரோயின்களை உண்டு, இல்லை என பண்ணி வருகிறார் தனது அருந்ததி மூலம். தமிழிலும் அருந்ததீ என்ற பெயரில் அப்படம் ரிலீஸாகி அனுஷ்காவின் பக்கம் கோலிவுட் பார்வையைத் திருப்பியுள்ளது. அவரைத் தேடி தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ்ப் பட வாய்ப்புகளும் நிறைய வருகின்றன. தற்போது தெலுங்கில் மகேஷ்பாபுவுடனும், தமிழில் விஜய் மற்றும் கார்த்தியுடனும் இணைந்து நடிக்கிறார் அனுஷ்கா.

விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. வேட்டைக்காரன் அனுபவம் வித்தியாசமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறதாம் அனுஷ்காவுக்கு. விஜய்யுடன் நடிப்பது சுலபமல்ல. அவர் சிறந்த நடிக்ர. அவரது பன்ச் ரொம்பப் பிரபலமானது. அவருடன் நடித்த நாட்கள் மறக்க முடியாதவை என்கிறார் அனுஷ்கா.

வேட்டைக்காரனில் விஜய் மகன்


வேட்டைக்காரன் பாடல் காட்சியில் விஜய் தனது மகன் சஞ்சயை ஆட வைக்கிறார். தனது மகன், மகள் இருவ‌ரின் புகைப்படமும் பத்தி‌ரிகைகளில் வெளிவருவதை விரும்பாதவர் விஜய்.


ஐபிஎல் கி‌ரிக்கெட் போட்டி நடந்த நேரம் தனது மகனை தோளில் சுமந்தபடி மைதானத்துக்கு வந்தது பல‌ரின் புருவங்களை உயரச் செய்தது.


இதோ அடுத்த அதிரடியாக தனது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தப் போகிறார். விஜய் ரசிகர்கள் போஸ்ட‌ரில் படம் போட இன்னொரு ஹீரோ கிடைத்திருக்கிறார்.

விஜயின் வேட்டைக்காரன், ரஜினியின் எந்திரன் சூட்டிங் பட்டையை கிளப்ப ஏனைய படங்களுக்கு டான்சர்கள் பஞ்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன

ர‌ஜினியின் எந்திரன், விஜயின் வேட்டைக்காரன் இரண்டும் சேர்ந்து டான்சர்கள் பஞ்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

ராஜமுந்தி‌ரியில் விஜயின் வேட்டைக்காரன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய் ஆண்டினியின் இசையில் தயாரான பாடலை இங்கு படமாக்கி வருகிறார் வேட்டைக்காரன் இயக்குனர் பி.பாபு சிவன். ஷோபி நடனம் அமைக்கும் இந்தப் பாடலில் நூறு நடனக் கலைஞர்கள் விஜயுடன் ஆடுகிறார்கள். நூறு பேரும் முகாமிட்டிருப்பது ராஜமுந்தி‌ரியில். இருக்கிற சில நூறு நடனக் கலைஞர்களை எந்திரனுக்கும், வேட்டைக்காரனுக்கும் அள்ளிக் கொண்டு போயிருப்பதால் மற்ற படங்களுக்கு டான்சர்கள் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.. அதே ஆந்திராவில் ஹைதராபாத் ராமோ‌ஜிராவ் பிலிம் சிட்டியில் ர‌ஜினியின் எந்திரன் படத்தின் பாடல் காட்சி படமாகி வருகிறது. சாபுசி‌ரில் அமைத்திருக்கும் பிரமாண்ட அரங்கில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் ஷங்கர். படத்தில் ர‌ஜினியின் ஓபனிங் பாடலாக இது இருக்கும் என்கின்றன தகவல்கள். இந்தப் பாடல் காட்சியில் ர‌ஜினி, ஐஸ்வர்யா ராயுடன் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களும் பங்கு பெறுகிறார்கள். அனைவரும் தற்போது ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளனர்