சனி, 24 ஏப்ரல், 2010
விஜயின் சிறந்த படங்களுக்கு வாக்களியுங்கள், முடிவுகள் அணைத்தும் சுறா வெளியீட்டு தினமன்று பிரமாண்ட வெளியீடாக வெளியிடப்படும், இன்னும் சில நாட்களில்!
வியாழன், 22 ஏப்ரல், 2010
புதன், 7 ஏப்ரல், 2010
மிக விரைவில் உங்கள் இதய நாயகன் இளையதளபதியின் நாளையதிர்ப்பு முதல் இன்றையதீர்ப்பு வரை மேல்பார்வை
இளையதளபதி விஜயின் 50வது பிரமாண்ட தயாரிப்பில் இன்னும் சில நாட்களில் வெளிவர இருக்கின்றது, இதனை முன்னிட்டு உங்கள் அபிமானம் பெற்ற இவ் வழைப்பூவில் சுறா வெளியீட்டு தினமன்று மிக பிரமாண்டமாக விஜயின் அகரமும் சிகரமும் என்ற தலைப்பில் விஜயின் சினிமா வெற்றியும் அவரின் சினிமா வாழ்க்கையும், 50திரைப்படங்களும் பற்றிய மேல்பார்வையாக மிக விரைவில் தயாராகி வருகிறது, இந்த பதிவுக்கு ஒத்துலைக்கும்மாறு ரசிகர்பெருமக்களை இவ் வழைப்பூ வேண்டி நிற்கிறது. மேல் கானும் விஜயின் திரைப்படங்களுக்கு வாக்களியுங்கள்.
திங்கள், 5 ஏப்ரல், 2010
விஜய்யின் புதிய படம் காவல்காரன்!



விஜய்யின் 51 வது படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜாவா, சித்திக்கா என்ற பெரும் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இன்று (ஏப்ரல் 5) காரைக்குடியில் தனது படப்பிடிப்பை துவங்கிவிட்டார் சித்திக்
விஜய்யின் 51 வது படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜாவா, சித்திக்கா என்ற பெரும் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இன்று (ஏப்ரல் 5) காரைக்குடியில் தனது படப்பிடிப்பை துவங்கிவிட்டார் சித்திக். விஜய் நடிக்கும் இந்த படத்தின் பெயர் காவல் காரன்.
பணக்கார அசினுக்கு பாடிகார்டாக வேலைக்கு சேருகிற விஜய், எப்படி அசினை கவர்கிறார் என்பதுதான் கதை. ஆனால் படத்தில் வேறொரு பெண்ணை கைப்பிடிப்பாராம் விஜய். அந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் பிறப்பதாக போகிறது படம். க்ளைமாக்சில் பத்து வயது மகனுக்கு அப்பாவாகவும் நடிக்கிறாராம் விஜய்.
பணக்கார அசினுக்கு பாடிகார்டாக வேலைக்கு சேருகிற விஜய், எப்படி அசினை கவர்கிறார் என்பதுதான் கதை. ஆனால் படத்தில் வேறொரு பெண்ணை கைப்பிடிப்பாராம் விஜய். அந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் பிறப்பதாக போகிறது படம். க்ளைமாக்சில் பத்து வயது மகனுக்கு அப்பாவாகவும் நடிக்கிறாராம் விஜய்.
விஜயுடன் இனைந்து நடித்த தமிழ் படங்கள் அசினுக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. காவல் காரனும் மாபெரும் வெற்றியை கொடுக்க காத்திருக்கிறது அசினின் மாக்கெற்
சித்திக் தமிழில் இயக்கும் படங்களில் வடிவேலு நிச்சயம் இருப்பாரல்லவா? காவல் காரனிலும் வைகைப்புயல் உண்டு. அசினை கண்காணிக்கிற கேரக்டரில் விஜய். விஜய்யை கண்காணிக்கிற கேரக்டரில் வடிவேலு. இவர்கள் போக ஒரு மிக முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் ராஜ்கிரண். அசினின் அப்பா இவரேதானாம்!
