வியாழன், 31 டிசம்பர், 2009

2009வது வருடமும் விஜயும்




செவ்வாய், 29 டிசம்பர், 2009

வேட்டைக்காரன் திரை விமர்சனம்.


நடிகர் : விஜய்.

நடிகை : அனுஷ்கா

நடிப்பு: விஜய், அனுஷ்கா, சலீம் கவுஸ் மற்றும் பலர்

ஒளிப்பதிவு : கோபிநாத்

இசை : விஜய் ஆண்டனி

கதை,திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் : பாபு சிவன்.

விஜய் நடிப்பில், பாபு சிவன் இயக்கத்தில்,விஜய் ஆண்டனியின் இசையில், ஏ.வி. எமின், சன் நிறுவன வெளியீட்டில் வெளிவந்திருக்கும்,அமர்க்கள வெற்றி திரைப்படம் வேட்டைக்காரன்.
இது விஜயின் 49வது திரைப்படம்.
கில்லி, குருவியை இயக்கிய தரணியிடம் அசோஸியேட்டாக இருந்த பாபு சிவன் வேட்டைக்காரனின் இயக்குனர்.

வேட்டைக்காரன் கதை விமர்சனம்

தூத்துக்குடியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்து இளைஞர் விஜய். நேர்மையான என்கவுண்டர் போலீஸ் அதிகாரி தேவராஜ் பிடித்து போய் அவரைப்போல் போலீஸ் வேலையில் சேர ஆசைப்படுகிறார். சென்னை வந்து தேவராஜ் படித்த கல்லூரியிலேயே சேருகிறார். ஆட்டோ ஓட்டி படிப்பு பீஸ் கட்டுகிறார்.

தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்து ரவுடிகளை அழிக்கிறார். அவரது தூத்துக்குடி டூ சென்னை பயண நோக்கமும் படு வித்தியாசம்.

ரயில்வே ஸ்டேஷன் போன்ற சந்தடி மிகுந்த இடங்களில் தனியாளாக ரவுடிகளை என்கவுண்ட‌ரில் போட்டுத் தள்ளும் போலீஸ் அதிகா‌ரி தேவரா‌ஜ் (தெலுங்கு நடிகர் ஸ்ரீஹ‌ரி). இவரது ஆதர்ஷ ஃபேன் தூத்துக்குடியில் வசிக்கும் ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்). சென்னை வரும் போலீஸ் ரவி தேவரா‌ஜ் போலவே ஆட்டோ ஓட்டி, அவர் படித்த கல்லூரியிலேயே படிக்கிறார். தேவரா‌ஜ் போலவே என் கவுண்டர் போலீஸாக வேண்டும் என்பது ரவியின் கனவு, லட்சியம்.

விஜய்யின் அறிமுகம்: முதியவர் ஒருவரை இடித்துவிட்டு செல்லும் போலீஸ் வண்டியை விஜய் துரத்துகிறார். முடியவில்லை. திரும்பிப் பார்த்தால் குதிரைக்கு லாடம் அடிக்கும் இடம். அங்கே சில குதிரைகள். அடுத்தகணம் வெள்ளை குதிரையில் தலையில் கௌபாய் தொப்பியுடன் ஸ்லோமோஷனில் வண்டியை துரத்துகிறார் விஜய். இப்படி பார்வையாளர்களே யூகித்து பு‌ரிந்து கொள்ள பல்வேறு காட்சிகளை புத்திசாலித்தனமாக வைத்திருக்கிறார்கள்.

கதாநாயகியின் அறிமுகத்தையும் சிறப்பாக குறிப்பிட வேண்டும். திருமணம் பற்றி பேச்சு வருகிறது. எனக்கான பெண் இனிமேலா பிறக்கப் போகிறாள்? அவ எப்போதோ பிறந்திருப்பாள் என்கிறார் விஜய். உடனே தலையை கோதியபடி அனுஷ்கா எ‌ண்ட்‌ரி. தியேட்ட‌ரில் விசில். வித்தியாசமான அற்புத காட்சி.

