புதன், 9 ஜூலை, 2008

விஜய் ஒரு தெளிவான ஹீரோ...

நிஜத்தில் எப்படியோ... சினிமாவில் அடிக்கடி ஜோடியை மாற்றிக் கொண்டே இருந்தால்தான் பரபரப்பும் சுவாரஸ்யமும் இருந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது. முன்பு 1970ஆம் ஆண்டு அன்றைய சூப்பர்ஸ்டார் எம்ஜிஆர் நடித்து வெளியான படங்கள் 8.அனைத்துப் படங்களிலும் எம்ஜிஆரின் ஜோடி ஜெயலலிதாதான். இந்த எட்டுப் படங்களுமே வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு அப்படியெல்லாம் ஒரே ஜோடியுடன் எந்த ஹீரோ நடித்தாலும் ஒப்புக் கொள்வதில்லை ரசிகர்கள். முன்னணி நடிகரான விஜய்யும்கூட அதற்கு விதிவிலக்கல்ல...கில்லி படம் வெளி வந்ததும் தமிழ் சினிமாவின் அசத்தல் ஜோடி விஜய் - த்ரிஷாதான் என்றார்கள். ஏற்கெனவே இந்த இருவரும் திருப்பாச்சியில் ஜோடி போட்டு, அந்தப் படமும் வெற்றி விழா கண்டிருந்தது.விஜய்யையும் த்ரிஷாவையும் சேர்த்து ஒரு படத்தில் புக் செய்வது தயாரிப்பாளரின் அதிர்ஷ்டம் என்று பேசப்பட்டது.அந்த நேரத்தில்தான் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் அசின், சிவகாசியில். படம் சூப்பர் டூப்பர் கலெக்ஷன். அடுத்த படத்திலேயே மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா, ஆதியில். விஜய்யின் மோசமான பட வரிசையில் அந்தப் படம் இடம் பிடித்துக் கொள்ள, அடுத்த படமான போக்கிரியில் மீண்டும் அசின். இருநூறு நாள் படமாக அமைந்தது போக்கிரி.விசாரித்தால், விஜய் ஒரு தெளிவான ஹீரோ... யாருக்கு கமர்ஷியல் மார்க்கெட் உள்ளதோ அவர்களை தன் படத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அந்த வகையில்தான் இப்போது தொடர்ந்து வெற்றிப் படங்களில் நாயகியாகத் திகழும் நயன்தாராவைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். மற்றபடி விஜய்யின் கொடி அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நயன்தாராவின் தனிப்பட்ட விருப்பம் என்றார் விஜய்யின் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me