பட தலைப்பிலே கதைகள் கட்சிதமாய் இருக்கும் என்பதையும், விஜய் மாற்று வேடங்கள் போடுவதாகவும், கதை அமைந்திருக்கிறது என்று, பிரன்ட்ஷ் படத்தை இயக்கிய மலையால இயக்குனர் சித்திக் கூறியுள்ளார்.
புதன், 31 மார்ச், 2010
பிரமான்ட அரங்கில் இளையதளபதி விஜயின் 50வது திரைப்பட இசையை பிரபல முன்னணி கலைஞர்களின் முன்னிலையில் வெளியீடு,






இளைய தளபதி விஜயின் 50வது படம் என்பதால் விஜயின்45வது படத்திலிருந்தே எதிர்பார்ப்புகள் எகிறுகின்றன, அது மட்டுமல்ல சன் டீவியின் வெளியீடு, விஜய்க்கு திருப்புமுனையை கொடுத்த காதலுக்கு மாரியாதை படத்தின் தயாரிப்பாளர் என்பதாலும் சுறா படத்தின் வெளியீட்டு நாளை எதிர் நோக்கி உள்ளது இவ் இளைஞ உலகம் எனபதில் சந்தேகம் எதுவும் இல்லை.
சுறா ஆடியோ வெளியீட்டு விழா சென்னை லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் நடந்தது.
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் - தமன்னா, ரவிகுமார், நா.முத்துகுமார், ஜெயம் ரவி, பார்த்தீபன், அமீர், விஜய் ஆன்டனி, இயக்குனர் பேரரசு, சன் குடும்பம், இயக்குனர் ராஜ் குமார், பாடகர்கள் வடிவேலுவுடன் என்று பல முன்னணி கலைஞர்கள் வடிவேலுவுடன் திரையுலக பிரமுகர்கள் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தார்கள்.
பாடல்களை திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது.
சன் தொலைக்காட்சிக்காக நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுறா படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. முதலில் ஏப்ரல் 14-ம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இப்போது ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்துக்கு தள்ளிப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
திங்கள், 29 மார்ச், 2010
சுறாவின் இசையால் கடல் எல்லையை தொடும் விறுவிறுப்பான பாடல்கள்.
Suraa Tamil Movie Songs - 2010
Cast: Vijay, Tamannah, Vadivelu, Sriman & Dev GillDirection: S. P. RajkumarProduction: Sangili MuruganMusic: Mani SharmaLyricis: Na.muththukumar, Rajkumar, Vasil, Kabilan
Cast: Vijay, Tamannah, Vadivelu, Sriman & Dev GillDirection: S. P. RajkumarProduction: Sangili MuruganMusic: Mani SharmaLyricis: Na.muththukumar, Rajkumar, Vasil, Kabilan
01. தஞ்சாவூர் ஜில்லாக்காரி…
பாடியவர்கள் : ஹேரசந்ரா, சைந்தவி
பாடல் : நா.முத்துக்குமார்
02. வெற்றி கொடியேற்று…
பாடியவர்கள் : ரஞ்ஜித், முகேஷ்
பாடல் : வஸில், எஸ்.எப், ராஜகுமார்
03. சிறகடிக்கும் நிலவு…
பாடியவர்கள் : கார்த்திக், ரீதா
பாடல் : சினேகன்
04. வங்கக் கடல் எல்லை…
பாடியவர்கள் : நவீன், மாலதி லக்கிரிநாத்
பாடல் : கபிலன்
06. நாம் நடந்தால் அதிரடி…
பாடியவர்கள் : நவீன், ஷோபா சந்திரசேகர், ஜனனி நாதன்
பாடல் : கபிலன்
Download - sura full song
DOWNLOAD LINK
நானும் உங்களில் ஒருத்தன், இப்போது 25 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறேன்.

