வியாழன், 20 ஆகஸ்ட், 2009

விழாவில் நடிகர் விஜய், சூர்யா

நாதஸ்வரங்கள் முழங்க ஆதவன் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. டைரக்டர் ஷங்கர் வெளியிட திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் பெற்றுக் கொண்டார். விழாவில் நடிகர் விஜய், சூர்யா, சசிக்குமார், விவேக், கவுதம் மேனன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

வாரணம் ஆயிரம் பாடலை கேட்டுட்டு “மாப்பு... ஸாங் சூப்பர்டா” என்று மெசேஜ் அனுப்பினார் விஜய். ஸ்கிரீன்லே ஆதவன் பாடல் ஓடும் போது என்னோட டான்ஸ்சை விஜய் பார்க்கிறாருங்கிற குறுகுறுப்பு இருந்திச்சு. இந்த விழாவுக்கு வந்த அவருக்கு நன்றி” என்றார் சூர்யா.
“சூர்யாவோட ஒவ்வொரு படம் வரும்போது அவரோட அசுர உழைப்பும், பிரமாண்ட வளர்ச்சியும் நல்லா தெரியுது. இந்த படம் பெரிய ஹிட் ஆகணும்” என்று வாழ்த்தினார் விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me