செவ்வாய், 7 அக்டோபர், 2008

விஜய்,அஜீத் - "50:50" படங்கள

தமிழ் திரையுலகின் இரு பெரும் இளைய தலைமுறை நடிகர்களான விஜய்யும், அஜீத்தும், தங்களது ஐம்பதாவது படத்தை நோக்கி வேகமாக போய்க் கொண்டுள்ளனர்.
இன்னும் 2 படங்களில் இருவரும் அரை சதம் போடவுள்ளனர். அஜீத் தற்போது நடித்து வரும் ஏகன் அவருக்கு 48வது படமாகும். அதேபோல விஜய் தற்போது நடித்து வரும் வில்லு அவருக்கு 48வது படமாகும். ஏகனை ராஜு சுந்தரம் இயக்குகிறார். வில்லுவை அவரது தம்பி பிரபுதேவா இயக்குகிறார் என்பது ஆச்சரியமான ஒரு பொருத்தமாகும்.
அஜீத் தனது 49வது படமாக சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிக்கவுள்ளார். 50வது படத்தை யாருக்கு இயக்கக் கொடுப்பது என்பதை இதுவரை அவர் முடிவு செய்யவில்லையாம். இந்தப் படம் பிரமாண்டமாக இருக்கும் என்று அஜீத் தரப்பு உற்சாகமாக கூறுகிறது.
அதேபோல விஜய் தனது 49வது படமாக நடிக்கவிருப்பது வேட்டைக்காரன். விஜய்யும் 50வது படத்திற்கான இயக்குநரை இன்னும் முடிவு செய்யவில்லையாம்.
இப்படி இரு பெரும் இளைய தலமுறை சூப்பர் ஸ்டார்களும் தங்களது 50வது படங்களை நெருங்குவதையொட்டி இருவரின் ரசிகர்களும் அதை உற்சாகமாக கொண்டாட காத்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me