புதன், 24 டிசம்பர், 2008

'வேட்டைக்காரன்' விஜய்க்கு ஜோடி அனுஷ்கா'வேட்டைக்காரன்' ஹீரோயின் விஷயத்தில் ஒத்தையா ரெட்டையா போட்டுக் கொண்டிருந்த இயக்குனர் ஒரு வழியாக கதாநாயகியை முடிவுசெய்து விட்டார்.
ஏவி.எம்.பாலசுப்ரமணியம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் 'வேட்டைக்காரன்'. தரணியின் உதவியாளர் பாபுசிவன் இயக்கும் இப்படத்தின் தலைப்பு எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பாக இருந்தாலும் அதற்கும் இந்த கதைக்கும் சம்பந்தமில்லை.

இதில் விஜய் ஜோடியாக நடிக்க தெலுங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இலியானாவிடம் பேசப்பட்டது. ஆனால் கையில் பத்துபடங்கள் இருப்பதாக இரண்டு கை விரல்களையும் விரித்துக்காட்டிய இலியானா, கால்ஷீட் இல்லையென கழன்று கொண்டார்.

இலியானாவுக்கு நிகராக யாரை போடலாம் என விஜய்யுடன் கலந்துபேசிய இயக்குனர் மண்டை குழம்பிபோனதுதான் மிச்சம். இதற்கிடையே அனுஷ்காவை தனக்கு ஜோடியாக போடும்படி விஜய்யிடமிருந்து இயக்குனருக்கு அன்பு கட்டளை பறந்தது. அனுஷ்காவை அணுகியபோது அவரும் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

இவர் ஏற்கனவே 'இரண்டு' படத்தில் நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me