ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2008

Actor Vijay’s 50th film


Actor Vijay came into acting field with his father S.A. Chandrasekhar’s help. Even though he had a rough beginning he skyrocketed after the movie such as Poove Unakaga, Khadalukku Mariyadhai and Love Today.
After marriage love related storyline did not work for actor Vijay so he moved onto action oriented stories. He became famous with his excellent dance and fighting skills, which made him catch the hearts of his young fans.
Currently he is working with director Prabhu Devva which is his 48th film. His 49th film will be with AVM Studios. There is a buzz that says he will act his 50th film under his own banner V.V. Creations.
Would his father be the director? Well we just have to wait and see at superstarvijay.blogspot.com for more infoவிஜய்யின் 50 வது படம்


விஜய் நடிக்க வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ரசிகர்கள் அமோக ஆதரவு இருப்பதால், கெட்டப் சேஞ்ச் என்ற பெயரில் நியாயத்துக்குக் குரல் கொடுக்கும் வேடங்களில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
இதுவரை இப்படியே 47 படங்களைக் கொடுத்துவிட்டார். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் வில்லு 48-வது படம். தனது 49-வது படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை ஏவிஎம்முக்குக் கொடுத்துப் ‘பெருமைப்படுத்தி"யிருக்கும் விஜய், 50-வது படத்தை மட்டும் வெளியாருக்குக் கொடுக்கவில்லை.
தனது தந்தையின் சொந்த நிறுவனமா விவி கிரியேஷன்ஸ் அல்லது ஷோபா கிரியேஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கப் போகிறார்.
இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்புக்காக இப்போதே ஏகப்பட்ட அதிரடி ஆக்ஷன் கதைகளை தமிழகத்தின் புகழ்பெற்ற ஊர்களின் பெயர்களை எல்லாம் தலைப்பாக்கி சந்திரசேகரனிடம் சொல்லி வைத்திருக்கிறாராம் குத்து இயக்குநர் பேரரசு.
ஆனால் விஜய்யின் விருப்பம் பிரபு தேவாதானாம். வில்லு எப்படி ஓடினாலும் பரவாயில்லை. ஆனால் தனது 50-வது படம் இயக்கும் வாய்ப்பு மட்டும் பிரபுதேவாவுக்குதான், அதில் தலையிடாதீங்கப்பா... என தந்தையிடம் கூறிவிட்டாராம்.மீண்டும் விஜய்யுடன் ஆசின் பரத்பாலா இயக்கத்தில் கமல்ஹாசனுடன் 19 ஸ்டெப்ஸ் தமிழ்-மலையாளம் படத்தில் நடிக்கும் அவர், அடுத்து விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்கப் பேச்சு நடந்து வருவதாகத் தெரிகிறது.
விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் வில்லு படத்துக்குப் பின், ஏவிஎம் பாலசுப்பிரமணியம் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக முரட்டுக்காளை என்ற பெயரையும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
இதில் நயனதாரா ஜோடியாக நடிப்பார் என முதலில் கூறப்பட்டு. ஆனால் வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடி நயனதாராதான். எனவே ஏவிஎம் படத்துக்கு நாயகியாக ஆசினை ஒப்பந்தம் செய்யப் பேச்சு நடந்து வருகிறது.
இதுகுறித்து ஆசின் கூறுகையில்,
தமிழில் மீண்டும் இரு படங்களில் நடிக்கவிருப்பது உண்மைதான். கமல் சார் படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. விஜய் படத்தில் நடிக்கக் கேட்டிருப்பது உண்மைதான். இதுகுறித்து அவர்களே முறையான அறவிப்பு வெளியிடுவார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me