வெள்ளி, 30 ஜனவரி, 2009

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் விஜய்யை வைத்து 50 வது படத்தை இயக்கப் போகிறார். ஜெயம் ராஜா 50! 50! 50!

ஜெயம் ரவியின் அண்ணனும், வெற்றிப் பட இயக்குநருமான ஜெயம் ராஜா, அடுத்து விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.
கோலிவுட்டின் ஹாட் செய்தியே இதுதான். இப்படம் விஜய்யின் 50வது படம் என்பது கூடுதல் விசேஷம். விஜய்யே இந்தப் படத்தையும் தயாரிக்கவும் செய்கிறார் என்பது போனஸ் செய்தி. விஜய்யின் பொன் விழா படத்தை சித்திக், தரணி ஆகியோரில் ஒருவர்தான் இயக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஜெயம் ராஜா, விஜய்யை இயக்கப் போகிறார் என்ற செய்தியால் கோலிவுட் சர்ப்ரைஸில் ஆழ்ந்துள்ளது. ஆனால் ஜெயம் ராஜாவின் வெற்றிகரமான இயக்கத் திறமையால்தான் அவரை விஜய் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜா தொடர்ந்து நான்கு மெகா ஹிட் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அவர் இயக்கியதே இந்த நான்கு படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜா கடைசியாக இயக்கிய படம் ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம்.

விஜய்யை வைத்து ராஜா இயக்கப் போகும் படம் வழக்கம் போல ரீமேக் படமா அல்லது சொந்தக் கதையா என்பது குறித்து தெரியவில்லை. காரணம், ராஜாவின் இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களுமே ரீமேக் என்பதால்தான். அதேசமயம், விஜய்யும், ரீமேக் படங்களில்தான் பெருமளவில் வெற்றிகளைக் குவித்துள்ளார் என்பதால் இருவரும் இணையும் இப்படமும் நிச்சயம் ரீமேக் படமாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இதுவரை தம்பியை வைத்து மட்டுமே இயக்கி வந்த ராஜா முதல் முறையாக இன்னொரு நடிகரை, அதுவும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் நடிகரை வைத்து இயக்கப் போகிறார். ராஜாவின் திரைப்பட இயக்கத் திறமை குறித்து அறிந்துள்ள விஜய், அவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.


தெலுங்கில் விஜய் படம்
ஆந்திராவில் தெலுங்கு முன்னணி நடிகர்களுக்குள்ள மார்க்கெட் தமிழ் நடிகர்களுக்கும் உள்ளது.
இதன் காரணமாக தமிழில் ஒரு படம் வெளியாகும்போதே தெலுங்கிலும் அப்படம் மொழி மாற்றம் செய்யப்படும். இந்த சுடச்சுட வியாபாரத்தில் விஜயின் சச்சின் படம் எப்படியோ விடுபட்டுவிட்டது.

படம் ஆறினாலும் விஜயின் மா‌ர்க்கெட் இன்னும் சூடாக‌த்தான் இருக்கிறது ஆந்திராவில். அந்த சூட்டில் ஆம்லெட் போட தீர்மானித்திருக்கிறார்கள் சிலர். சச்சின் படம் அதே பெய‌ரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. படத்தில் ஜெனிலியா இருப்பது தயா‌ரிப்பாளருக்கு கூடுதல் நம்பிக்கை. ஆந்திரா முழுக்க அம்மணி பிரபலம். போனஸாக பிபாசா பாசு வேறு இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me