விஜய் அனுஷ்காவின் பாட்டியை கரெக்ட் செய்வதும், அவரது ஸ்கூட்டியை கண்டுபிடிப்பதுமான காமெடி காட்சிகளுக்கு குழந்தைகளும் பெ‌ரியவர்களும் சேர்ந்து சி‌ரிப்பதை குறிப்பிட்டாக வேண்டும். காமெடி சீன் என்றதும் தோளை குறுக்கி தலையை ஆட்டி என்னங்கண்ணா என்று விஜய் பேச்சையும், பாடி லாங்வேஜையும் மாற்றுவது சூப்பர்.

இனி ரவுடி கிராஸிங்குக்கு வருவோம. செல்லா (ரவிசங்கர்) என்ற ரவுடிக்கு அழகான பெண்களைப் பார்த்தால் எப்படியும் அவர்களுடன் படுத்துவிட வேண்டும் என்ற வியாதி. சம்பந்தப்பட்ட பெண்களின் அப்பாவோ, புருஷனோ... யாருடைய வண்டியையாவது டியூ கட்டவில்லை என்று தூக்கி வந்துவிடுவான். பிறகு வண்டி வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பெண்ணையோ, மனைவியையோ அவனுக்கு விருந்தாக அனுப்பி வைக்க வேண்டும்.
விஜய்யின் கல்லூ‌ரி தோழிக்கு குறி வைக்கிறான் செல்லா. அந்த‌த் தோழியின் தந்தைதான் விஜய்க்கு ஆட்டோ வாடகைக்கு விட்டிருப்பவர்.

செல்லா ஐசியூ-வில். போலீஸ் விஜய்யை அள்ளிக்கொண்டு போகிறது. காரணம், செல்லாவின் தந்தை வேதநாயகத்திடம் (சலீம் கவுஸ்) பஞ்சப்படி வாங்கி பிழைப்பவர் அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் கட்டப்பொம்மன் (சாயா‌ஜி ஷிண்டே). போலீஸ் ஸ்டேஷனில் விஜய்யை போட்டு துவைக்கிறார்கள். அவரோ கதவை உடைத்து வந்து கட்டப்பொம்மனை மிதிக்கிறார். சென்னை சிட்டி போலீஸ் மொத்தமும் வந்த பிறகே அவரை அடக்க முடிகிறது.

அடுத்து பிளாஷ்பேக். அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் தேவராஜை வேதநாயகமும் அவரது ஆட்களும் நடுவீதியில் அடித்துப் போட்டு பார்வையை பறிக்கிறார்கள். அவரது மனைவியையும், குழந்தையையும் வீட்டை‌ப் பூட்டி உயிரோடு எ‌ரிக்கிறார்கள். தேவரா‌ஜ் பற்றிய சின்னச் சின்ன செய்திகளையும் தேடிப் படிக்கும் விஜய் இது கேட்டு ஆடிப் போகிறார்.

கட்டுமான கம்பெனியை தரைமட்டமாக்குகிறார் இன்னும் என்னென்னமோ செய்கிறார். அத்துடன் இது எதுவும் தெ‌ரியாமல் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கும் அவரது மகன் செல்லாவையும் கொலை செய்கிறார். ஒட்டுமொத்த சென்னை கார்ப்பரேஷன் நினைத்தாலும் செய்ய முடியாத ஒருநாள் சாதனைகள்.
சலீம் கவுஸ் மட்டும் சாதாரணமா? மகனுக்கு கொள்ளி வைத்த கையோடு அரசியல்வாதியிடம் பேரம் பேசி வேட்புமனு தாக்கல் செய்யாமல், இடைத்தேர்தலில் நிற்காமல் அடுத்த நாளே மந்தி‌ரியாவதற்கான ஏற்பாடை செய்து முடிக்கிறார்.
கிளைமாக்ஸ் அதிஅற்புதம். ஐநூறு பேர் அடித்துக் கொண்டிருக்கும் இடத்தில் சைரனைப் போடு, கார் கதவு திறந்தாச்சு என்ற விஜய்யின் டைர‌க்சனை கேட்டு கண் தெ‌ரியாத தேவரா‌ஜ் ச‌ரியாக வேதநாயகத்தை நெஞ்சில் சுட்டுக் கொல்கிறார். டைரக்டர் டச்.

