செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

விஜயின் 51வது படம், விஜய்... ஜோடி அசின்!

சுறா படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 51 வது படத்துக்காக, மலையாளத்தில் சமீபத்தில் வெளியான பாடிகார்டு படத்தின் உரிமையை வாங்கியுள்ளார் விஜய். சுறா படம் கிட்டத்தட்ட முடிவுறும் கட்டத்துக்கு வந்துவிட்டது. எனவே தனது 51வது படம் குறித்த வேலைகளில் மும்முரமாக உள்ளார் விஜய். இந்தப் படத்தின் தயாரிப்பாளராக சிவராஜ் வெங்கடராஜூ என்பவர் தயாரிக்கிறார். இவர் வேறு யாருமல்ல, விஜய் நடிப்பில் 2000-ம் ஆண்டு வெளியான ப்ரியமானவளே படத்தைத் தயாரித்தவர். இந்தப் படத்துக்குப் பிறகு வேறு படமே தயாரிக்கவில்லை அவர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு விஜய் படம் மூலம் மறுபிரவேசமாகிறார்.பாடிகார்டு ஒரிஜினல் படத்தை இயக்கிய சித்திக் இந்தப் படத்தையும் இயக்குகிறார். தமிழில் விஜய்யின் இமேஜுக்கு ஏற்ப அந்தப் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதி வருகிறாராம் சித்திக்.பெரிய மனிதர்களுக்கு பாடிகார்டாகப் போவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் காமெடி கலந்த சமாச்சாரங்கள்தான் இந்தப் படம். நயன்தாரா - திலீப் நடித்து மலையாளத்தில் சராசரிப் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சித்திக் ஏற்கெனவே விஜய்யை வைத்து பிரண்ட்ஸ் படம் எடுத்தவர்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் அசின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me