செவ்வாய், 14 ஏப்ரல், 2009

விஜய்க்கு இரண்டு ஜோடி

பாபு சிவன் இயக்கத்தில் வேட்டைக்காரனில் நடித்து வருகிறார் விஜய்.முதல்கட்டமாக ராஜமுந்‌‌தி‌ரியில் விஜய்யின் ஓபனிங் பாடல் படமாக்கப்பட்டது. இதில் விஜய்யுடன் அவரது மகன் சஞ்ச‌ய்யும் ஒரு வ‌ரிக்கு ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.


அருந்ததீ புகழ் அனுஷ்கா விஜய்யின் ஜோடி. இவர் தவிர இன்னொரு ஜோடியும் விஜய்க்கு இருக்கிறாராம். இரண்டாவது ஹீரோயினான அந்த வேடத்தில் நடிக்கப் போகிறவர் யார்? இரண்டாம் வ‌ரிசை நாயகிகள் அந்த வேடத்துக்காக தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், பிரகாசமான வாய்ப்பு மாடல்ஷாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.


"கே.டி". "குஞ்சுமோனின்" "காதலுக்கு மரணமில்லை" படத்தில் மீராநந்தனுடன் இன்னொரு ஹீரோயினாக அறிமுகமானவர்தான் இந்த மாடல்ஷா. முதல் படம் வெளிவரும் முன்பே விஜய் வரைக்கும் இவரது புகழ் எட்டியிருக்கிறது. வேட்டைக்காரனில் இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு இவருக்கே என்கிறார்கள்.
மாடல்ஷாவின் அதிர்ஷ்டம் எப்படி என்பது இன்னும் ஓ‌ரிரு நாளில் தெ‌ரிந்துவிடும்.


40 லட்ச ரூபாய் செட்டில் வேட்டைக்காரன்.
வேட்டைக்காரன் விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம்.

தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பாடல் காட்சிக்கும், சண்டைக் காட்சிக்கும் சுமார் 40 லட்ச ரூபாய் செட் போடப்பட்டிருக்கிறது. மொத்தம் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். மேலும், பாடல் காட்சிக்கும், சண்டைக் காட்சிக்கும் ஏராளமான ஜுனியர் நடிகர்கள் தேவைப்படுவதால் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளனர்.


அதேபோல், சண்டைக் காட்சியில் இதுவரை இல்லாத பல புது யுக்திகளை பயன்படுத்தப் போகிறார்களாம். அது என்ன என்று கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me