ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

2009ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கான சூப்பர் ஷ்டார் கலை விருதுகள்.

இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்.

''கருவறை தொடங்கி, கல்லறை வரையும் காதல்'', உலகெங்கும் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் சூப்பர் ஷ்டார் விஜய் இணையத்தளம் சார்பாக இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்.

2009ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கான http://www.superstarvijay.blogspot.com/ வழங்கும் சூப்பர் ஷ்டார் கலை விருதுகள்.








பிடித்த நடிகர்கள்:
இந்த முடிவுகள் முழுக்க முழுக்க ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படை முடிவுகள்.
வாக்குகளின் அடிப்படையில் பிடித்த நடிகர்களின் வரிசையில் முதல் மூன்று இடத்தை விஜய், அஜித் மற்றும் சூர்யாவுக்கு கிடைத்துள்ளது.

பிடித்த நடிகைகள்:
இந்த முடிவுகள் முழுக்க முழுக்க ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படை முடிவுகள்.
வாக்குகளின் அடிப்படையில் பிடித்த நடிகைகளின் வரிசையில் முதல் மூன்று இடத்தை பிடித்த நடிகர்கைகள் அசின், தமனா மற்றும் திரிஷா கிடைத்துள்ளது, அவர்களுக்கு கிடைத்துள்ளது.

இந்த ஆண்டும் (2009) கோலிவுட் அதிகமான படங்களை தயாரித்திருக்கிறது. ஆயிரங்களில், லட்சங்களில் தொடங்கிய சினிமா இப்போது கோடிகளில் கொழுத்து கொண்டிருக்கிறது. தொழில் நுட்பத்தில் - கோடிகளில் வளர்ந்த அளவுக்கு சினிமா மாறுபட்ட கதை விஷயத்தில் இன்னமும் தேக்க நிலையிலேயே இருக்கிறது.இந்த ஆண்டு நேரடியாக தயாரிக்கப் பட்ட தமிழ் படங்கள் 124 என்கிறது எண்ணிக்கை.
சுமார் 131 படங்களை பெற்று போட்டுவிட்டு, கம்பீரமாக வணக்கம் சொல்லிவிட்டது 2009.

ஆனால் டாப் இடங்களை பிடித்த படங்கள் எவை எவை என்பதை வசூல் ரீதியாக அறிந்து கொள்வதுதானே முக்கியம்? திரையுலக வியாபாரம் தொடர்பான தமிழ்நாடு என்டர்டெயின்ட்மென்ட் பத்திரிகையின் ஆசிரியர் ராமானுஜத். அவர் சொன்ன தகவல்கள் வரிசைப்படி,
பத்து கோடி வசூலை தாண்டிய படங்கள்
அயன், ஆதவன், பேராண்மை, படிக்காதவன், கந்தசாமி, நாடோடிகள், வில்லு, உன்னைப்போல் ஒருவன், வேட்டைக்காரன்.
ஐந்து கோடியில் இருந்து பத்து கோடி வரை வசூல் செய்த படங்கள்
வெண்ணிலா கபடிக்குழு, சிவா மனசில சக்தி, தோரணை, மாசிலாமணி, நினைத்தாலே இனிக்கும்.
குறிப்பிட தக்க வித்தியாசமான கதைப்படங்கள்
அயன், பேராண்மை, பசங்க, உன்னைப்போல் ஒருவன்
யாவரும் நலம், ஈரம், நாடோடிகள், ரேணிகுண்டா
நான் கடவுள், திரு திரு துரு துரு , வெண்ணிலா கபடிக் குழு

