புதன், 24 மார்ச், 2010

மார்ச் 26-ல் சுறா இசை வெளியீடு!


விஜய்யின் 50 வது படம் சுறா இசை வெளியீடு வரும் மார்ச் 26-ம் தேதி நடக்கிறது.

மிகச் சரியாக திட்டமிடப்பட்டு, விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது சங்கிலி முருகனின் தயாரிப்பான சுறா. விஜய்யுடன் இவர் இணைவது இரண்டாவது முறை. முதல் படம் காதலுத்து மரியாதை.

இந்தப் படம் விஜய்யின் திரையுலக வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும் என்கிறார் சங்கிலிமுருகன்.

இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது. விஜய் - தமன்னா பாடல் காட்சியை நியூஸிலாந்தில் படமாக்கி வருகிறார் இயக்குநர் எஸ்பி ராஜ்குமார். இன்னும் ஒரு வாரத்தில் சென்னை திரும்புகிறது படப்பிடிப்புக் குழு. அடுத்த நாளே இசை வெளியீட்டு விழாவுக்கு தேதி குறித்துள்ளனர்.

இதற்கிடையே படத்தின் ஆடியோ ரிலீஸூக்கு இப்போதே தேதி குறித்துவிட்டனர்.

மார்ச் 26-ம் தேதி சத்யம் வளாகத்தில் சுறா ஆடியோ ரிலீஸ் நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me