வியாழன், 7 ஆகஸ்ட், 2008

குருவி படத்திலேயே நல்ல லாபம்

குருவியிலேயே சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் த்ரிஷா வென்றதால் நயன்தாரா ஓதுங்கிக் கொண்டார்.
இந்த ஆசையை தனது அடுத்த படத்தில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். வில்லங்கமா நினைக்காதீங்க... விவரமான செய்தி இதோ!
உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாகத் தயாரித்த குருவி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தவர் நயன்தாரா. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகும், அந்த வாய்ப்பைப் இழந்தார் நயன். ஒருவழியாக குருவி ரிலீசாகி 100 நாட்களை நெருங்குகிறது. படம் குறித்து பலவித விமர்சனங்கள் இருந்தாலும், முதல் படத்திலேயே நல்ல லாபம்தானாம் தயாரிப்பாளருக்கு. இப்போது தனது இரண்டாவது படத்தைத் தயாரிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார்.

நயன்தாரா தமிழில் தொடர்ச்சியாக நடிக்கும் 6-வது மெகா பட்ஜெட் படம் இது. ஏற்கெனவே அஜீத்துடன் ஏகன், விஜய்யுடன் வில்லு, கார்த்தியுடன் ஒரு படம் என பெரிய பெரிய படங்களில் நயன்தான் நாயகி. இப்போது கமலுக்கும் ஜோடியாக மர்மயோகியில் நடிக்கக்கூடும் எனப் பேசப்படுகிறது.
காட்டுல மழை என்பார்களே... இதுதானோ?

விஜய்யுடன் ஆட மறுத்த நமிதா
ஒரு பாடலுக்கு ஆடுவதில்லை என முடிவெடுத்துள்ளார் நமிதா.
விஜய்யுடன் 'அழகிய தமிழ் மகன்', அஜித்துடன் 'பில்லா' என இரு டாப் ஹீரோக்களின் படத்தில் தன்னை தொட்டுக்க ஊறுகாய் அளவுக்கே பயன்படுத்தியதில் நமிதாவுக்கு வருத்தம். போஸ்டர்களில்கூட இவர் முகத்தை போடவில்லை. இதனால், ஒரு பாடலுக்கெல்லாம் ஆடுவதில்லை என்று புதிய கொள்கை முடிவு எடுத்துள்ளார். எத்தனை நாளைக்கு இது நீடிக்கும் என்பது வேறுவிஷயம். இந்த திடீர் கொள்கைப்படி, விஜய்யுடன் ஆட மறுத்தாராம் நமிதா.'வில்லு' படததில் குத்துப் பாட்டு வருகிறதாம். இதில் நடிக்க பிரபுதேவா தரப்பிலிருந்து நமிதாவை அணுகியதாகவும், நமிதா, ஒரு பாடலுக்கெல்லாம் ஆடுவதில்லை என மறுத்ததாகவும் தகவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me