செவ்வாய், 14 ஏப்ரல், 2009

இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை

இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை என்று அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடிகர் விஜய் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ரே சாலையில் நடந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஏழை மாணவர்கள் 2 பேருக்கு கம்ப்யூட்டர், 10 பேருக்கு தையல் மிஷின்களை இலவசமாக வழங்கினர். பின்னர் விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.


அவர் கூறியதாவது: எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்குப் பிறகு நடிகர் விஜய்யின் ரசிகர்கள்தான் பொது நோக்கோடு ஏழை மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், தையல் மிஷின் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளா மற்றும் மும்பை என பல்வேறு இடங்களிலும் ரசிகர்கள் இருப்பது பெருமையாக உள்ளது.


விஜய்யை நான் மகனாக பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நற்பணிகள் செய்வதில் ஒரு தலைவராக செயல்பட்டு வருகிறார் விஜய். ஆனால் வருங்காலத்தில் விஜய் தேர்தலில் நிற்பாரா என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போதாக்கு எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me