புதன், 1 ஏப்ரல், 2009

விஜயின் வேட்டைக்காரன், ரஜினியின் எந்திரன் சூட்டிங் பட்டையை கிளப்ப ஏனைய படங்களுக்கு டான்சர்கள் பஞ்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன

ர‌ஜினியின் எந்திரன், விஜயின் வேட்டைக்காரன் இரண்டும் சேர்ந்து டான்சர்கள் பஞ்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

ராஜமுந்தி‌ரியில் விஜயின் வேட்டைக்காரன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய் ஆண்டினியின் இசையில் தயாரான பாடலை இங்கு படமாக்கி வருகிறார் வேட்டைக்காரன் இயக்குனர் பி.பாபு சிவன். ஷோபி நடனம் அமைக்கும் இந்தப் பாடலில் நூறு நடனக் கலைஞர்கள் விஜயுடன் ஆடுகிறார்கள். நூறு பேரும் முகாமிட்டிருப்பது ராஜமுந்தி‌ரியில். இருக்கிற சில நூறு நடனக் கலைஞர்களை எந்திரனுக்கும், வேட்டைக்காரனுக்கும் அள்ளிக் கொண்டு போயிருப்பதால் மற்ற படங்களுக்கு டான்சர்கள் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.. அதே ஆந்திராவில் ஹைதராபாத் ராமோ‌ஜிராவ் பிலிம் சிட்டியில் ர‌ஜினியின் எந்திரன் படத்தின் பாடல் காட்சி படமாகி வருகிறது. சாபுசி‌ரில் அமைத்திருக்கும் பிரமாண்ட அரங்கில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் ஷங்கர். படத்தில் ர‌ஜினியின் ஓபனிங் பாடலாக இது இருக்கும் என்கின்றன தகவல்கள். இந்தப் பாடல் காட்சியில் ர‌ஜினி, ஐஸ்வர்யா ராயுடன் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களும் பங்கு பெறுகிறார்கள். அனைவரும் தற்போது ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me