செவ்வாய், 11 நவம்பர், 2008

வில்லு படத்தில் பில்லா பாடல்

இளைய தளபதி விஜய் நடிக்கும் வில்லு படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சூப்பர் ஹிட் பாடலான மை நேம் இஸ் பில்லா ரீமிக்ஸ் ஆக இடம் பெறுகிறது.
வடிவேலுவும், நயனதாராவும் இந்தப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனராம். விஜய், நயனதாரா ஜோடி போட்டு நடித்து வரும் படம் வில்லு. பிரபுதேவாவும், விஜய்யும், போக்கிரி படத்திற்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். விஜய் ரசிகர்களை பக்காவாக திருப்திப்படுத்தும் வகையில் அனைத்து அம்சங்களையம் சேர்த்து படத்தை படா பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார்கள். படத்தில் வடிவேலுவுக்கு செமத்தியான காமெடி கேரக்டர். அவருக்கு ஒரு பாடலையும் வைத்துள்ளனர். ஏற்கனவே போக்கிரி படத்தில் ஆசினுடன், சுட்டும் விழிச் சுடரே பாடலுக்கு அசத்தல் கெட்டப்பில் ஆட்டம் போட்டு கலக்கல் காமெடி செய்திருந்தார் வடிவேலு. படத்தின் டாப் கலக்கல்களில் இதுவும் ஒன்றாக அமைந்திருந்தது. அதே பாணியில் வில்லு படத்திலும் ஒரு ரீமிக்ஸ் பாடலை வைத்துள்ளனராம் வடிவேலுவுக்காக. பில்லா படத்தில் இடம் பெற்ற மை நேம் இஸ் பில்லா பாடலை ரீமிக்ஸ் செய்து, வடிவேலுவை இதில் ஆட விட்டுள்ளனராம். போக்கிரியில் நாயகி ஆசின் ஆடியது போல, இப்பாடலில் நயனதாரா வடிவேலுவுடன் ஆடியுள்ளாராம். படத்தின் ஹைலைட் அம்சமாக இந்தப் பாடல் இடம் பெறுமாம். பில்லா கெட்டப்பில் படு சூப்பரான காஸ்ட்யூமுடன் நயனதாராவுடன் ஆட்டம் போட்டுள்ளாராம் வடிவேலு. சமீபத்தில் இந்தப் பாடலை ஏவி.எம். ஸ்டுடியோவில் படமாக்கியபோது அங்கு இருந்த அனைவராலும் சிரிப்பை அடக்க முடியவி்ல்லையாம் - வடிவேலுவின் காமெடி கலாட்டாவைப் பார்த்து.
படம் சூப்பர் ஹிட் என்று இப்போதே தொடை தட்டி சொல்கிறது வில்லு பட யூனிட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me