சனி, 1 ஆகஸ்ட், 2009

2008ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கான சூப்பர் ஷ்டார் ப்லொக் விருதுகள்.

இந்த ஆண்டும் (2008) கோலிவுட் அதிகமான படங்களை தயாரித்திருக்கிறது. ஆயிரங்களில், லட்சங்களில் தொடங்கிய சினிமா இப்போது கோடிகளில் கொழுத்து கொண்டிருக்கிறது. தொழில் நுட்பத்தில் - கோடிகளில் வளர்ந்த அளவுக்கு சினிமா மாறுபட்ட கதை விஷயத்தில் இன்னமும் தேக்க நிலையிலேயே இருக்கிறது.இந்த ஆண்டு நேரடியாக தயாரிக்கப் பட்ட தமிழ் படங்கள் 115 என்கிறது எண்ணிக்கை.இதில் மாறுபட்ட கதை, திரைக்கதை கொண்ட படங்கள் 12, 1. பிரிவோம் சந்திப்போம், 2. இந்திரலோகத்தில் நா. அழகப்பன், 3. கண்ணும் கண்ணும், 4. அறை எண் 305ல் கடவுள், 5. பூ, 6. ராமன் தேடிய சீதை, 7. ஆயுதம் செய்வோம், 8. பொம்மலாட்டம், 9. பொய் சொல்லப் போறோம், 10. வாரணம் ஆயிரம், 11. அக்கு, 12.நேபாளி.நூறு நாள் ஓடிய படங்கள் பத்து. 1.பொல்லாதவன், 2.அஞ்சாதே, 3.யாரடி நீ மோகினி, 4.சந்தோஷ் சுப்ரமணியம், 5.தசாவதாரம், 6.சுப்ரமணியபுரம், 7.குருவி, 8.சரோஜா, 9.ஜெயம்கொண்டான், 10.பொய் சொல்லப் போறோம் இதில் நூறு நாள் ஓட்டப்பட்ட படங்கள் பத்து. 1.நாயகன், 2.வல்லமை தாராயோ, 3.காதலில் விழுந்தேன், 4.தெனாவட்டு, 5.பாண்டி, 6.அரசாங்கம், 7.குசேலன், 8.உளியின் ஓசை, 9.பீமா, 10.சத்யம்.ஐம்பது நாள் ஓடிய படங்கள் 10. 25 நாள் ஓடிய படங்கள் 15, ஒரு வாரம் ஓடிய படங்கள் 20, ஒரு வாரம் ஓட்டப்பட்டப் படங்கள் 25, ஓரிரு நாட்களில் தியேட்டரை விட்டு ஓட்டம் எடுத்தப் படங்கள் 15.இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள்.1. நடிகர் சிபி-ரேவதி (காதல் திருமணம்) 2. இமையமைப்பாளர் டி.இமான்-மோனிகா3. நடிகை விந்தியா-கோபி(பானுப்பிரியாவின் தம்பி)4. நடிகை ரூபஸ்ரீ-தினேஷ்5. நடிகை கோபிகா-அஜீலைஸ்6. நடிகை ஸ்ரேயா ரெட்டி-விக்ரம் கிருஷ்ணா (நடிகர் விஷாலின் அண்ணன்)7. இயக்குனர் ஏ.ஆர்.புவனராஜா-தனலட்சுமி8. நடிகை கனிகா-ஷியாம் (நடிகை ஜெயஸ்ரீயின் தம்பி)9. இயக்குனர் கிருஷ்ணா-பூர்ணிமா10. நடிகர் செந்திலின் மகன் மணிகண்டபிரவு11. இயக்குனர் திருமலை-நதியா12. பாடலாசிரியர் யுகபாரதி-அன்புச்செல்விஇந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இருந்து தமிழுக்கு மாற்றம் பெற்று வந்த படங்கள் 60. இதில் இந்தியில் இருந்து 3 படங்கள் தெலுங்கில் இருந்து மொழி மாற்றம் பெற்ற படங்கள் 11, மலையாளத்திலிருந்து மொழி மாற்றம் பெற்றவை 7, கன்னடத்திலிருந்து ஒரு படம், ஆங்கிலத்தில் இருந்து டப்பிங் செய்யப்பட்ட படங்கள் 37 இந்த ஆங்கில மொழி மாற்று படங்களால் தமிழ் படங்கள் சில வர்த்தக ரீதியாக தோல்வியை தழுவ நேர்ந்தது என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு உண்டு. இந்த ஆண்டு அறிமுகமான