ஞாயிறு, 8 ஜூன், 2008

விஜய் நடிக்கும் வில்லு


விஜய் நடிக்கும் வில்லு பட ஷூட்டிங்கில் ரசிகர்கள் மற்றும் கிராம மக்கள் மீது தனியார் பாதுகாப்பு அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில், பலரது மண்டை உடைந்தகது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.விஜய், நயனதாரா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் வில்லு. பிரபுதேவா இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங், பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தில் நடைபெறுகிறது.நெய்காரபட்டியில் உள்ள ஜமீன் பங்களாவில் நகைச்சுவை மற்றும் சண்டை காட்சிகள் போன்றவை படமாக்கப்பட்டு வருகிறது.நடிகர் விஜய் பழனியில் ஷூட்டிங்கில் உள்ளார் என்ற தகவல் அருகில் உள்ள பகுதிகளுக்கு காட்டுத் தீயாக பரவியது. இதனால் அருகில் உள்ள கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.மேலும் பள்ளி சென்று வீடு திரும்பிய கிராம குழந்தைகளும், ஷூட்டிங் நடக்கும் இடத்தில் குவிந்தனர். ரசிகர்களின் ஆர்வத்தால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் ஷூட்டிங்கிற்காக அழைத்து வரப்பட்ட தனியார் செக்யூரிட்டி அமைப்பினர் விஜய் ரசிகர்கள் மீதும், கிராம மக்கள் மீதும் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதில் அவர்களில் பலருக்கு மண்டை உடைந்தது. பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். படக் குழுவினர் மீது கிராம மக்கள் ஆத்திரத்துடன் இருப்பதால் படக்குழுவினருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me