புதன், 31 டிசம்பர், 2008

ஜன. 12 முதல் வில்லு

விஜய் ரசிகர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. ஆம், ஜனவ‌ரி 12‌ம் தேதியே திரைக்கு வருகிறது வில்லு.
அழகிய தமிழ் மகன், குருவி என இரு சுமார் படங்களுக்குப் பிறகு வெளிவரும் படம் என்பதால், வில்லுவின் ‌ரிசல்டுக்கு ஆவலாக காத்திருக்கிறார் விஜய். போக்கி‌ரி படம் மூலம் விஜய்க்கு மெகா ஹிட் கொடுத்த பிரபுதேவா வில்லுவை இயக்கியிருப்பது வில்லுவின் வெற்றி சதவீதத்தை அதிக‌ரித்துள்ளது. இரண்டு நாள் முன்பு படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினர். படத்தின் சில காட்சிகளுக்கு அவர்கள் ஆட்சேபம் தெ‌ரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயுடன் நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேரும் படம் வில்லு என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் குருவி, அழகிய தமிழ்மகன் படங்கள் சென்னையில் மட்டும் பதினைந்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டன. இது படம் ஓடும் நாட்களை குறைக்கும் என்பதால் வில்லு வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் குறைவான திரையரங்குகளில்தான் வில்லு வெளியாக இருப்பது, படத்தை முதல் நாளே பார்த்துவிடத் துடிக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமான செய்திதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me