வெள்ளி, 19 செப்டம்பர், 2008

kuruvi super hit days 140th


'வேட்டைக்காரனி'ல் அசின்

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் பஞ்சம். நயன்தாரா, ஸ்ரேயா, த்ரிஷா... இந்த மூவரையும் விட்டால் முன்னணி இளம் ஹீரோக்களுக்கு வேறு ஜோடிகளில்லை.
மூவருடன் நால்வராக அசினை சேர்க்கலாம் என்றால் அவர், இந்தியை விட்டு நகர்வதாயில்லை. இந்தப் பின்னணியில் விஜய்யின் 'வேட்டைக்காரன்' படத்திற்கு ஏற்பட்டுள்ள கதாநாயகி சிக்கலை யோசித்தால் அதன் தீவிரம் தெரியும்.
'வில்லு'வில் நயன்தாரா நடிப்பதால் அவரை போடமுடியாது. 'குருவி' த்ரிஷா மீது விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் இருப்பதால் அவருக்கும் வாய்ப்பளிக்க வழியில்லை. 'அழகிய தமிழ் மகனி்'ல் இப்போதுதான் விஜய்யுடன் டூயட் பாடியிருக்கிறார் ஸ்ரேயா.

இந்நிலையில் 'வேட்டைக்காரனி'ல் இலியானாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல். உண்மை என்ன என்று விசாரித்ததில் தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. தயாரிப்பு தரப்பை பொறுத்தவரை அவர்கள் இலியானாவை குறித்து யோசிக்கவே இல்லையாம். அவர்களின் ஒரே குறி, அசின்.
'லண்டன் ட்ரீம்ஸ்' படத்துக்காக வெளிநாடு சென்றிருப்பவரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். விஜய் படம் என்பதால் அவரும் உடனே ஒத்துக் கொண்டிருக்கிறார்.
நவம்பரில் 'வேட்டைக்காரன்' படப்பிடிப்பு தொடங்குகிறது.


தளபதியும், தலயும் ஒரே நேரத்தில் வந்தால் என்னாகும்?தளபதியும் தலயும் ஒரே நேரத்தில் வந்தால் என்னாகும்? ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு மண்டை உடையும்.
விஜய், அஜீத் ஆகிய இருபெரும் ஹீரோக்களுக்கு ஒரே மாதிரி மார்க்கெட், ஒரே மாதிரி சம்பளம், ரசிகர்களும் ஒரே மாதிரி என்பதுதான் வியப்பு. தங்களது ஹீரோ நடித்த படங்கள் திரைக்கு வரும் நாளில் கட் அவுட்டுக்கு மாலை, பீர் அபிஷேகம் என்று கலகலப்புக்கு குறை வைக்க மாட்டார்கள் இந்த ரசிகர்கள். இந்த நிலையில் அஜீத்தின் ஏகனும், விஜயின் வில்லும் வேக வேகமாக வளர்ந்து வருகின்றன. வருகிற தீபாவளிக்கு ஏகன் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது ஐங்கரன் நிறுவனம். வில்லு படத்தையும் இதே நிறுவனம் தயாரித்து வருவதால், விஜயை பொங்கலுக்கு வரச் செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.
இதற்கிடையில் வில்லு படத்தின் இயக்குனர் பிரபுதேவாவின் மகனுக்கு உடல் நிலை சரியில்லையாம். இதனால் அவர் மிகுந்த அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பின் வேகமும் சற்று குறைந்திருக்கிறதாம். எனவே பொங்கலுக்குதான் வில்லுவின் வருகை. அக்டோபர் 11- ந்தேதி ஏகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தடபுடலாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சமீப காலங்களாக பேச்சை முற்றிலுமாக குறைத்திருக்கும் அஜீத், இந்த விழாவில் அதிகம் பேசுவாரா? அளந்து பேசுவாரா? இதுதான் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me