அகில சூப்பர் ஷ்டார், நற்பணி நாயகன், இளையதளபதி விஜயின் நற்பணியின் தொடர்ச்சியாக இன்று திருச்சி மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கத்தின் கவுரவ தலைவர் பி.எஸ்.வீரா திருமணம் நேற்று திருச்சியில் தாஜ் திருமண ஹாலில் நடந்தது. நடிகர் விஜய் தலைமை தாங்கி வீரா திருமணத்தை நடத்தி வைத்தார்.
அதே மேடையில் 24 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தையும் நடத்தி வைத்தார். மணமக்கள் விஜய் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்டனர்.
அப்போது அவர், கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்பட 51 பொருட்களை திருமண சீர்வரிசை பொருட்களாக வழங்கினார். மணமக்கள் ஒவ்வொரு ஜோடியாக விஜய் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
பின்னர், திருமண விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:
ஒரு படத்தில் நடித்து முடிக்க 6 மாதம் ஆகிறது. 6 மாதம் கஷ்டப்பட்டு நடிக்கிறோம். இந்த நிலையில் இது போன்று ரசிகர்களை சந்திக்கும் போது தான் எனக்கு உற்சாக டானிக் கிடைக்கிறது.
நானும் உங்களில் ஒருத்தன். உங்கள் குடும்ப பிரச்சினை தீர்ப்பதில் எனக்கு பங்கு உண்டு. சிறுவயதில் என் தங்கை இறந்து விட்டார். அதுதான் என் வாழ்க்கையில் பெரிய இழப்பு. அவள் இன்று இருந்திருந்தால் உங்கள் வயதுதான் இருக்கும். ஆனால் இப்போது 25 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறேன். இதை நான் மறக்க மாட்டேன்.
வலையில் சிக்க புறா இல்லை… நான் சுறா!
சுறா படத்தில் நான் பேசும் வசனத்தில், அமைதியாக போவதற்கு நான் ஒன்று புதிய ஆள் அல்ல. உன் வலையில் விழுவதற்கு புறா அல்ல. நான் சுறா என்பேன். நான் யார் வலையிலும் சிக்க மாட்டேன். தனித்து என் பயணத்தைத் தொடர்வேன். என்றும் உங்களில் ஒருவனாக இருப்பேன் என்றார்..
சுறா படத்திலிருந்து அவரை ஒரு பாடல் பாடச் சொல்லி வற்புறுத்தினர் ரசிகர்கள். அதற்கு அவர், “சுறா படப் பாடல்கள் இனிமேல்தான் வெளியாக உள்ளன. எனவே நான் இப்போது அதைப் பாடக் கூடாது. உங்களுக்காக வேட்டைக்காரன் பாடலைப் பாடுகிறேன்” என்று கூறியவர், “என்னுச்சி மண்டைல சுர்ருங்குது…” பாடலைப் பாடிக் காட்டினார்.
சனி, 27 மார்ச், 2010
மார்ச் 29ம் தேதி சுறா திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு


சென்ற வாரம் 26ம் தேதி வெள்ளிக்கிழமை சுறா திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு என்று சுறா குழுவினர்கள் அறிவித்தார்கள், ஆனல் கடசி பாடல்களின் லொக்கேசன் வேலைகள் அனைத்தும் வெளிநாடொன்றில் படமாக்கியிருப்பதனால், பட குழுவினர்கள் சென்னைக்கு வர தாமதமாகிவிட்டது அதனால் 26ம் தேதி வெளியாக இருந்த பாடல்கள் வரும் திங்கள் 29ம் திகதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள் சன் தரப்பு
நூங்கம்பாக்கம் லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் மிக பிரமாண்டமாக வெளியிட சுறா யூனிட் தயாராகிவருகிறது.
வெள்ளி, 26 மார்ச், 2010
24 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தும் விஜய்! தொடரும் விஜயின் நற்பணி.

சுறா படம் முடிந்துவிட்டது. மீண்டும் தனது மக்கள் நலப் பணிகளை ஆரம்பித்திருக்கிறார் விஜய் . திருச்சி யில் வரும் 28ம் தேதி 24 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார்.