பாடலுக்கான லீடையும் வித்தியாசமாகவே பிடித்திருக்கிறார் இயக்குனர். கட்டிப் போட்டிருக்கும் அனுஷ்காவை காப்பாற்றி துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவில் பாய்ந்தும், தாவியும் தப்பித்து உயிரை‌க் கையில் பிடித்து பைக்கை கிளப்பினால், நான் உங்கூட தனியா இருக்கணும் என்று அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் கேட்ட த்‌ரிஷா மாதி‌ரி பில்லினில் உட்கார்ந்து விஜய்யின் முதுகை பிறாண்டுகிறார் அனுஷ்கா. உடனே கலர் கலரான ட்ரெஸ்ஸில் டூயட். ஒரு பைட் ஒரு பாட்டு... அமர்க்கள திரைக்கதை.

பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக அனுஷ்காவின் உடைக்கு. தாவணியை தாண்டி பார்க்காதே என்று அனுஷ்கா பாடும் போது அவர் தாவணி போட்டிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. ‌ஜிகினா வைத்த பிரா, சின்னதே சின்னதாக ஒரு கர்ச்சீஃப். விஜய்யின் அசைவுகளில் ரசிக்கக் கூடிய அதே துள்ளல்.

தான் நேசித்த போலீஸ் வேலை கிடைத்தும், அதை மறுத்து, ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஒரு போலீஸ்காரன் இருக்கிறான் என விஜய் டச்சிங்காக பேசுகிறார், இத்துடன் வேட்டை முடிகிறது.

குறிப்பிடதக்கது (+++++)

விஜய் அதிகம் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதும், அதில் சந்தர்ப்பத்தை சாதகமாக்கியும் நடிப்பதிலும் விஜயின் பரந்த மனமே இந்த வேட்டைக்கு காரனம்.

விஜய் நடித்த பல திரைப்படங்கள் வித்தியாசமான வெற்றியை கொடுத்திருந்தாலும்,இது ரசிகர்களின் விருந்தாக மட்டுமில்லை, வெற்றியின் மைகல்லாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வழக்கம் போல், குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை சென்றடையக்கூடிய வகையில்,காமெடி, அடிதடி,கதை,காதல் அலுப்பு தட்டாத நடன அம்சம் என்று தனது தனி நடிப்பினால் வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளார்.

கருத்து கூறும் பாடல் காட்சிகளுக்கு அந்த முறையிலே நடனம் ஆடி வசப்படுத்தியிருக்கிறார் என்றால் மிகையாகது.

வெற்றி படங்களின் வரிசையில் வேட்டைக்கரன் மட்டுமில்லை, வெற்றி இயக்குனர்கள் வரிசையில் இனைந்து இருப்பவர் பாபுசிவன்.

சன் பிக்சர்ஷ் இதுவரை காதலில் விழுந்தேன் தொடங்கி கன்டேன் காதலை வரைக்கும் வெளியிட்டு வசூலில் சதனை படைத்த சன், இதுவே முதல் முறையாக பெரிய நடிகரின் திரைபடத்தை வெளியிட்டு வசூலில் புதிய சாதனை படைத்திருக்கிறது.

குறிப்பிடதக்கது (---)

வித்தியாசமான திரைப்பட கதையை சொல்லிய விதம் சுறு சுறுப்பாகவும்,விறு விறுப்பகவும் அமைந்தாலும், வழக்கம் போல் கதையை ரவுடிகளுடன் இனைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார் இயக்குனர் பாபு சிவன், இதானல் கதை வெளிப்படையாக தென்படுவது மிக கடினம்.

வேட்டைக்காரன் நாயகி அனுஷ்க்காவுக்கு இதில் முக்கிய இடம் கொடுப்பதில் கஷ்ட்டபட்டிருக்கிறார் இயக்குனர்.

88.5/100
சூப்பர் ஷ்டார் நிர்வாக குழுவினர்




வெள்ளி, 11 செப்டம்பர், 2009

நீ சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!


இன்றைகளின்

கவலைக்காகவா
நீநாளைகளை

நட்டப்படுத்துகிறாய்!


என்றைக்கு

நீ நீயாக இரு
இன்னொருவரின் இரவலாக இருக்காதே!
-வெற்றிப்பேரொளி.


