சனி, 21 ஜூன், 2008

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் by fan
வெள்ளி, 20 ஜூன், 2008

நடிகர் விஜய் மன்றத்திலும் கொடி

'வரவேண்டிய நேரத்தில் வருவேன்' என்று சொல்லியே வருடங்களை கடத்தி வரும் ரஜினிக்காக காத்திருக்காமல், விஜயகாந்த் கட்சியிலும், சரத்குமார் கட்சியிலும் தன்னை இணைத்து வருகிறார்கள் ரஜினி மன்றத்தை சேர்ந்த சில குட்டி தலைவர்கள்.
இந்த நேரத்தில், தனது மன்றத்துக்கும் ஒரு கொடியை உருவாக்கி, அதை அறிமுகம் செய்கிற விழாவையும் சென்னையில் நடத்த தீர்மானித்திருக்கிறார் விஜய். இவரது பிறந்த நாள் விழாவும் கொடி அறிமுக விழாவும் ஒரே தேதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும் என்ற வாசங்களோடு உருவாக்கப்பட்டிருக்கும் அந்த கொடியில் விஜயின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. நீலம் வெள்ளை கலரில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த கொடி.
விஜய்க்கு தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மன்றங்கள் இருக்கிறதாம். ஒவ்வொரு மன்றத்திலும் குறைந்தது 25 பேர் இருக்கிறார்கள். இவர்கள் பற்றிய விபரங்களை கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்திருக்கிறது தலைமை மன்றம். இப்படியெல்லாம் முறையாக செயல்படும் இவர்களின் எதிர்கால நோக்கம் என்னவாக இருக்கும்?
கேள்விக்கு விளக்கம் சொல்கிறார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி. இன்று சேவை மனப்பான்மையுடன் செயல்படும் இளைஞர்கள் நாளை ஒரு அமைப்பாக உருவாகி, அரசியலுக்கு வந்து சமூக அந்தஸ்தை பெற நினைத்தால் அதுவும் இயற்கையான வளர்ச்சியாக இருக்கும்! இந்த பதிலில் மேலோட்டமாக கூட அல்ல, தெளிவாகவே புரிகிறது உண்மை! இனியென்ன... வட்டம், மாவட்டம் என்ற நினைப்போடு நடைபோட வேண்டியதுதானே விஜய் ரசிகர்களே...!

ஞாயிறு, 8 ஜூன், 2008

விஜய் நடிக்கும் வில்லு


விஜய் நடிக்கும் வில்லு பட ஷூட்டிங்கில் ரசிகர்கள் மற்றும் கிராம மக்கள் மீது தனியார் பாதுகாப்பு அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில், பலரது மண்டை உடைந்தகது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.விஜய், நயனதாரா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் வில்லு. பிரபுதேவா இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங், பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தில் நடைபெறுகிறது.நெய்காரபட்டியில் உள்ள ஜமீன் பங்களாவில் நகைச்சுவை மற்றும் சண்டை காட்சிகள் போன்றவை படமாக்கப்பட்டு வருகிறது.நடிகர் விஜய் பழனியில் ஷூட்டிங்கில் உள்ளார் என்ற தகவல் அருகில் உள்ள பகுதிகளுக்கு காட்டுத் தீயாக பரவியது. இதனால் அருகில் உள்ள கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.மேலும் பள்ளி சென்று வீடு திரும்பிய கிராம குழந்தைகளும், ஷூட்டிங் நடக்கும் இடத்தில் குவிந்தனர். ரசிகர்களின் ஆர்வத்தால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் ஷூட்டிங்கிற்காக அழைத்து வரப்பட்ட தனியார் செக்யூரிட்டி அமைப்பினர் விஜய் ரசிகர்கள் மீதும், கிராம மக்கள் மீதும் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதில் அவர்களில் பலருக்கு மண்டை உடைந்தது. பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். படக் குழுவினர் மீது கிராம மக்கள் ஆத்திரத்துடன் இருப்பதால் படக்குழுவினருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தில் குருவி!


ஸ்டார் பவர் என்ன என்பதை பாக்ஸ் ஆஃபிஸில் நிரூபித்திருக்கிறது குருவி. கதை சரியில்லை, திரைக்கதை சரியில்லை மொத்தத்தில் படமே சரியில்லை என்ற விமர்சனங்களைக் கடந்து, இன்றும் சென்னை பாக்ஸ் ஆ·பிஸில் முதலிடத்தில் குருவி! காரணம் விஜய்... விஜய்... விஜய்...!கடந்தவார இறுதி வரை இரண்டரை கோடிக்கும் அதிகமாக வசூலித்து முதலிடத்தில் உள்ளது குருவி. வார இறுதி வசூலில் குருவிக்கு அடுத்த இடத்தில் சந்தோஷ் சுப்ரமணியம். அடுத்து பாண்டி. நான்காவது, யாரடி நீ மோகினி!யாரடி நீ மோகினி, சந்தோஷ் சுப்ரமணியம் படங்களின் மொத்த வசூலை இந்த வாரத்தில் குருவி முந்துவதற்கு வாய்ப்புள்ளது. அதேநேரம், குருவி பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது, இந்த கலெக்சன் ஆவரேஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 5 ஜூன், 2008

விஜய் படத்தின் பெயர் மாற்றப்படுகிறது.புதிய படம் 'வில்'


விஜய் படத்தின் பெயர் மாற்றப்படுகிறது. ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு 'சிங்கம்' என்று கம்பீரமாக பெயர் வைத்தனர்.அதிகாரப்பூர்வமாக பெயரை அறிவிக்கும் முன் ஹரி முந்திக் கொண்டார். 'சேவல்' தொடக்கவிழாவில் பேசியவர், எனது அடுத்தப் படத்தை சூர்யாவை வைத்து இயக்குகிறேன், படத்தி்ன் பெயர் 'சிங்கம்' என அறிவித்தார். சிங்கத்தை விஜய்க்கு தாரை வார்க்கமுடியாது என ஹரி திட்டவட்டமாக கூறிவிட்டதாக கேள்வி.இப்போது விஜய் படத்துக்கு 'வில்' என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா உடல் ஊனமுற்றவராக நடிக்கும் படத்தின் பெயரும் 'வில்'தான். இதில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக ஷெரின் நடிக்கிறார்.'வில்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, படத்தின் பெயர் பிரபலமான நிலையில் விஜய் படத்துக்கு 'வில்' பெயரை தேர்வு செய்த மர்மம் தெரியவில்லை. தெலுங்கில் பவன்கல்யானை வைத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கும் 'புலி' படத்தின் பெயர்மீதும் விஜய்க்கு ஒரு கண் உள்ளது. வில்லா, புலியா...? போகப் போக தெரியும்.

புதன், 4 ஜூன், 2008

welcome to www.superstarvijay.blogspot.com


செவ்வாய், 3 ஜூன், 2008