தனது மக்கள் நல மன்றத்தின் மூலம் தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளை மாவட்டம் தோறும் செய்து வருகிறார் நடிகர் விஜய்.
ஒவ்வொரு படம் முடிந்து அடுத்த படம் துவங்குவதற்குள் இந்தப் பணிகளை செய்து முடிப்பது அவரது திட்டம்.
முன்பு வேட்டைக்காரன் ரிலீசுக்கு முன் புதுக்கோட்டை, புதுச்சேரி போன்ற பகுதிகளில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறந்து வைத்தார். பலருக்கு நல உதவிகள் மற்றும் பண உதவிகளையும் செய்தார்.
இப்போது அவரது 50வது படமான சுறா முடிந்து ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாகிறது.
இந்நிலையில் வரும் மார்ச் 28ம் தேதி ஞாயிற்றுக் கிழமை திருச்சிக்கு வருகிறார் விஜய். அப்போது இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைத் திறந்து வைக்கிறார்.
24 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அன்று காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் நடக்கும்.
புதுமணத் தம்பதிகளுக்கு தனது செலவில் சீர் வரிசைகளும் வழங்குகிறார். அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் திருமண சான்றிதழ்கள் வழங்குகிறார்.
திருமண விழாவிற்கு அமைச்சர் கே.என். நேரு, தலைமை தாங்குகிறார். அமைச்சர் செல்வராஜ், முன்னிலை வகிக்கிறார். மேயர் சுஜாதா, துணைமேயர் அன்பழகன், சிவா எம்.பி. அன்பில் பெரியசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.
விழா ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட விஜய் நற்பணிமன்ற தலைவர் ராஜா தலைமையில் ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர்.
புதன், 24 மார்ச், 2010
மார்ச் 26-ல் சுறா இசை வெளியீடு!

விஜய்யின் 50 வது படம் சுறா இசை வெளியீடு வரும் மார்ச் 26-ம் தேதி நடக்கிறது.
மிகச் சரியாக திட்டமிடப்பட்டு, விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது சங்கிலி முருகனின் தயாரிப்பான சுறா. விஜய்யுடன் இவர் இணைவது இரண்டாவது முறை. முதல் படம் காதலுத்து மரியாதை.
இந்தப் படம் விஜய்யின் திரையுலக வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும் என்கிறார் சங்கிலிமுருகன்.
இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது. விஜய் - தமன்னா பாடல் காட்சியை நியூஸிலாந்தில் படமாக்கி வருகிறார் இயக்குநர் எஸ்பி ராஜ்குமார். இன்னும் ஒரு வாரத்தில் சென்னை திரும்புகிறது படப்பிடிப்புக் குழு. அடுத்த நாளே இசை வெளியீட்டு விழாவுக்கு தேதி குறித்துள்ளனர்.
இதற்கிடையே படத்தின் ஆடியோ ரிலீஸூக்கு இப்போதே தேதி குறித்துவிட்டனர்.
மார்ச் 26-ம் தேதி சத்யம் வளாகத்தில் சுறா ஆடியோ ரிலீஸ் நடக்கிறது.
வெள்ளி, 19 மார்ச், 2010
ஏப்ரல் 14ந் தேதி விஜயின் 50வது படம் திரைக்கு சூறாவளியாக சுறா! ஆடியோ இம் மாதம் 26ந் தேதி வெளியாகிறது.




மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த சுறா, நாலு காய் பாய்ச்சலில் முன்பாகவே வரப்போகிறது. இப்படத்தை ஏப்ரல் 14 ந் தேதி ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சன்.
சுறா விஜயின் 50வது படம் என்பது ஏதிர்பார்ப்பு புயலை விட எகிறுகிறது, தமிழ் நாட்டு குட்டி சூப்பர் ஷ்டார் என்று அன்புடன் அழைக்கும் தமிழர்களின் குடும்பத்தின் ஒருவராக கருதப்படும், பக்கத்து வீட்டு பைய்யனாகவே தோற்றம் அளிக்கும் இளையதளபதி விஜயின் 50 வது படம் பிரமான்ட தாயாரிப்பிலும், எதிர்பார்ப்பிலும் விரைவில் வெளிவருகிறது.
