திங்கள், 1 ஜூன், 2009

விஜய்யோடு ஜோடி சேரப்போகிறாரா சினேகா?


விஜய்யோட ஐம்பதாவது படத்திலே அவருக்கு ஜோடியா நடிக்கப் போவது தமன்னா! படத்திலே இன்னொரு ஹீரோயினும் இருக்கக்கூடும்ங்கிறாங்க.
அது யாருங்கிறதுதான் கேள்வி மேல கேள்வியா இருக்கு கோலிவுட்லே! சஸ்பென்ச. மனுஷனுக்குதான் மறதிங்கிற பெரிய சொத்து இருக்கே, அனுபவிக்கட்டும். அந்த ரெண்டாவது ஹீரோயினுக்கு இப்போதிலிருந்தே உன்னைப்பிடி, என்னைப்பிடி போராட்டமாம். விஜயுடன் ஜோடி போடுவதில் கியூவில் நடிகைகள். பின் சந்து வழியா ப்ரியாமணி கூட, 'உள்ளேன் ஐயா' சொல்றதா தகவல். இன்னொரு பக்கத்திலேயிருந்து ஸ்ரேயாவும் பிரஷ்ஷர் கொடுக்கிறாராங்களாம். இவங்க போட்டியெல்லாம் ஒரு பக்கம் இருக்க, 'சினேகாவை பார்க்கலாமே' என்று தளபதிகிட்டேயிருந்தே சிக்னல் கிடைச்சிருக்காம்! ஆமாவா? ஆமாவா? ஆமாவா? சினேகா பக்கம் கேள்வியை அனுப்பினால் 'பொறுத்திருந்து பாருங்க' என்று கண் சிமிட்டுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me