

இரண்டாவது செய்தி- தரணியிடம் உதவி இயக்குனராக இருந்தவரும், குருவி படத்தின் வசனகர்த்தாவுமான பாபுசிவன் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய். இந்த படத்தை தயாரிப்பது பிரபல நிறுவனமான ஏ.வி.எம். இது பாலசுப்ரமணியனின் ஏ.வி.எம். இரண்டு செய்திகளையும் கமுக்கமாக கேட்டு, கப்சிப் என்று இருக்கிறார் விஜய். தற்போது சுவிட்சர்லாந்தில் வில்லு படத்திற்காக ஆடிக் கொண்டிருக்கிறாராம் நயன்தாராவுடன். வந்த பிறகு கேட்டுட்டா போச்சு.
விஜய் பற்றிய கொசுறு தகவல் இன்னொன்று. தனது ரசிகர் மன்ற கொடியை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று ஏற்ற திட்டமிட்டிருக்கிறாராம். அநேகமாக இந்த வைபவம், வில்லு ரிலீஸ் நேரத்தில் இருக்கும் என்கிறார்கள். எல்லாம் ஒரு கால்குலேசன்தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me