சனி, 24 மே, 2008

விகடன் விமர்சன குழு


தில், தூள், கில்லி' என்று ட்ரிபிள் ஷாட் அடித்த தரணியின் குருவிவீடு ஏலத்தில் மூழ்காமல் இருக்க காணாமல் போன அப்பாவுக்கு வர வேண்டிய கடனை வசூலிக்க, "குருவி'யாக மலேசியா செல்கிறார் விஜய். கடனை வசூலிக்க முடியாமல், வில்லன் சுமனிடமிருந்து காஸ்ட்லி வைரத்தை லபக்கிக் கொண்டு சென்னை வருகிறார். வைரக் கள்வனிடம் மனதைப் பறிகொடுக்கும் சுமனின் தங்கை த்ரிஷாவும் பின்னாலேயே சென்னை வருகிறார். வைரத்தையும் தங்கையையும் தேடி சுமனும் சென்னைக்கு!விஜய்யைப் போட்டுப் புரட்டியெடுத்துவிட்டு, அவருடைய அப்பா மணிவண்ணன் தன்னிடம் கொத்தடிமையாக இருக்கும் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்கிறார் சுமன். பிறகென்ன... அப்பாவை மீட்பதும் த்ரிஷாவைக் கைபிடிப்பதுமான திசை நோக்கிப் பறக்கிறது குருவி!விஜய், தரணி, த்ரிஷா கூட்டணி; மதுரைக்குப் பதில் மலேசியா; கபடிக்குப் பதில் கார் ரேஸ் எனப் பழைய பாதைதான்! கொத்தடிமைகள் மீட்பும் வில்லன்களும் மட்டும் புதுசு!விஜய்க்கு ஆதர்சமான ஆக்ஷன் அவதாரம் பொளேர் பொளேரெனப் பொளக்கிறார். டமால் டுமீலென வெடிக்கிறார். ஆகாயத்தில் பறக்கிறார். தண்ணீருக்குள் தடதடக்கிறார் என ஆக்ஷன் பேக்கேஜ்! கிடைத்த கேப்களில் காமெடி. சென்டிமென்ட் வகையறாக்களுக்கும் மரியாதை செய்கிறார். ஆனாலும்...?கொஞ்சம் வெளிறி மெலிந்திருக்கிற த்ரிஷா, தமிழ் சினிமாவின் டிபிக்கலான சமய சந்தர்ப்பம் தெரியாமல் ராவடி பண்ணுகிற ஹீரோயின்! விஜய்யின் மரணச் செய்தியின் போதுகூட அம்மணியின் கண்கள் துடிக்கத் தவறுகிறதே?ஆக்ஷன் டெம்போவை எகிறவைக்கிறது வித்யாசாகரின் இசை. பலானது பாடலின் பீட்டும் டான்ஸும் அதிரடி! சரசர சுறுசுறுவென அடுத்தடுத்து ஆங்கில் மாறி அசரடிக்கும் கோபிநாத்தின் ஒளிப்பதிவும் துல்லியம்.மலேசியாவுக்கு பொருட்களைக் கை மாற்றும் குருவி வைரக் கடத்தல் என்று சின்ன சுவாரஸ்யம் உண்டாக்கியவர்கள், பின்பாதி பழிவாங்கும் ட்ரீட்மென்ட்டில் புதுசாக ஏதுமில்லாமல் கோட்டைவிட்டதில்... ஆவ்வ்வ்!'நின்றால் ஆக்ஷன், நடந்தால் ஆக்ஷனோ ஆக்ஷன் என்ற திகட்டல் முயற்சிக்கு தியேட்டரில் நெகட்டிவ் ரியாக்ஷன்! சுமன், ஆசிஷ் வித்யார்த்தி, பவன், ஜீவி (கடப்பா ராஜா) என்று படம் நெடுக வில்லன்மேளாவிஜய்க்குத் தோழராக விவேக் உண்டு. கொஞ்சம் கலகலப்போடு சேர்த்து, நேரடியாக அதிரவைக்கிற கெட்ட வார்த்தை காமெடியும் உண்டு!ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கே ஜஸ்ட் லைக் தட் டேக்கா கொடுத்து வைரம் கடத்தும் விஜய், அதை த்ரிஷாவின் கைப்பைக்குள் இருந்து எடுப்பதற்கு அத்தனையா சிரமப்படுவார்!அப்பா மணிவண்ணனின் ரத்தம் படிந்த அதே கல்லால் வில்லனை அடிப்பது கம்ப்யூட்டர் பாஸ்வேர்டு தெரிந்த வில்லன் நினைவிழப்பது, க்ளைமாக்ஸில் நல்ல போலீஸ் என்ட்ரி கொடுப்பது, விஜய்யின் சேவையைப் பாராட்டி அவரது கொலைக் குற்றங்களை ஸ்பாட்டிலேயே போலீஸ் அதிகாரி மன்னிப்பது எல்லாம் தமிழ் சினிமா காலம் காலமாகக் கிழித்தெடுத்த கிளிஷேக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me