புதன், 13 மே, 2009

விஜய்யின் 50வது படத்தில் விஜய்க்கு ஜோடியாகிறார் தமன்னா.படு வேகமாக முன்னணி நடிகையாகி விட்டார் தமன்னா. அவருடன் ஜோடி போட ஹீரோக்களிடையே ஏகப்பட்ட ஆதரவும், ஆர்வமும் அதிகரித்திருக்கிறதாம்.
இந்த நிலையில் விஜய்யின் ஜோடியாகிறார் தமன்னா. விஜய் நடிக்கப் போகும் அவரது 50வது படத்தில் தமன்னாதான் ஜோடியாம். படிக்காதவன், அயன் என இரு ஹிட் படங்களைக் கொடுத்ததால் தமன்னாவுக்கு இப்போது ஏகப்பட்ட டிமான்ட். கை நிறையப் படங்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் கண்டேன் காதலை, பையா ஆகியவை பெரிய பட்ஜெட் படங்கள்.

அடுத்த வாரம் விஜய் படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறாராம் தமன்னா. இப்படத்துக்காக பெரிய சம்பளத்தைத் தருகிறார்களாம்.

சங்கிலி முருகனின் மீனாட்சி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறது. எனவே கண்டிப்பாக இசைஞானி இளையராஜாதான் இசையமைப்பார் எனத் தெரிகிறது.

இதே நிறுவனம்தான் விஜய்க்கு பெரும் ஹிட்டாக அமைந்த காதலுக்கு மரியாதை படத்தைக் கொடுத்த பட நிறுவனம் என்பது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me