சனி, 5 ஜூலை, 2008

'அரசியல் ஆசையில்லை விஜய் பரபரப்பு பேச்சு


'அவரும் நானும் நண்பர்கள் மட்டுமே' என்று நடிகைகளும் 'அரசியல் ஆசையில்லை நாளை எதுவும் நடக்கலாம்' என நடிகர்களும் சொல்லும் வசனத்தை நம்பும் தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய்யும் ஒரு லேட்டஸ்ட் வசனத்தை எடுத்துரைத்துள்ளார்.அரசியலுக்கு வருவீர்களா? என விஜய்யிடம் மீடியாக்கள் சில வருடங்களாக கேட்ட கேள்விக்கு நேற்று இருவேறு விதமான விடை கிடைத்தது.விஜய்க்கு நேற்று பிறந்த நாள். தனது ரசிகர்களுடன் அவர் இதனை கொண்டாடிய இடம் அரசுக்கு சொந்தமான சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடம்.தயாரிப்பாளர்கள் தானு, ஆர்.பி.சௌத்ரி, ஏ.எம்.ரத்னம் லண்டன் கருணாகரன், நடிகர்கள் சத்யராஜ், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ஸ்ரீமன், தாமு நடிகை நயன்தாரா ஆகியோர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.இந்த பிறந்த நாளில் கூடுதல் விஷேசமாக ரசிகர் நற்பணிமன்ற கொடியை அறிமுகப்படுத்தினார் விஜய். வெள்ளை நிறத்திற்குள் நீல நிற வட்டமிட்டிருந்த கொடியில் வெள்ளை ஆடையில் விஜய் ஆள் காட்டி விரலை காட்டிக் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும் போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.வாழ்த்துரை வழங்கிய சத்யராஜ், எம்ஜிஆர் படங்களுக்கு பிறகு விஜய்யின் படங்கள்தான் தன்னை கவர்ந்துள்ளதாகவும், புரட்சித்தலைவரின் பாடல்களுக்கு பிறகு விஜய்யின் பாடல்களில்தான் சமூக சிந்தனை உள்ளதாகவும் பேச 'சத்யராஜா இப்படி...' என நெளிந்த மீடியாக்காரர்கள் நிறைய.விஜய்யின் தந்தையும் விஜய் ரசிகர் மன்ற கௌரவத் தலைவருமான எஸ்.ஏ.சி. பேசும்போது இளைய தளபதியின் அரசியல் பிரவேசம் உறுதி என்பதுபோன்ற தொணியில் உணர்ச்சிவசப்பட்டார்."விஜய்க்கு நான் நடிகன் என்ற ரோடு மட்டுமே போட்டுக்கொடுத்தேன். அதில் ஓடி வெற்றிபெற்றதெல்லாம் அவர்தான். அதேபோல் இன்று ஒரு ரோடு போடப்பட்டுள்ளது (கொடி அறிமுகத்தை சுட்டிக்காட்டினார்) நாளை இது எப்படி மாறும் என்று இப்போதைக்கு சொல்லமுடியாது. நேற்று தொண்டு செய்தவர்களெல்லாம் இன்று தலைவர்களாக உள்ளனர். இன்று தொண்டு செய்பவர்கள் நாளைய தலைவராகலாம். விஜய் இப்போது தொண்டு செய்து வருகிறார்" என சூசகமாக பேசினார்அப்பாவின் பேச்சு மேற்கு நோக்கி இருக்க, விஜய்யின் பேச்சோ வேறு திசையில் இருந்தது."ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே இந்த கொடியை அறிமுகப்படுத்தினோமே தவிர அரசியல், கட்சி என்ற எண்ணம் எதுவுமில்லை. அரசியல் என்பது சாதாரணமான காரியம் இல்லை. பல கட்சியை சேர்ந்தவர்கள் எனது ரசிகர்களாக இருக்கும்போது நான் ஒரு கட்சியை தொடங்க வேண்டிய நிலையில் இல்லை. கட்சி தொடங்கினால் நடிகனாக நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும்" என்று விஜய் பேச, எஸ்.ஏ.சந்திரசேகரின் முகத்தில் ரசாயண மாற்றம் ஏற்பட்டதை பார்க்கமுடிந்தது.
விழாவில் கறிவேப்பிலை மாதிரி ஒட்டிக் கொண்டார் நயன்தாரா. இவ்வளவு ஆரவாரம், கொடி, கோஷங்கள் என்பதை பார்த்து மிரண்டு போனாரோ என்னவோ, ஓரிரு வார்த்தைகளில் விஜய்க்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அமர்ந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me