மொழி மாற்று வசூல் படங்கள்
அருந்ததி, 2012 – ருத்ரம், Avatar

எதிர்பாராத ஆச்சயர்ங்கள்
ஆச்சர்யம் ஒன்று. மீடியாக்களும், (பார்த்த) மக்களும், சக திரையுலகமும் வாயார பாராட்டிய படமான பசங்க, விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் லாபம் ஈட்டித் தரவில்லை. ஆச்சர்யம் இரண்டு. விநியோகஸ்தர்கள் முதலில் வாங்க அஞ்சிய ‘வேலு பிரபாகரனின் காதல் கதை’ என்ற திரைப்படம், விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் பெருத்த லாபத்தை கொட்டி கொடுத்திருக்கிறது.
சுப்பிரமணியபுரத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு, பசங்க இரண்டும் சென்ற வருடத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். பசங்க சர்வதேச கவனம் பெற்று தமிழ் சினிமாவின் தரத்தை ஒருபடி மேலேற்றியது.

மொழிமாறி வந்தவையில் அருந்ததியும், அவதாரும், 2012ம் வெற்றிக்கொடி கட்டின. எக்ஸ்மென் 4 வழக்கம்போல. மொழி மாறி வந்த 36ல் மற்றவை திசை மாறியவை.
நாகேஷ், ராஜன் பி.தேவ், முரளி, ஓமகுச்சி நரசிம்மன், பாலா‌ஜி, எஸ்.வரலட்சுமி, சேதுவிநாயகம், ராம்போ ரா‌ஜ்குமார், திரைக்கதை மன்னன் லோகிததாஸ் என இழப்புகள் ஏராளம். கிடைத்ததோ இசைப் புயலின் தயவில் இரு ஆஸ்கர். பிரகாஷ்ராஜுக்கு சிறந்த நடிகர் தேசிய விருது.2009ன் ‘ஸ்டார் ஆஃப் தி இயர்,’ இயக்குனர் பன்னீர்செல்வம். அறிமுகமில்லாத பசங்களை வைத்து இவர் செய்த அதிரடி தமிழக எல்லை தாண்டி ரேனிகுண்டா வரை அதிர்கிறது. சினிமாவை எப்படி நேசிக்கணும் என்று கற்றுக் கொள்ளலாம் இவரது படம் பார்த்து. தமிழ் சினிமாவின் இளம் பசங்க நாடோடிகளின் பாதையில் ரேனிகுண்டாவை தாண்டி நடைபோட வேண்டும் என்பதே 2010ன் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.
நான் கடவுள்". படம் வெளிவரும் முன்பேயும் வெளிவந்த பின்னேயும் பல சர்ச்சைகளை சந்தித்தது. எதிர்பார்ப்பை முழுவதும் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் வழக்கமான மசாலா படங்களில் இருந்து மாறுபட்டு எடுக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆண்டு வருகின்ற 2010ஆம் ஆண்டு சினிமாவாவது தயாரிப்பாளர்களுக்கு வெற்றி தரும் ஆண்டாக அமையட்டும்.

2009ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கான இவ் விருதுகள் கலைஞர்களை சென்றடையாவிட்டாளும் நிச்சயம் ஒவ்வொரு கலைஞர்களின் ரசிகர்களை ஊக்கிவிக்கும் முகமாக சென்றடையவேன்டும்.
2009ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு இமயில் மூலமும் நேரடியாகவும் வாக்களித்த அனைத்து ரசிகர்பெருமக்களுக்கும், விருதுகளுக்கு ஆதரவும் அன்பும் தந்த அனைவருக்கும், மற்றும் விருதுகளை வாக்குகளின் அடிப்படையில் விமர்சக குழுக்களின் அடிப்படையிலும் தேர்வு செய்த விருது குழுவினர்களுக்கும் சூப்பர் ஷ்டார் "விஜய்" இணையத்தின் சார்பாக நன்றிகள்...

சென்ற வருட 2009 சூப்பர்ஷ்டார் வலைப்பூ வழங்கிய விருதுகளை பார்வையிட இங்கே க்ளிக் செய்யவும்.http://superstarvijay.blogspot.com/2009/08/2008.html

"சூப்பர் ஷ்டார் விஜய்" இணையத்தளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me