நீ நீயாகவிருந்தால்....எதையும் எதிர்கொள்ளலாம்

எதிர்த்து நின்றே எதையும் சாதிக்கலாம்...

இன்று மட்டுமல்ல நாளைக்கும்...

பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

ஏழை எளியவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

உண்மைக்காக எதையும் துறக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

தன்னலம் சிறிதும் இல்லாமல் நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

இரக்கம் உள்ள இதயம் சிந்தனை ஆற்றல் படைத்த மூளை வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

வீரர்களே கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தடைகளிலிருந்து விடுபடுங்கள்

இளைஞனே வலிமை அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.

சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

உடல் பலவீனத்தையோ மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

புதன், 2 செப்டம்பர், 2009

விஜய் திரைப்படங்களை புலம் பெயர் தமிழர் புறக்கணிக்க வேண்டுமெனக் கோருவது சரியா?

திமுகவில் சேர்ந்தால் நாம் விஜய் படங்களை ஆதரிப்போமா? தேர்தலுக்காக தமிழீழம் என்று கூறிய ஜெயலலிதாவை ஆதரித்தால் சரியா?

கனடாவில் உள்ள தமிழ்ச் சங்கமொன்று விஜய் நடிக்கும் படங்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கோரியுள்ளதாக தமிழகத்தில் உள்ள இணையத்தளங்களும், பத்திரிகைகளும் பரபரப்பு செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. கனடாவில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு சங்கத்தின் கருத்தை ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தின் கருத்துப் போல திரித்து விடுவதில் இவை ஏறத்தாழ வெற்றி கண்டுள்ளன.

கடந்த காலங்களில் உணர்ச்சிகரமான ஒரு விடயம் வந்தால் ஏனென்று கேள்வி கேட்காமல் தமிழ் ஊடகங்கள் மௌனமாக இருப்பது வழமை. ஆனால் இன்றுள்ள நிலையில் அவ்வாறான பயணம் ஈழத் தமிழினத்தின் எதிர் காலத்திற்கு நன்மை பயக்காது என்பதே உண்மை.

ஆகவே நடிகர் விஜய் விடயத்தை ஒரு புதிய கோணத்தில் திருப்பிப் பார்க்கிறோம். அதற்காக விஜய் காங்கிரசில் சேருவதை நாம் ஆதிரிக்கிறோம் என்று கருதிவிடாதீர்கள் முதலில் இங்குள்ள கேள்விகளை மட்டும் பாருங்கள்.

கேடுகெட்ட காங்கிரசோடு விஜய் சேர்வது தவறென்றால்…

01. மு.கருணாநிதி தலைமையிலான திமுகவில் சேர்ந்தால் நாம் விஜய் படங்களை ஆதரிப்போமா.. மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் ஈழத்தில் தமிழினமே வேரோடு அறுத்து வீசப்பட்டிருக்கிறது. காங்கிரசிற்கும், திமுகவிற்கும் என்ன வேறுபாடு..

02. விஜய் ஜெயலலிதா அம்மையாரின் அதிமுகவில் சேர்ந்தால் அவருடைய திரைப்படங்களுக்கு நாம் ஆதரவு கொடுப்போமா? ஜெயலலிதா அம்மையார் தேர்தலின்போது ஈழம் அமைப்பேன் என்று பிரச்சாரம் செய்தார். புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயே ! பராசக்தி என்று அவருக்கு வாழ்த்து மடல்களை எழுதிக் குவித்தார்கள்.
கடந்த காலங்களில் காங்கிரசோடு சேர்ந்து ஜெயலலிதா செய்ததை எல்லாம் அவர்கள் கணப்பொழுதில் மறந்தார்கள். இப்போது ஜெயலலிதா என்ன செய்கிறார்? வன்னியில் அடைபட்டுள்ள மக்களுக்காக எங்காவது ஓர் ஆர்பாட்டத்தை நடாத்தினாரா ? இல்லையே.

