வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

Vijay’s next film Vettaikaran!

Vijay’s next film in all probability can be christened Vettaikaran! Producers are scouting for Asin’s call sheet for Vettaikaran that is proving to be a tough call. Asin’s commitment with a Salman Khan movie is reported to be the culprit. However, efforts are in and it is also speculated that Salman Khan would give in for Vijay and let Asin take up the project. As Plan B,
while the director’s side feel that Nayan could be brought in, the producers are reluctant to repeat the Vijay - Nayan Villu pair reasoning that it would bore the audience. That being the case, Ileana or any other Mumbai model would grace the screens as Vijay’s arm candy.
The film will be directed by Babu Sivan, an assistant of director Dharani and will be produced by AVM’s Balasubramaniam. Plans are afoot to include all the aspects in the film that would satisfy Vijay’s fans.


பந்தயம் படத்தில் விஜயின் பஞ்ச் டயாலாக்


பந்தயம் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது ரசிகர்கள் அறிந்த விஷயம்தான். வருகிற கொஞ்ச நிமிடத்திலும், நறுக்கென்று நாலு பஞ்ச் வசனங்கள் பேசுகிறாராம். படப்பிடிப்பில் இருக்கும் இவரை காண ரசிகர்கள் திரண்டு வருவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடத்தப்பட்ட படப்பிடிப்பில் நிஜமான விஜய் ரசிகர்கள் நடித்தார்கள்.
படத்தில் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களில் அடுப்பை பற்ற வைத்து ஆவி பறக்க சமைக்கலாம். அந்தளவுக்கு சூடு...! 'நான் மக்களுக்கு நல்லது செய்வதற்காக வந்திருக்கேன். உன்னை மாதிரி அரசியலை வைத்து வியாபாரம் செய்யுற ஆள் நான் இல்லை' 'நான் பிறந்தது மதுரை, வளர்ந்தது திருப்பாச்சி, என்னை எங்க அப்பா வெறும் ஆம்பளையா மட்டும் வளர்க்கலை, கொம்பு சீவிய காளையா வளர்த்திருக்கார்' இப்படி வசனங்கள் இடம் பெறுகிறதாம்.
படத்தின் ஹீரோவான நிதின் சத்யா இந்த படத்தில் விஜய் ரசிகராக நடிக்கிறார்

புதன், 27 ஆகஸ்ட், 2008

விஜய்யுடன் ஜோடியில்லை அசின்

விஜய் ஜோடியாக நடிப்பதாக வந்த செய்தியை மறுத்தார் அசின். 'வில்லு' விஜய்யின் நாற்பத்தியெட்டாவது படம்.
நாற்பத்தி ஒன்பதாவது படத்தை பாலசுப்ரமணியத்தின் ஏவி.எம். நிறுவனத்துக்காக நடிக்கிறார் விஜய். தரணியின் உதவியாளர் பாபுசிவன் படத்தை இயக்குகிறார். 'வேட்டைக்காரன்' பெயர் பரிசீலனையில் உள்ளது. விஜய்யின் ஐம்பதாவது படத்தை யார் இயக்குகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. எஸ்.ஏ.சந்திரசேகரனின் வி.வி.கிரியேஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. விஜய் ஜோடியாக அசினை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாயின. மேலும் பாபுசிவன் இயக்கும் படத்தில் அசின் நடிக்கப்போவதாகவும் பத்திரிகைகள் எழுதின.
இவை உண்மையா?
இல்லை என்று மறுத்திருக்கிறார் அசின். இந்தி 'கஜினி'க்குப் பிறகு விபுல்ஷாவின் 'லண்டன் ட்ரீம்ஸி'ல் பிஸியாகியிருக்கிறார் அசின். இதில் சல்மான்கான், அஜய் தேவ்கான் நடிக்கின்றனர். டிசம்பர் இறுதியில் வெளியாகும் கஜினிக்கு அக்டோபர் மாதமே, படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகள் ஆரம்பமாகின்றன. இதில் அசின் கண்டிப்பாக கலந்து கொண்டாக வேண்டும். அடுத்த வருடம் பிப்ரவரி முதல் பரத்பாலா இய்ககும் படத்திற்கு கால்ஷீட் கொடு்த்திருக்கிறார். கேரளா தேசத்தின் இளவரசியாக இதில் அசின் நடிக்கிறார். கமலும் படத்தில் உண்டு. அடுத்த வருடம் இறுதிவரை பிஸி. அதனால் விஜய் ஜோடியாக நடிக்கயிருப்பதாக சொல்வதில் உண்மையில்லை என்றார் அசின்.
நடிகையின் பேச்சு... நாளையே மாறினாலும் ஆச்சரியமில்லை!

