வியாழன், 16 அக்டோபர், 2008

Virulent Vijay and Hilarious Vadivelu in Bangkok!! gallery

Villu and co flew to Bangkok last week for shooting some vital scenes. Vadivelu is the man behind comedy in Villu and more interesting news is that he is very busy delivering a wide range of hilarious performance for comedy ingredient of the movie. His comedy in Seval releasing on Deepavali is certain to be a grand success.

New Villu stills from Kumudam
மீண்டும் ஒரு கில்லியடிப்பார்!
தளபதிக்கு 50 வது படம் வரப்போகிறது. இந்த படங்களை யார் இயக்குவது? யார் தயாரிப்பது? என்ற கேள்விகள் இரு தரப்பு ரசிகர்களையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய்க்கு கில்லி என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஏ.எம்.ரத்னமும் 50 வது பட க்யூவில் நிற்கிறாராம்.
தற்போதைய நிலைமை அவ்வளவாக சரியில்லாத ஏ.எம்.ரத்னம், பீமாவுக்கு பின் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். பட்ஜெட்டில் துண்டு விழுகிற மாதிரி படங்களை தயாரித்தவர்கள் மத்தியில் பட்ஜெட்டில் குண்டு விழுகிற மாதிரி படங்களை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம். இவரது பிரமாண்டத்தை மிஞ்சுகிற வண்ணம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட இன்னும் படங்களை தயாரிக்கவில்லை. அப்படிப்பட்டவர், மீண்டும் விஜயை சந்தித்து கால்ஷீட் கேட்டாராம்.
‘நிச்சயம் ஒரு படத்தில் மீண்டும் இணைவோம்’ என்ற வாக்குறுதியை மட்டும் இப்போதைக்கு கொடுத்திருக்கும் விஜய், நல்ல இயக்குனரோடு வாருங்கள் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறாராம். விஜய்க்கு பொருத்தமாக ஒரு கதையை கேட்டு வருகிறார் ரத்னம். அது அமைந்தால், மீண்டும் ஒரு கில்லியடிப்பார்! ஒருவேளை அது விஜயின் 50 வது படமாக கூட இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me