சனி, 30 ஜனவரி, 2010

ஏப்ரலில் சுறா..!- சன் அறிவிப்பு

விஜய் நடிக்கும் சுறா திரைப்படத்தை வாங்கியிருப்பது உண்மைதான் என்றும், அந்தப் படம் கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் நடிக்கும் 50 வது படம் இது.

சங்கிலி முருகன் தயாரிப்பில், எஸ்பி ராஜ்குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.சோட்டா மும்பை எனும் மலையாளப் படத்தின் தழுவலான இந்தப் படத்தில் மீனவராக வருகிறாராம் விஜய்.


இதற்காக தமிழகம், பாண்டிச்சேரி பகுதி கடற்கரையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளனர். இன்னும் பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. இவை வெளிநாட்டில் படமாக்கப்படுமாம்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாக முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது சன் பிக்சர்ஸ்.


இதுகுறித்து கூறுகையில், சுறா திரைப்படத்தை சன் பிக்ஸர்ஸ் வெளியிடுகிறது என்றும், வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை ஸ்பெஷலாக இந்தப் படம் வெளியாகும் என்றுன் சன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


ஏற்கெனவே விஜய் நடித்த வேட்டைக்காரனையும் சன் வெளியிட்டது

சனி, 16 ஜனவரி, 2010

2009 சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு வாக்களியுங்கள்.


உங்கள் அபிமான சூப்பர் ஷ்டார் வழைப்பூ கடந்த வருட காதலர் தின சிறப்பாக ‘’விஜயும் தமிழ் சினிமா வரலாறும்’’ என்ற தலைப்புடன் சிறிய பெட்டகம் ஒன்றை வெளியிட்டிருந்தது அதை பார்வையிட இங்கே க்ளிக் செய்யவும்.http://superstarvijay.blogspot.com/2009/03/nine-sentiment-as-vijays-vettaikaran.html
அதே போல் இவ் வருட காதலர் தின சிறப்பாக கலைவிருதுகள் உங்கள் உள்ளங்களை தொட வருகிறது.

கடந்த வருடம் சூப்பர்ஷ்டார் வலைப்பூ இணையத்தளம் வழங்கும் சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்களுக்கான விருதுகள் அனைத்தும்
August முதலாம் திகதி வெளியானது, ஆனால் இம்முறை புது ஆண்டு பிறந்த சூட்டோடு சூடாக திரை கலைஞர்களுக்கான விருதுகளை வெளியிட வேண்டும் என்கின்ற வேண்டுகோளுக்கும், நிபந்தனைகளுக்கும் இனங்க இவ் வருடம் காதலர் தின சிறப்பாக 14,2,2010 அன்று வெளியாக இருக்கிறது
சென்ற வருட சூப்பர்ஷ்டார் வலைப்பூ வழங்கிய விருதுகளை பார்வையிட இங்கே க்ளிக் செய்யவும்.http://superstarvijay.blogspot.com/2009/08/2008.html
வருடம் தோறும் சூப்பர்ஷ்டார் வலைப்பூ இணையத்தளம் வழங்கும் சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்களுக்கான விருதுகளுக்கு வாக்களிப்பவர்கள் ரசிகர்களாகிய நீங்கள்.ஆகவே இந் முறையும் 2009ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு ரசிகர்களுக்கு உள்ளது , நீங்கள் தேர்வு செய்யும் கலைஞர்களும் இணையத்தள சினிமா விமர்சக விருது குழுவினர்களும் ஒன்றினந்து தேர்வு செய்யும் சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்களுக்கு வழங்கவிருக்கும் இந்த சூப்பர்ஷ்டார் விருதுகளுக்கு ஆதரவு அளிக்குமாறு இணையத்தள குழுவினர்கள் கேட்டுகொள்கிறார்கள்.நான்கு வாரமாக நடைபெற இருக்கின்ற வாக்களிப்பு, முதல் இரண்டு வாரங்கள் ரசிகர்களாகிய நீங்கள் தேர்ந்தெடுக்கும் சிறந்த கலைஞர்களை tamilsuperstarawards@gmail.com முகவரிக்கு பட்டியல் இட்டு அனுப்பி வைக்கவும்.பின் இரண்டு வாரங்களும் நீங்கள் e-mail மூலம் வாக்களித்த முதல் ஐந்து கலைஞர்களை தேர்வுசெய்து poll மூலமாக நேரடியாக வாக்களிக்கலாம். ரசிகர்களுக்கான இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.நீங்கள் வாக்களிக்கவேன்டிய கலைஞர்கள்.
சிறந்த நடிகர்:
சிறந்த நடிகை:
சிறந்த புதுமுக நடிகர் (அறிமுகம்):
சிறந்த புதுமுக நடிகை:
சிறந்த இயக்குனர்:
சிறந்த பாடகர்:
சிறந்த பாடகி:
சிறந்த இசைமைப்பாளர்:
சிறந்த வில்லன்:
சிறந்த பாடலசிரியர்:
விசேட விருதுகள்:
பாரட்டுக்குரியவை:
நினைவுக்குரியவர்கள்:
சூப்பர் ஷ்டார் website குழுவினர்:

மாசி (பெப்ரபரி14/02/2010) அன்று 14ம் திகதி கலைவிருதுகள் அனைத்தும் வெளியிடப்படும்.
நன்றி

வியாழன், 14 ஜனவரி, 2010

இளைய தளபதி விஜய் அவர்களுக்கும்,அவரது ரசிகர் பெருமக்களுக்கும் இவ் இணையத்தளம் சார்பாக இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்.


வெள்ளி, 1 ஜனவரி, 2010

இளைய தளபதி விஜய் அவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் சூப்பர் ஷ்டார் விஜய் இணையத்தளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2010

இளைய தளபதி விஜய் அவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் சூப்பர் ஷ்டார் விஜய் இணையத்தளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2010

இளைய தளபதி விஜய் அவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் சூப்பர் ஷ்டார் விஜய் இணையத்தளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2010