புதுமுக நடிகைகள் 33 அழகிகள் தேறியவர்கள் 10 நடிகைகள் இருக்கலாம். அதே போன்று அறிமுகமான புதுமுக நடிகர்கள் 25 பேர், இதில் தேறியவர்கள் இரண்டு மூன்று பேர்தான். இந்த ஆண்டு திரையுலகை விட்டு மறைந்தவர்கள் 1. இயக்குனர் ஸ்ரீதர், 2. நடிகர் ரகுவரன், 3. வில்லன் நடிகர் நம்பியார், 4. தெலுங்கு நடிகர் சோபன் பாபு (ஜெயலலிதாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர்), 5. குணால், 6. எழுத்தாளர் சுஜாதா, 7. பழம்பெரும் நடிகை டி.பி. முத்துலட்சுமி, 8. குணசித்ர நடிகர் பூர்ணம் விஸ்வநாதன், 9. குணசித்திர நடிகை தேனி குஞ்சராம்பாள், 10. ஒளிப்பதிவாளர் சி.ஜே.ரவி, 11. இயக்குனர் கோகுல கிருஷ்ணன், 12. ஏ.வி.எம். செட்டியாரின் மனைவி ராஜேஸ்வரி அம்மாள், 13. நடிகர் பிரபுதேவாவின் மூத்த மகன் விஷால், 14. குன்னக்குடி வைத்தியநாதன். தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இராம. நாராயணனும், இயக்குனர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு சினிமா உலகம் சில சாதனைகள் செய்திருந்தாலும், கண்ட சோதனைகள் பல பல. நேரடி மொழிபடங்கள் பொருளாதார ரீதியாக பெரும் வீச்சியை கண்டது. (மொழிமாற்றுப் படங்களான ஆங்கில டப்பிங் படங்கள் நல்ல சம்பாதித்துள்ளன) வேகமாக புறப்பட்டு வந்த கார்பரைட் கம்பெனிகள் வந்த வேகத்தில் தோல்வியை தழுவியது. உச்ச நடிகர் ரஜினியின் குசேலன் காலை வாரி விட்டது. இதில் பெரும் லாபம் கண்டவர்கள் நடிகர்கள்தான். இப்போது மட்டுமல்ல சினிமா தோன்றிய காலம் முதல் நஷ்டமடையாதவர்கள் நடிகர் நடிகைகள்தான். கடந்த ஆண்டுகள் வரை மூணு, நாலு கோடிகளை தொட்டிருந்த விஜய், அஜீத், விக்ரம், சூர்யா போன்றவர்களின் சம்பளம் பத்து கோடிகளை தொட வைத்து விட்டது. இந்த ஆண்டு வருகின்ற 2009ஆம் ஆண்டு சினிமாவாவது தயாரிப்பாளர்களுக்கு வெற்றி தரும் ஆண்டாக அமையட்டும்.
2008ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கான இவ் விருதுகள் கலைஞர்களை சென்றடையாவிட்டாளும் நிச்சயம் ஒவ்வொரு கலைஞர்களின் ரசிகர்களை ஊக்கிவிக்கும் முகமாக சென்றடையவேன்டும்.
2008ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு இமயில் மூலமும் நேரடியாகவும் வாக்களித்த அனைத்து ரசிகர்பெருமக்களுக்கும், விருதுகளுக்கு ஆதரவும் அன்பும் தந்த அனைவருக்கும், மற்றும் விருதுகளை வாக்குகளின் அடிப்படையில் விமர்சக குழுக்களின் அடிப்படையிலும் தேர்வு செய்த விருது குழுவினர்களுக்கும் சூப்பர் ஷ்டார் இணையத்தின் உரிமையாளர்கள் இளையதளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக நன்றிகள்...
சூப்பர் ஷ்டார் விஜய் ரசிகர்கள்.
01/08/2009
THANKS LOT

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

dubuuku

கருத்துரையிடுக

talk me