பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்காமலேயே மிகப்பெரிய இடத்துக்கு உயர்ந்தவர் விஜய்.
அறிமுக இயக்குனர்களின் படத்தில் நடிக்க விஜய் தயங்கியதில்லை. 'அழகிய தமிழ்மகன்', 'குருவி' என இரு சுமார் படங்களுக்குப் பிறகு 'வில்லு' படத்தில் நடித்து வருகிறவர் அடுத்து அறிமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிப்பது ஆச்சரியம்! வில்லு படத்தை பிரபுதேவா புயல் வேகத்தில் எடுத்து வருகிறார். நயன்தாரா ஜோடி. கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது படம். இது முடிந்ததும் ஏவிஎம் (ஏவிஎம் சரவணனின் சகோதரர் தயாரிப்பு) தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இதற்காக ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கியுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறார்.
விஜய்யை முன்னணிக்கு கொண்டு வந்ததில் அவரது தந்தை இயக்கிய படங்களுக்கும் பங்குண்டு. ஆனால், எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு கால்ஷீட் கொடுக்கும் மனநிலையில் இல்லை விஜய். விஜய்யின் ஐம்பதாவது படத்தையும் வேறு இயக்குனர்தான் இயக்குகிறார். தயாரிப்பு மட்டும் எஸ்.ஏ.சி.யின் வி.வி.கிரியேஷன்ஸ். இதுபற்றிய அறிவிப்பை பிரமாண்டமாக வெளியிட உள்ளார் எஸ்.ஏ.சி.
ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me