திங்கள், 1 ஜூன், 2009

பிறந்த நாளான ஜுன் 22 ந் தேதி வரைக்கும் பொறுத்திருங்க. நல்ல செய்தி சொல்றேன்"

கட்சி ஆரம்பிக்கிறார் விஜய் என்று கிளம்பிய கிசுகிசுவை தொடர்ந்து அவரை நேரில் சந்திக்கும் போது, அப்படியா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள் நிருபர்கள். அவர்களுக்கெல்லாம் விஜய் சொல்கிற ஒரே பதில், "என்னுடைய பிறந்த நாளான ஜுன் 22 ந் தேதி வரைக்கும் பொறுத்திருங்க. நல்ல செய்தி சொல்றேன்" என்பதுதான்.

கட்சி துவங்குகிற விஷயத்தை தவிர வேறென்ன நல்ல செய்தியை சொல்லிவிடப் போகிறார்? இன்னொரு அதிகாரபூர்வமான செய்தியும் உலா வருகிறது. கட்சியின் நிறுவன தலைவராக மட்டுமே விஜய் இருப்பாராம். நேரடியாக தலையிட மாட்டார். பொதுச்செயலாளர், தலைவர் என்ற முக்கிய பொறுப்புகளை அவரது அப்பா எஸ்.ஏ.சி பார்த்துக் கொள்வாராம்.


வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல். எழுதியிருப்பவர் கபிலன். "உணவு உடை இருப்பிடம் உழவனுக்கு கிடைக்கணும். அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கே படைக்கணும்" இந்த வரிகளை கேட்டவுடன் சந்தோஷத்தில் விஜய், கபிலனை நேரில் வரச்சொல்லி பாராட்டினாராம்.

'கிக்'கில் நடிக்கும் கில்லி

சென்னை, மே 30. தெலுங்கில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் 'கிக்' படத்தின் தமிழ் உரிமையை வாங்கிவிட்டார் எடிட்டர் மோகன்.

விஜய்-ன் 51ஆவது படத்தை இயக்கப்போகும் தனது மகன் ஜெயம் ராஜாவுக்காக இப்படத்தின் உரிமையைப் பெற்றுள்ளார் எடிட்டர் மோகன். விஜய் தற்போது நடித்துவரும் வேட்டைக்காரன் படம் முடிந்தவுடன், தனது ஐம்பதாவது படத்தில் சங்கிலி முருகன் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடையும் நிலையில், தனது 51ஆவது படத்தின் வேலையில் ஈடுபடவுள்ளார் கில்லி நடிகர் விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me