தேர்தலுக்காக தமிழ் மக்கள் காதில் பூ சுற்றிய ஜெயலலிதாவுடன் சேர்வதுதான் சரியா? ஈழத்தமிழர் விடயத்தில் ஜெயலலிதாவுக்கும் மு.கருணாநிதிக்கும் காங்கிரசிற்கும் என்ன வேறுபாடு ? இந்த இரண்டு கட்சிகளும் வடஇந்தியரின் கட்சிகளல்ல.. தமிழ்க்கட்சிகள். ஏற்கெனவே விஜய்யின் தந்தை சந்திரசேகர் திமுகவில் இருந்து அவரால் எதையும் செய்ய முடியாது போய்விட்டது.

ஈழத் தமிழர் விவகாரத்தில் அவர் தொடர்ந்து ஏதோ செய்து வருவதை மறுக்க முடியாது. நடிகர் விஜய் ஓர் ஈழத் தமிழ் பெண்மணியை மணந்துள்ளார் ஆகவே நாம் அவரை வாழ்த்துகிறோம் என்று புலம் பெயர் தமிழர் எழுதிக் குவித்த பாராட்டுக்களை நாம் மறந்துவிட முடியாது.

மேலும் அவர் ஈழத் தமிழருக்காக தமிழகத்தில் பல போராட்டங்களை நடாத்தியவர். அப்படிப்பட்ட ஒருவர் காங்கிரசில் சேர்வது ஈழத் தமிழரை விற்பதற்கு என்று நாம் எப்படி ஒரேயடியாக முடிவு செய்யலாம். காங்கிரஸ் போன்ற ஒரு கட்சியை ஈழத் தமிழருக்கு சார்பாக சிந்திக்க வைக்க மு.கருணாநிதியாலோ, ஜெயலலிதாவாலோ, தங்கபாலுவாலோ, ஜி.கே. மூப்பனாரின் மகனாலோ முடியாமல் போய்விட்டது.

அப்படிப்பட்ட நிலையில் விஜய்யாவது காங்கிரசின் குரோத மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயல்வார் என்று நாம் ஏன் சிந்திக்கக் கூடாது? அப்படியொரு நம்பிக்கையான கோணத்தில் நாம் ஏன் சிந்திக்க மறுத்து அவருடைய திரைப்படங்களின் பொருளாதாரத்தில் மண்ணள்ளி வீச முற்பட வேண்டும்.

விஜய் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த கருத்துக்கள் உள்ள இளைஞரும் கூட. எம்.ஜி.ஆர் காங்கிரசை ஆதரித்தபடியே ஈழத் தமிழருக்கு உதவியதைப் போல அவரும் உதவ எண்ணியிருக்கலாம். அவருடைய உள்ளத்தை நாம் சரியாக அறியாமல் அவசரப்படுவது சரியா ? விஜய் உண்மையாக காங்கிரசில் சேரப் போகிறார் என்றால் நமது கடமை என்ன ? அவருடன் நாம் கதைக்க வேண்டும். எமது கருத்துக்களை கூற வேண்டும். அதில் எதையாவது, யாராவது செய்தோமா ? அப்படிச் செய்யாமலே நாம் அறிக்கை விடுவது சரியா? உண்மையாகவே விஜய் காங்கிரசில் சேர்ந்துவிட்டாரா, அவர் காங்கிரசில் சேர்வதற்கு என்ன நிபந்தனை வைத்தார், அவருடைய அரசியல் கொள்கை என்ன இவைகளை அறியாமல் இப்படியான கருத்துக்களை முன் வைப்பது சரியா? நாம் பெரிதும் பாராட்டும் தமிழ் ஈழ விரும்பி டாக்டர் ராமதாஸ் அவர்களின் மகன் டாக்டர் அன்புமணி தேர்தலுக்கு சில மாதங்கள்வரை காங்கிரஸ் அமைச்சில் இருந்தார்.

அப்போது மட்டும் காங்கிரஸ் தூய அமைப்பாக இருந்ததென நாம் கருதுகிறோமா? பகிஷ்கரிப்பு, தடை இவைகளுக்கு மேல் ஆரோக்கியமாக ஒரு விடயத்தை அணுக நாம் என்றாவது முயற்சித்திருக்கிறோமா..