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2008

விஜய்யின் "வேட்டைக்காரன்"



எம்.ஜி.ஆர். படங்களின் பெயர்களுக்கு இன்றும் நல்ல டிமாண்ட். தனது புதிய படத்தி்ற்கு விஜய் எம்.ஜி.ஆர். படத்தின் பெயரையே தேர்வு செய்துள்ளார்.
விஜய் எம்.ஜி.ஆர்.ரசிகர். அவரது ரசிகராகவே ஒரு படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் 'பந்தயம்' பட்ததில் விஜய் நடிக்கவில்லையென்றாலும், விஜய்யின் ரசிகராக வரும் பந்தயம் ஹீரோ நிதின் சத்யா விஜய்யின் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்கும் காட்சியொன்று இடம் பெறுகிறது. இதில், விஜய்யை இயக்குனர் பேரரசு இயக்குவதுபோலவும், நிதின் சத்யா அதனை வேடிக்கை பார்பபதாகவும் காட்சி அமைத்துள்ளார் எஸ்.ஏ.சி. குறிப்பிட்ட காட்சியில் விஜய் இடம்பெறும் படத்திற்கு எம்.ஜி.ஆர். என்று பெயர் வைத்திருந்தார் எஸ்.ஏ.சி.நிற்க நமது விஷயத்திற்கு வருவோம். 'வில்லு' படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்து ஏவி.எம் (பாலசுப்ரமணியம்) தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். தரணியின் அசிஸ்டெண்ட் பாபுசிவன் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு விஜய் தேர்வு செய்திருக்கும் பெயர், 'வேட்டைக்காரன்', எம்.ஜி.ஆரின் அமரத்துவம் வாய்ந்த படங்களில் வேட்டாக்காரனும் ஒன்று.

புதன், 20 ஆகஸ்ட், 2008

Vijay and Nayantara packing their bags again!!

After a romantic shoot in the most exquisite locations in Switzerland, the Villu team is back in Chennai and will be packing their bags again to another beautiful country very soon

Vijay to return for his dad’s sake

After the stupendous success of Pokkiri, Villu is the name of the film where Ilayathalapathy Vijay will once again be directed by India’s Michael Jackson Prabhu Deva. The magic that they had woven in Pokkiri is expected to be repeated in this project also. Shooting for Villu is happening at a brisk phase and the unit had recently left for Switzerland to shoot a few song sequences.
Meanwhile in Chennai, Vijay’s father S A Chandrashekar, under his home banner V V creations is producing and directing Pandhayam which has Nithin Sathya in a key role who is being supported by Sindu Thulani. The audio release of this film is scheduled to be held on the 22nd August. Kollywood circles reveal that Vijay had decided to make a lightning visit from Swiss to Chennai from grace this function and then get back to the shoots of Villu.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2008

Actor Vijay’s 50th film


Actor Vijay came into acting field with his father S.A. Chandrasekhar’s help. Even though he had a rough beginning he skyrocketed after the movie such as Poove Unakaga, Khadalukku Mariyadhai and Love Today.
After marriage love related storyline did not work for actor Vijay so he moved onto action oriented stories. He became famous with his excellent dance and fighting skills, which made him catch the hearts of his young fans.
Currently he is working with director Prabhu Devva which is his 48th film. His 49th film will be with AVM Studios. There is a buzz that says he will act his 50th film under his own banner V.V. Creations.
Would his father be the director? Well we just have to wait and see at superstarvijay.blogspot.com for more info



விஜய்யின் 50 வது படம்


விஜய் நடிக்க வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ரசிகர்கள் அமோக ஆதரவு இருப்பதால், கெட்டப் சேஞ்ச் என்ற பெயரில் நியாயத்துக்குக் குரல் கொடுக்கும் வேடங்களில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
இதுவரை இப்படியே 47 படங்களைக் கொடுத்துவிட்டார். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் வில்லு 48-வது படம். தனது 49-வது படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை ஏவிஎம்முக்குக் கொடுத்துப் ‘பெருமைப்படுத்தி"யிருக்கும் விஜய், 50-வது படத்தை மட்டும் வெளியாருக்குக் கொடுக்கவில்லை.
தனது தந்தையின் சொந்த நிறுவனமா விவி கிரியேஷன்ஸ் அல்லது ஷோபா கிரியேஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கப் போகிறார்.
இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்புக்காக இப்போதே ஏகப்பட்ட அதிரடி ஆக்ஷன் கதைகளை தமிழகத்தின் புகழ்பெற்ற ஊர்களின் பெயர்களை எல்லாம் தலைப்பாக்கி சந்திரசேகரனிடம் சொல்லி வைத்திருக்கிறாராம் குத்து இயக்குநர் பேரரசு.
ஆனால் விஜய்யின் விருப்பம் பிரபு தேவாதானாம். வில்லு எப்படி ஓடினாலும் பரவாயில்லை. ஆனால் தனது 50-வது படம் இயக்கும் வாய்ப்பு மட்டும் பிரபுதேவாவுக்குதான், அதில் தலையிடாதீங்கப்பா... என தந்தையிடம் கூறிவிட்டாராம்.