விஜயின் 49வது படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ச் விஜயின் 50வது படத்தையும் வெளியிடுகிறது
எஸ்.பி.ராஜ்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு எம்.எம்.பிரபு
சுறா மீனைக் குறிக்கும் இந்த படத்தில் விஜய் மீனவராக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா
படத்தின் கதையும் கருவும், கடலும் கடல் சாந்தவைகளுமாக இருப்பதால் சூட்டிங்கை பெரும்பாலும் கடலோர பகுதிகளில் நடத்தியுள்ளார் டைரக்டர் ராஜ்குமார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாகி உள்ளன. பாடல் காட்சிகள் மட்டும் தமிழ்சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்படி வெளிநாட்டில் எடுத்துள்ளனர்
இதே வேளை 'திருப்பாச்சியில்' இடம்பெற்ற 'கும்பிட போன தெய்வம்...' பாடலைப்போல் ஒரு பாடலை மணிசர்மா இசையில் எடுத்திருக்கிறார்கள். இதற்காக புதுச்சேரி அருகே நாற்பது லட்சம் ரூபாய் செலவில் செட் அமைத்து மூன்று மும்பை அழகிகளுடன் விஜய் ஒரு சுப்பர் குத்து ஆடியிருக்கிறார்.
ஏற்ற தாழ்வுகளால் விஜய் படங்களுக்கு முன்பில்லாத மவுசு கிடைத்திருக்கின்றது. வடிவேல், இணைந்திருப்பதால் சுறா பட எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நகைச்சுவை கலந்த குடும்ப படங்களை தருவதில் எஸ்.பி. ராஜ்குமார் சிறந்தவர். நம்பிக்கை தரும் கூட்டணி அதிகரிப்பதால் வெற்றியும் உறுதிப்படுத்தப்படுகிறது.
சுறாவின் ஆடியோ வெளியீடு 26 மார்ச்
மணிசர்மா இசையில் வெளியாகும் சுறா திரைப்பட பாடல்கள் இம்மாதம் 26ந் தேதி மனதை சூறடிக்க வெளிவருகிறது.
விஜய் நாளையதீர்ப்பு முதல் இன்றைய சுறா வரையும்?
விஜயின் 50வது பிரமான்ட தயாரிப்பில் ஏப்ரல் 14ந் தேதி வெளியீட்டை முன்னிட்டு உங்கள் அபிமானம் பெற்ற வழைப்பூவில் விஜயின் அந்தமும் அகரமும், நாளைய தீர்ப்பு முதல் சுறா வரை என்ற மேல் பார்வையாக ஏப்ரல் 14ந் தேதி இவ் வழைப்பூவில் வெளியாகிறது.
ஆகவே உங்களின் பங்களிப்பையும் செய்யவும், விஜய் இது வரை நடித்த திரைப்படங்களில் உங்களுக்கு பிடித்தது, வெறுத்தது, விஜயின் சினிமா விமர்சனங்கள், வாழ்த்துக்கள், கருத்துக்கள் எதுவாயினும் இந்த superstarvijayfanz@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு விரைவாக அனுப்பிவைக்கவும்.
வெள்ளி, 12 மார்ச், 2010
'3 இடியட்ஸ்' - படத்தில் விஜய், அஜீத் மற்றும் விக்ரம் நடிக்க வேண்டும்! மாதவன் கோரிக்கை

இந்தியில் ஆமிர்கான், மாதவன் நடிப்பில் ஹிட்டான படம் ‘3 இடியட்ஸ்’. இதன் ரீமேக் உரிமை வாங்க பலத்த போட்டி நிலவி வந்த நிலையில். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜெமினி பிலிம் சர்க்கியூட் ‘3 இடியட்ஸ்’ படத்தின் தமிழ் உரிமையை வாங்கியுள்ளது. ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்கபோவதாக செய்திகள் அடிப்பட்டு வருகின்றன. முன்னதாக ‘3 இடியட்ஸ்’ படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார் என்று தகவல். கோலிவுட்டில் பரவி வந்தன.
