செவ்வாய், 26 ஆகஸ்ட், 2008

விஜய்யின் "வேட்டைக்காரன்"



எம்.ஜி.ஆர். படங்களின் பெயர்களுக்கு இன்றும் நல்ல டிமாண்ட். தனது புதிய படத்தி்ற்கு விஜய் எம்.ஜி.ஆர். படத்தின் பெயரையே தேர்வு செய்துள்ளார்.
விஜய் எம்.ஜி.ஆர்.ரசிகர். அவரது ரசிகராகவே ஒரு படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் 'பந்தயம்' பட்ததில் விஜய் நடிக்கவில்லையென்றாலும், விஜய்யின் ரசிகராக வரும் பந்தயம் ஹீரோ நிதின் சத்யா விஜய்யின் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்கும் காட்சியொன்று இடம் பெறுகிறது. இதில், விஜய்யை இயக்குனர் பேரரசு இயக்குவதுபோலவும், நிதின் சத்யா அதனை வேடிக்கை பார்பபதாகவும் காட்சி அமைத்துள்ளார் எஸ்.ஏ.சி. குறிப்பிட்ட காட்சியில் விஜய் இடம்பெறும் படத்திற்கு எம்.ஜி.ஆர். என்று பெயர் வைத்திருந்தார் எஸ்.ஏ.சி.நிற்க நமது விஷயத்திற்கு வருவோம். 'வில்லு' படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்து ஏவி.எம் (பாலசுப்ரமணியம்) தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். தரணியின் அசிஸ்டெண்ட் பாபுசிவன் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு விஜய் தேர்வு செய்திருக்கும் பெயர், 'வேட்டைக்காரன்', எம்.ஜி.ஆரின் அமரத்துவம் வாய்ந்த படங்களில் வேட்டாக்காரனும் ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me