ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

விஜய்க்கு ஹீரோயின் யார்?

வேட்டைக்காரன் என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைககள் கிடைக்காமல் திண்டாட்டம் ஏற்பட்டிருக்கிறதாம்.
ஏவி.எம். பாலசுப்ரமணியத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விஜய் கால்ஷீட் கொடுத்து விட்டார். ஆனால் படம்தான் உருவாகாமால் இருந்து வந்தது. முரட்டுக்காளையின் ரீமேக்கில் பாலசுப்ரமணியத்திற்கு விஜய் நடித்துக் கொடுப்பார் என முன்பு கூறப்பட்டது. ஆனால் அது பின்னர் கைவிடப்பட்டு விட்டது.
இந்த நிலையில் பாலசுப்ரமணியம் படத்திற்கு ரெடியாகி விட்டார் விஜய். வேட்டைக்காரன் என இப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் ஹிட் படத்தின் டைட்டில் இது என்பதால் இப்படம் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போது ஹீரோயின் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். விஜய்யின் முதல் சாய்ஸ் ஆசின். எனவே ஆசினை அணுகினர். அவரோ கை நிறைய இந்திப் படங்களுடன் இருப்பதாக கூறியுள்ளார். கொஞ்சம் காத்திருக்க முடியுமா எனவும் கேட்டுள்ளார். ஆனால் காத்திருப்புக்கு நேரம் இல்லை என்று விஜய் தரப்பில் கூறப்பட்டு விட்டதாம்.
இதையடுத்து இலியானாவை அணுகினர். இவரை ஏற்கனவே இருமுறை தனது படங்களில் நாயகியாக்க முயன்றார் விஜய். இருமுறையும் டேக்கா கொடுத்து விட்டார் இலியானா. விஜய்க்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவுக்கே அவர் டேக்கா கொடுத்து வருகிறார் என்பது வேறு விஷயம்.
இந்த முறையும் இலியானா, ஸாரி சொல்லி விட்டாராம். இதனால் அடுத்து யாரை அணுகுவது என்ற யோசனையில் விஜய் தரப்பு உள்ளதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me