இந்நிலையில் ‘3 இடியட்ஸ்’(இந்தி) படத்தில் நடித்த மாதவன் ‘3 இடியட்ஸ்’ தமிழ் ரீமேக்கில் விஜய், அஜீத் மற்றும் விக்ரம் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார். நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு வந்த மாதவன், ‘3 இடியட்ஸ்’ தமிழில் ரீமேக் ஆவது சந்தோஷமாக உள்ளது என்றும் விக்ரம், அஜீத் மற்றும் விஜய் நடித்தால் கண்டிப்பாக பாலிவுட்டை விட கோலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் மாதவன் கூறினார்.
புதன், 10 மார்ச், 2010
ஊட்டியில விஜய் தமன்னாவோட டூயட்!

சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’ படத்தின் ஷூட்டிங் ஹை ஸ்பீடில் பறந்துக்கொண்டிருக்கிறது. இது விஜய்யின் 50வது படம் என்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
‘சுறா’வுக்காக ஊட்டியில தமன்னாவோட டூயட் பாடிக்கிட்டிருக்க விஜய், அதை முடிச்சுட்டு ராமநாதபுரம் போய் அங்கேயும் ஒரு டூயட் பாடிட்டு வரப்போறார். முன்னதில சிவசங்கரும், பின்னதில ராஜுசுந்தரமும் மாஸ்டர்கள். ஆடி அசத்துங்க..!
வெள்ளி, 5 மார்ச், 2010
சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’ விஜய்யின் 50வது படம், இயக்குநர் எஸ்.பி.ராஜகுமார் என்ன சொல்கிறார் ?









சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’ படத்தின் ஷூட்டிங் ஹை ஸ்பீடில் பறந்துக்கொண்டிருக்கிறது. இது விஜய்யின் 50வது படம் என்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
என்ன சொல்கிறார் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ராஜகுமார்?
‘‘வழக்கமான விஜய் படத்தோட பத்து மடங்கு பரபரன்னு போகிற திரைக்கதைதான் படத்துக்கு பலம். ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட், காதல்னு கலக்கலான விஷயங்கள் படத்துல நிறைய இருக்கு. அடுத்த காட்சி இப்படித்தான் இருக்கும். இதுதான் கிளைமாக்ஸ்னு யாரும் யூகிக்க முடியாதபடி விர்ர்ர்ர்ருனு போகும். இதை நான் அதிகப்படியா சொல்றேன்னு நினைக்காதீங்க. இதுதான் நிஜம்!’’
‘சுறா’ என்ன கதை?
விஜய் மீனவர். தன்னோட தனிப்பட்ட நலன்களை மட்டுமே நினைக்காம அடித்தட்டு மக்களுக்கான உரிமைகளையும் போராடி வாங்கி தர்றார்... இப்படி கதையை சொன்னா, உங்களுக்கு ஏதோ தத்துவமா, கருத்து சொல்ற மாதிரி தோμம். ஆனா, அப்படி இல்லாம, பக்கா கமர்ஷியல் லைன்ல சுர்ர்ர்ருனு படம் பண்ணிட்டிருக்கோம்.
தமன்னா?
தமன்னா, இப்ப இருக்கிற டாப் ஹீரோயின். எப்பவும் சரியான நேரத்தை கடைப்பிடிக்கிற ஆர்டிஸ்ட். நடிப்புல பின்னியிருக்காங்க. படத்துல அவங்க குறும்புக்கார கல்லூரி மாணவி. பெரும் பணக்காரரின் மகள். ரொம்ப ஸ்டைலான கேரக்டர். அவங்க வர்ற சீனெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரி இருக்கும். வடிவேலு காமெடி படத்துல மிரட்டும்.