முயற்சித்திருந்தால் அவை எவை ? இந்த இரண்டில் எது நமக்கு நன்மை தந்திருக்கிறது ? இவைகளை ஒப்பிட்டு என்றாவது ஒரு கருத்துக் கணிப்பை மக்களிடையே நடாத்தியிருக்கிறோமா ? விஜய்க்கு தமிழகம் முழுவதும் ஏராளம் ரசிகர்கள் இருக்கிறார்கள். புலம் பெயர் நாடுகளிலும் அவருக்கு ஏராளம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் ஈழத் தமிழினத்திற்கு எதிரான பக்கத்தில் திருப்பும் வேலையை நாம் செய்கிறோமா என்று சிந்தித்தோமா ?

விஜய் படங்களை பகிஷ்கரிக்கப் புறப்படும் நாம் பல ஈழத் தமிழர் படங்களே பகிஷ்கரிக்கப்பட்டபோது ஏன் மௌனமாக இருந்தோம். கலைஞர் ரீவியை பகிஷ்கரிப்போம், சன் ரீவியை பகிஷ்கரிப்போமென பலர் அறிக்கை விட்டார்கள். அதை சாத்தியமாக்க முடிந்ததா ? சிறீலங்காவின் பொருட்களை பகிஷ்கரிப்போம் என்றோம் சிலோன் ரீயை நம்மால் விட முடிந்ததா? மற்ற நாடுகளி; உள்ளுர் அரசியல் விடயத்தில் நாம் தலையிடக்கூடாது என்று ஈழத்தின் தமிழ் தலைவர்கள் பலர் தொடர்ந்து கூறியுள்ளார்களே அதை நாம் ஏன் செவிமடுக்க மறுக்கிறோம். ந

மது மனதை களங்கம் இல்லாத சுயநலமற்ற இடத்தில் வைத்து இந்தக் கேள்விகளை கேட்டால் நமக்கு என்ன பதில் கிடைக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் தமிழகத்தில் இருக்கும் பத்திரிகைகள் இனியும் சிறுபிள்ளைத்தனமாக நடக்கக் கூடாது. இவ்வளவு பெரிய இழப்புக்களை சந்தித்த ஈழத் தமிழினம் இருப்பது வெளிநாடுகளில் அல்ல வவுனியா சிறைக் கொட்டடியில். நாம் சிறுபிள்ளைத்தனமாக அந்த மக்களின் வாழ்வோடு விளையாடக் கூடாது. இலங்கை மண்ணில் தமிழர்களின் வாழ்வின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்விக்கு பதில் அவர்களிடமிருந்தே வரவேண்டும் என்ற சிறிய விடயம் கூட தெரியாமல் தமிழகப்பத்திரிகைகள் இப்படி நடப்பது சரியா என்பதையும் நாம் மனதில் கேட்டுப்பார்க்க வேண்டும்.

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

Sun buys Vettaikkaran

In a move which would bring cheers among Vijay fans, Sun Pictures has acquired the release rights of ‘Vettaikkaran’ from AVM Balasubramanian and B Gurunath Meiyappan of AVM Productions.
At a time when the actor is implicitly making his political intentions clear (his recent meeting with Congress general secretary Rahul Gandhi is an example), the purchase of his forthcoming film by Sun Pictures, a part of the all-powerful media group Sun TV Network, is expected to give him immense publicity mileage.
Directed by Babu Sivan, a former associate of Dharani, Tollywood heroine Anushka is making her comeback in Kollywood with ‘Vettaikkaran’.
The debutant director, who promises that ‘Vettaikkaran’ will be a completely commercial film, with great songs, action sequences and a message, says: “I am really excited. It is such an honour to work for an AVM production starring Vijay as hero. His appeal and reach are just amazing.”
Vijay Anthony, who is scoring music for the first time for a Vijay movie, says “Usually, people say my compositions are full of energy. But, when they combine with Vijay’s energetic steps, the effect is bound to be something else.”
Thanks IndiaGlitz [Monday, August 31, 2009]

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

இளையதளபதி விஜய் அவர்களுக்கு

ஓர் கடிதம் ஈழத்து பிஞ்சு இதயங்களிலிருந்து.


தமிழ் நாட்டின் முன்னனி நடிகரான உங்களுக்கு அரசியலில் இறங்கும் ஆர்வம் வந்துள்ளது. அதனை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம். ஏனெனில் விஜயை நாம் எங்களில் ஒருவராகவே இதுவரை கருதி வருகிறோம்.

