புதன், 31 மார்ச், 2010

பிரமான்ட அரங்கில் இளையதளபதி விஜயின் 50வது திரைப்பட இசையை பிரபல முன்னணி கலைஞர்களின் முன்னிலையில் வெளியீடு,


இளைய தளபதி விஜயின் 50வது படம் என்பதால் விஜயின்45வது படத்திலிருந்தே எதிர்பார்ப்புகள் எகிறுகின்றன, அது மட்டுமல்ல சன் டீவியின் வெளியீடு, விஜய்க்கு திருப்புமுனையை கொடுத்த காதலுக்கு மாரியாதை படத்தின் தயாரிப்பாளர் என்பதாலும் சுறா படத்தின் வெளியீட்டு நாளை எதிர் நோக்கி உள்ளது இவ் இளைஞ உலகம் எனபதில் சந்தேகம் எதுவும் இல்லை.

சுறா ஆடியோ வெளியீட்டு விழா சென்னை லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் நடந்தது.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் - தமன்னா, ரவிகுமார், நா.முத்துகுமார், ஜெயம் ரவி, பார்த்தீபன், அமீர், விஜய் ஆன்டனி, இயக்குனர் பேரரசு, சன் குடும்பம், இயக்குனர் ராஜ் குமார், பாடகர்கள் வடிவேலுவுடன் என்று பல முன்னணி கலைஞர்கள் வடிவேலுவுடன் திரையுலக பிரமுகர்கள் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தார்கள்.

பாடல்களை திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது.
சன் தொலைக்காட்சிக்காக நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுறா படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. முதலில் ஏப்ரல் 14-ம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இப்போது ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்துக்கு தள்ளிப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me