புதன், 27 ஆகஸ்ட், 2008

விஜய்யுடன் ஜோடியில்லை அசின்

விஜய் ஜோடியாக நடிப்பதாக வந்த செய்தியை மறுத்தார் அசின். 'வில்லு' விஜய்யின் நாற்பத்தியெட்டாவது படம்.
நாற்பத்தி ஒன்பதாவது படத்தை பாலசுப்ரமணியத்தின் ஏவி.எம். நிறுவனத்துக்காக நடிக்கிறார் விஜய். தரணியின் உதவியாளர் பாபுசிவன் படத்தை இயக்குகிறார். 'வேட்டைக்காரன்' பெயர் பரிசீலனையில் உள்ளது. விஜய்யின் ஐம்பதாவது படத்தை யார் இயக்குகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. எஸ்.ஏ.சந்திரசேகரனின் வி.வி.கிரியேஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. விஜய் ஜோடியாக அசினை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாயின. மேலும் பாபுசிவன் இயக்கும் படத்தில் அசின் நடிக்கப்போவதாகவும் பத்திரிகைகள் எழுதின.
இவை உண்மையா?
இல்லை என்று மறுத்திருக்கிறார் அசின். இந்தி 'கஜினி'க்குப் பிறகு விபுல்ஷாவின் 'லண்டன் ட்ரீம்ஸி'ல் பிஸியாகியிருக்கிறார் அசின். இதில் சல்மான்கான், அஜய் தேவ்கான் நடிக்கின்றனர். டிசம்பர் இறுதியில் வெளியாகும் கஜினிக்கு அக்டோபர் மாதமே, படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகள் ஆரம்பமாகின்றன. இதில் அசின் கண்டிப்பாக கலந்து கொண்டாக வேண்டும். அடுத்த வருடம் பிப்ரவரி முதல் பரத்பாலா இய்ககும் படத்திற்கு கால்ஷீட் கொடு்த்திருக்கிறார். கேரளா தேசத்தின் இளவரசியாக இதில் அசின் நடிக்கிறார். கமலும் படத்தில் உண்டு. அடுத்த வருடம் இறுதிவரை பிஸி. அதனால் விஜய் ஜோடியாக நடிக்கயிருப்பதாக சொல்வதில் உண்மையில்லை என்றார் அசின்.
நடிகையின் பேச்சு... நாளையே மாறினாலும் ஆச்சரியமில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me