ஆனால் இன்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது விஜய் அவர்கள் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் இளைஞரணித் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்தியுடன் நடிகர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தமிழர்கள் அனைவரின் மனதையும் மிகவும் வேதனைப் படுத்தியுள்ளது இச்செய்தி உண்மையானால் உங்களுடைய தமிழ் உணர்வுள்ள தன்மானமுள்ள ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றமடைவார்கள் .
இதுவரை விஜய் அவர்களை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் போற்றியவர்கள் நாம்.

"தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் தூற்றப்படக்கூடாது தமிழர்களுக்கு எதிரானவர்கள் போற்றப்படக்கூடாது"

தமிழ் ரசிகர்களா? தமிழர் விரோத காங்கிரசா? விஜய் அவர்களே முடிவு உங்களின் கையில்.

...........................................................................................................................................................................

நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழுமூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம். என கனடா, ரொறன்ரோவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் வந்தன. இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் சேரும் பட்சத்தில் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

அரசியலில் யாரும் பங்கு கொள்ளலாம். நடிகர்களும் குடிமக்கள் என்பதால் அவர்களுக்கும் அரசியலில் பங்கு கொள்ள முழு உரிமை உண்டு. அது மக்களாட்சி முறைமைக்கு மிகவும் நல்லது. ஆனால் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் - அப்படியொரு முடிவு எடுத்தால் - அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழு மூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம்.

மத்தியில் பதவியில் இருக்கும் இந்திய காங்கிரஸ் - திமுக கட்சிகளது ஆட்சியின் போதுதான் தமிழீழத்தில் வரலாறு காண முடியாத இனப்படுகொலை அரங்கேறியது. இந்தியாதான் போர் ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, உளவு, நிதி, பயிற்சி என்று எல்லாவற்றையும் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவியது. இதனை இந்தியா அவ்வப்போது மறுத்து வந்தாலும் அண்மையில் இந்திய பாதுகாப்பு துணை அமைச்சர் பல்லம் ராஜு சிறீலங்காவின் தற்காப்புக்கு உலங்குவானூர்திகள் உட்பட ஆயுதங்களை வழங்கியதாகக் கூறியுள்ளார். உலங்குவானூர்திகள் எப்படி தற்பாதுகாப்புக்குப் பயன்படுத்தலாம் என்பது எமக்கு விளங்கவில்லை.

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் ஆகஸ்ட் 24, 2009 (திங்கட்கிழமை) "பீஷ்மா' ரக டாங்கிகளை இராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே பல்லம் ராஜு இக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த ஆயுததளபாடங்களை இரு நாடுகளிடையே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் தான் வழங்கினோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் 2007 யூன் மாதத்தில் புதுடில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி இந்தியா புலிகளை அழிக்க சிங்கள - பவுத்த இனவெறி பிடித்த இலங்கை அரசு கேட்கும் அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவோம் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியயப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் விமானப் படை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதாகச் சொன்னார். இந்த மாதம் 3 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான்படைத் தள ஓடுபாதையை விரிவாக்குவதற்கு இந்தியா மேலும் ஒரு கோடி 17 லட்சம் ரூபாவுக்கான காசோலையை இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் வழங்கியிருக்கிறார்.

இந்தியா - இலங்கை இருதரப்பு உறவுகளையும் ஆழப்படுத்துவதற்கும் உறுதிப்படுத்துவதற்குமான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டத்துக்கு இந்தியா உதவி வழங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழின அழிப்புத்தான் இந்திய காங்கிரஸ் - திமுக கட்சிகளின் குறிக்கோள் என்பது தெட்டத் தெளிவாகியுள்ளது.

இந்தப் பின்னணியில் நடிகர் விஜய் தமிழினப் படுகொலைலை அரங்கேற்றிய சோனியா காந்தியோடும் ஈழத்தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் இராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர் தமிழீழத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச இரண்டகம் என நாம் கருதுகிறோம். அதனைப் புலம்பெயர் தமிழர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
எனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட் படத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம்.
என்று அதில் குறிப்பிட்டிருந்து.

