செவ்வாய், 7 அக்டோபர், 2008

``குருவி, வியாபார ரீதியில் மிகப்பெரிய வெற்றி படம்'' `தேவி' தியேட்டர் அதிபர் சொல்கிறார்

இந்த வருடம் திரைக்கு வந்த தமிழ் படங்களில், வியாபார ரீதியில் மிகப்பெரிய வெற்றி படம், குருவி. இந்த பெருமை முழுவதும் அந்த படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினையே சேரும்'' என்கிறார், `தேவி' தியேட்டர் அதிபரும், நிர்வாக இயக்குனருமான வரதராஜன்.
இவர், மேலும் கூறுகிறார்:-
``குருவி, உதயநிதிக்கு முதல் படம். ஆனால் அனுபவப்பட்ட தயாரிப்பாளர் போல் படத்துடன் அதிக ஈடுபாடு வைத்திருந்தார். படப்பிடிப்புக்கு தினமும் வந்துவிடுவார். அங்கு வேலை எப்படி நடக்கிறது? என்று பார்வையிடுவார். அதனால்தான் அவர் ஒரு சிறந்த பட தயாரிப்பாளராக வெற்றி பெற்று இருக்கிறார். சொன்ன தேதியில் படத்தை `ரிலீஸ்' செய்தும் விட்டார்.
நல்ல அனுபவஸ்தர்களை உடன் வைத்துக்கொண்டு, படத்தை விளம்பரம் செய்வதிலும் கலக்கி விட்டார்.
எங்கள் தியேட்டரில் விஜய் நடித்த `கில்லி,' 208 நாட்கள் ஓடியது. போக்கிரி 187 நாட்களும், சிவகாசி 115 நாட்களும் ஓடின. `குருவி' 150 நாட்கள் ஓடியிருக்கிறது. மற்ற விஜய் படங்கள் எல்லாம் நகரில் 4 அல்லது 5 தியேட்டர்களில்தான் `ரிலீஸ்' ஆகும். ஆனால், `குருவி' 10 தியேட்டர்களில் `ரிலீஸ்' செய்யப்பட்டு இருந்தது.
ஒரு படம் 10 தியேட்டர்களில் திரையிடப்பட்டு, 150 நாட்கள் ஓடியது, இதுதான் முதல்முறை. தமிழ்நாடு முழுவதும் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் `குருவி' லாபம் சம்பாதித்து கொடுத்து இருக்கிறது.
பட தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயர் கிடைக்க வேண்டும்... வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் பணம் சம்பாதிக்க வேண்டும்...என்ற நோக்கத்தில், ஒரு நல்ல படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து படம் தயாரிக்க வேண்டும்.'' இவ்வாறு வரதராஜன் கூறினார்.
சக்சஸ் தயாரிப்பாளர்களின் லிஸ்டில் தன்னையும் ஒருவராக சேர்த்துக்கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்


சக்சஸ் தயாரிப்பாளர்களின் லிஸ்டில் தன்னையும் ஒருவராக சேர்த்துக்கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இவரது ரெட்ஜெயண்ட் மூவிஸின் முதல் தயாரிப்பான 'குருவி' 150 நாட்களை தொட்டுவிட்டது.
இதற்கான வெற்றிவிழா சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடந்தது. தாத்தா முதல்வர், அமைச்சர் அப்பா என்ற பெரிய பின்னணி இருந்தும், அந்த ஆர்ப்பாட்டங்களின்றி விழாவை நடத்தினார் உதயநிதி. ஆதரவற்றோர், ஊனமுற்றோர்களுக்கு பல லட்சங்கள் நிதியுதவி அளித்து வெற்றி விழாவை அர்த்தமுள்ளதாக்கினார்.
இயக்குனர் பாலசந்தர், தயாரிப்பாளர்கள் சங்க்த தலைவர் இராம.நாராயணன் முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டு படத்தின் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு வெற்றி கேடயம் வழங்கி வாழ்த்தினர்.
விழா தொடங்கி அரைமணி நேரம் தாமதமாக வந்த த்ரிஷா, "ஐதராபாத்திலிருந்து வந்தேன், அதான் லேட். ஸாரி" என்றபடி மேடையில் அமர்ந்தார். வாழ்த்துரை வழங்கிய பாலச்தரின் பேச்சு விநியோகஸ்தர்கள் மத்தியில் பாஸ்பரஸாய் பற்றியது.

அவரது பேச்சு வருமாறு :-

"நான் இந்தப் படத்தை திருட்டு வி.சி.டியில்தான் பார்த்தேன். அப்போது எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. என் படத்தையும் இப்படி திருட்டு வி.சி.டி.யில் பார்த்தால் என்னாவது? என்ற கேள்விதான், அந்த பயததிற்கு காரணம்.
திருட்டு வி.சி.டிக்காரர்களை ஓடிப்பிடிக்கும் வம்புகளை தவிர்த்துவிட்டு, படம் வெளிவந்து மூன்று மாதத்திற்கு பிறகு டி.வி.டி.க்கள் வெளியிடும் உரிமையை விற்கலாம்.
பாலசந்தர் இவ்வாறு பேசியபோது அரங்கில் இருந்த விநியோகஸ்தர்களில் சிலர், "படத்தை காசுகொடுத்து வாங்கும் விநியோகஸ்தர்களின் நிலையை கொஞ்சம்கூட யோசிக்காமல் பேசுறாரே இவர்" என முணுமுணுக்கத் தொடங்க, அந்த இடத்தில் சின்ன சலசலப்பு ஏற்பட்டது.

2 கருத்துகள்:

TAMILKUDUMBAM சொன்னது…

போட்டோ எல்லாம் சூப்பர்

இவன்
WWW.TAMILKUDUMBAM.COM
பாருங்க ரசிங்க நீங்களூம் அசத்துங்க

கிரி சொன்னது…

விஜய் சிறு வயது படங்கள் நல்லா இருக்கு :-)

கருத்துரையிடுக

talk me