புதன், 13 மே, 2009

விஜய்யின் 50வது படம்நடிகர் விஜய்யின் 50வது படத்தை யார் யாரோ இயக்கப் போவதாகவும், தயாரிக்கப் போவதாகவும் தினம் ஒரு செய்தி வந்து கொண்டிருந்தன.

ஆனால், தற்போது சங்கிலி முருகன் தயாரிக்கிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது. இவர் ஏற்கனவே விஜயை வைத்து 'காதலுக்கு மரியாதை' என்ற படத்தை தயாரித்தவர். விஜய் ஒரு சிறந்த நடிகர் என்று அனைவராலும் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்ட படமும் ஆகும்.

இப்படத்தை இயக்கப் போவது ஜெயம் ராஜா. மேலும் சங்கிலி முருகன் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் படமான 'அழகர் மலை' படத்தின் இயக்குனர் எஸ்.பி. ராஜ்குமார்தான் விஜயின் 50வது படத்துக்கு வசனம் எழுதவிருக்கிறார். இவர் ஏற்கனவே 'என் புருஷன் குழந்தை மாதிரி' படத்தை இயக்கியவர்.

காதலுக்கு மரியாதை போல இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி அடையும்.

1 கருத்து:

கார்க்கி சொன்னது…

நன்றி நண்பா.. நானும் விஜய் ரசிகன் தான்.. நல்லாயிருக்கு இந்த பிளாக்

கருத்துரையிடுக

talk me