இவ் கடிதங்கள் பாதிக்குமேயானால் வருந்துகிறோம்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

Vijay and Anushka meet at an accident

It has now been confirmed that Vijay’s Vettaikaran will hit the marquee on Diwali as planned. According to the film’s director Babu Sivan, about 80 per cent of Vettaikaran has been completed but the climax scene remains to be canned yet. He said that a grand set has been erected at AVM Studios for this purpose. Babu Sivan revealed that Vijay is a young man, from a village, aspiring to become a police officer while Anushka plays a software engineer in the film. The two meet at an accident and how the lady helps him achieve his goals forms the crux of the story. The director also added that Vettaikaran is all about a woman behind a man’s success.

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

இந்தியா 2015 லேயே வல்லரசாகிவிடும்! விஜய்

அரசியலுக்கு நிச்சயம் வருவேன். ஆனால் யோசித்து நிதானமாகத்தான் வருவேன் என நடிகர் விஜய் கூறினார்.

புதுவையில் நடிகர் விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இலவச கம்ப்யூட்டர் மையம் ஒன்றையும் அவர் திறந்து வைத்தார். விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், நடிகர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மகன் சினிமாவில் அறிமுகம்! ரசிகர்கள் விஜய்யிடம் கேள்வி கேட்க, அவர் பதில் சொல்வது போல் நிகழ்ச்சி அமைக்கப்பட்டது.

உங்கள் குழந்தைகளும் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்தால் அனுமதிப்பீர்களா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விஜய் இப்படி பதில் கூறினார்: "என் குழந்தைகள் இப்போது பள்ளியில் படித்து வருகிறார்கள். எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்பது அவர்களது விருப்பம். அவர்கள் எதை விரும்பினாலும் அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். புதிய படமான வேட்டைக்காரனில் ஒரே ஒரு நிமிட நடன காட்சியில் எனது மகன் சஞ்சய் ஆடி இருக்கிறான்".

ஒரே மாதிரி கெட்டப்பில் வருகிறீர்களே... எம்ஆர்ராதா, சிவாஜி மாதிரி எப்போது மாறுபட்ட தோற்றங்களில் வருவீர்கள்?, என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "இவர்கள் அனைவரும் வயதான பிறகுதான் மாறுபட்ட வேடத்தில் நடித்து உள்ளனர். நான் தற்போது இளைஞன். கொஞ்ச நாட்கள் ஆகட்டும். அப்புறம் உங்கள் விருப்பப்படி மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறேன்",
என்றார்.

இந்தியா 2015 லேயே வல்லரசாகிவிடும்! இளைஞர்களை பார்த்து 2020-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று அப்துல்கலாம் கூறி இருக்கிறார். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு, "பெற்றோர்கள் கஷ்டப்பட்டு குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்கள் நன்றாக படித்து வெளிநாட்டில் போய் தங்கி விடுகிறார்கள். இந்தியாவில் பெற்ற கல்வியை கொண்டு வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். வெளிநாட்டிற்கு செல்வதை நிறுத்தி விட்டு நம் நாட்டில் வேலை செய்தால் இந்தியா 2015-லேயே வல்லரசாக மாறிவிடும்", என்றார் விஜய்.

தனது 50வது படம் குறித்தும் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விக்கும் விஜய் கூறிய பதில்: எனது ஐம்பதாவது படமான வேட்டைக்காரன், திருப்பாச்சி, சிவகாசி, கில்லி, போக்கிரி' படங்களை விட வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் எனது 50-வது படம் யாரும் எதிர்பாராத வகையில் பிரமாண்டமாக அமையும். நான் அரசியலுக்கு வர இஷ்டமில்லை என்று கூற மாட்டேன். எனக்கு அரசியலில் உடன்பாடு உண்டு. தற்போது எனக்கு வயது போதாது. இது அரசியலுக்குள் நுழைவதற்கான தருணம் என்று நான் நினைக்கவில்லை. அரசியலுக்கு வர நிறைய கற்று கொள்ள வேண்டும். அரசியல் மிகப் பெரிய கடல். அதில் மூழ்கி நீந்தி கடந்து, கரைக்கு வர வேண்டும். அதற்கு நான் என்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும். எனவே நிதானமாக யோசித்து அரசியலுக்கு வருவேன், என்றார் விஜய்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

Vijay inaugurates Cut It Out - images

thanks behindwoods news