விஜய் படத்துல பாடல்கள் ரசனையா இருக்குமே?
இந்தப் படத்துலயும்தான். மணிசர்மா இசைல எல்லா பாடலுமே ஹிட்டாகும். வெரைட்டியா ட்யூன் போட்டிருக்கார். ‘வெற்றிக்கொடி ஏத்து / வீசும் நம்ம காத்து’னு ஆரம்பிக்கிற பாட்டு சும்மா கலர்ஃபுல்லா கலக்கலா இருக்கும். ‘வங்க கடல் எல்லை / நான் சிங்கம் பெத்த பிள்ளை’பரபரப்பான பாடலா விசிலடிச்சு துள்ளிக் குதிக்கும்படியா
இருக்கும்.
ஆக்ஷன் காட்சிகள் எப்படி?
கனல் கண்ணன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைச்சிருக்கார். இதுவரை வராத அளவு வித்தியாசமான ஆக்ஷன் காட்சிகளா இருக்கும். விஜய் அதிகப்படியா ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகள்ல நடிச்சிருக்கார். பொதுவாவே எல்லா விஷயத்துக்கும் அவர் ரிஸ்க் எடுக்க தயங்காதவர். உதாரணத்துக்கு, கடல்லயிருந்து அரை மைல் தூரத்துக்கு நீச்சலடிச்சு கரைக்கு வரμம். நாங்க நீச்சல் தெரிஞ்ச சிலரை கரையில உட்கார வச்சிருந்தோம். ஆனா, விஜய் நானே பண்றேன்னார். அதே போல நீந்தியும் வந்தார். இது பெரிய ரிஸ்க். ஆத்துல நீச்சலடிக்கற மாதிரி இல்ல, கடல்ல நீச்சலடிக்கிறது. இது எவ்வளவு கஷ்டம்னு அனுபவப்பட்டவங்களுக்கு தெரியும்.
புது வில்லனை அறிமுகபடுத்துறீங்களாமே?
தேவ் கில் புது வில்லன் இல்ல. தமிழுக்கு புதுசு. தெலுங்கு ‘மகதீரா’ படத்துல மிரட்டலா நடிச்சிருப்பாரு. அந்தப் படத்துக்கு பிறகு அங்க அவருக்கு நிறைய வாய்ப்புகள். ஆனா, அந்தப் படங்கள்ல நடிக்காம, ‘சுறா’வுக்காக வந்தார். அவரோட கேரக்டர் என்னன்னு இப்பவே சொன்னா சஸ்பென்ஸ் போயிடும். அதனால பட ரிலீஸ் வரை அவர் பற்றி வேண்டாம்.
பஞ்ச் டயலாக்?
அது இல்லாம எப்படி? படத்துல விஜய், சூடாகிற காட்சிகள்ல எல்லாம் பஞ்ச் டயலாக் இருக்கும். சாம்பிளுக்கு ஒண்μ: ‘உனக்கு கோவம் வந்தா அடி விழும். எனக்கு கோவம் வந்தா இடி விழும்!
புதன், 3 மார்ச், 2010
விஜய்யின் 51வது படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கிறது, ஜெயம் ராஜா இயக்குகிறார்


விஜய் தனது 50வது படமான சுறாவில் நடித்து வருகிறார். அடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிக்கிறார்? சித்திக் அல்லது ஜெயம் ராஜா?
விஜய்யை நான் இயக்குவது முடிவு செய்யப்பட்ட விஷயம். அது அவரது 51வது படமா இல்லை 52வது படமா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது என்று கூறியிருந்தார் ஜெயம் ராஜா. சித்திக் தனது பாடிகார்ட் படத்தை விஜய்யை வைத்து ரீமேக் செய்ய அவசரம் காட்டுவதால் எழுந்த குழப்பம் இது.
இந்நிலையில் விஜய்யின் 51வது படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கிறது, ஜெயம் ராஜா இயக்குகிறார் என ஆஸ்கர் பிலிம்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விஜய்யின் 51வது படம் உறுதியாகியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)