மீண்டும் விஜய்யுடன் ஆசின் பரத்பாலா இயக்கத்தில் கமல்ஹாசனுடன் 19 ஸ்டெப்ஸ் தமிழ்-மலையாளம் படத்தில் நடிக்கும் அவர், அடுத்து விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்கப் பேச்சு நடந்து வருவதாகத் தெரிகிறது.
விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் வில்லு படத்துக்குப் பின், ஏவிஎம் பாலசுப்பிரமணியம் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக முரட்டுக்காளை என்ற பெயரையும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
இதில் நயனதாரா ஜோடியாக நடிப்பார் என முதலில் கூறப்பட்டு. ஆனால் வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடி நயனதாராதான். எனவே ஏவிஎம் படத்துக்கு நாயகியாக ஆசினை ஒப்பந்தம் செய்யப் பேச்சு நடந்து வருகிறது.
இதுகுறித்து ஆசின் கூறுகையில்,
தமிழில் மீண்டும் இரு படங்களில் நடிக்கவிருப்பது உண்மைதான். கமல் சார் படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. விஜய் படத்தில் நடிக்கக் கேட்டிருப்பது உண்மைதான். இதுகுறித்து அவர்களே முறையான அறவிப்பு வெளியிடுவார்கள் என்றார்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

விஜயின் அடுத்த படம்? ??


வில்லு படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் எம்.ஜி.ஆர் என்றும், அப்படத்தை இயக்கவிருப்பவர் பேரரசு என்றும் ஒரு தகவல் இறக்கை கட்டி பறக்கிறது. இதை இரு தரப்பும் மறுக்கவும் இல்லை. எஸ் சொல்லவும் இல்லை. இந்த நிலையில் இன்னொரு செய்தியும் அதிகாரபூர்வமாக உலா வருகிறது. இரண்டில் எது உண்மை என்பது வில்லு நாயகனுக்கே வெளிச்சம்.
இரண்டாவது செய்தி- தரணியிடம் உதவி இயக்குனராக இருந்தவரும், குருவி படத்தின் வசனகர்த்தாவுமான பாபுசிவன் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய். இந்த படத்தை தயாரிப்பது பிரபல நிறுவனமான ஏ.வி.எம். இது பாலசுப்ரமணியனின் ஏ.வி.எம். இரண்டு செய்திகளையும் கமுக்கமாக கேட்டு, கப்சிப் என்று இருக்கிறார் விஜய். தற்போது சுவிட்சர்லாந்தில் வில்லு படத்திற்காக ஆடிக் கொண்டிருக்கிறாராம் நயன்தாராவுடன். வந்த பிறகு கேட்டுட்டா போச்சு.
விஜய் பற்றிய கொசுறு தகவல் இன்னொன்று. தனது ரசிகர் மன்ற கொடியை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று ஏற்ற திட்டமிட்டிருக்கிறாராம். அநேகமாக இந்த வைபவம், வில்லு ரிலீஸ் நேரத்தில் இருக்கும் என்கிறார்கள். எல்லாம் ஒரு கால்குலேசன்தான்!












சனி, 9 ஆகஸ்ட், 2008

வில்லு பற்றி பிரவுதேவா விகடன் சர்வே


click on the image to read

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

Prabhu deva talks about Villu

Currently Prabhu Deva is in the film by Vijay 'Villu', to which he was asked if 'Villu' will be succeeded as' Pokiri ', Prabhu Deva said that Villu will be three times better than' Pokiri '. When asked about the big names such as Vadivelu and Nayantara in the film, Prabhu Deva said: "When Vijay was confirmed for the project, one of my assistants literally begged me to take Nayantara for the film. His desire seems to work wonderfully well and the film emerges very well ". About Nayantara in the film, Prabhu Deva gives an overview of its introduction into the film. "imagine it starts to rain, you run for cover you s and then you find a beautiful girl holding an umbrella and inviting you to share with her umbrella, how would you feel?" asks the director. When asked about the hindi remake of "Pokiri" with Salman Khan, the dance masteur - director said, "it made seven years since Salman has played in an action movie. He played extremely well and film will not fail to be exciting. " It is interesting to note that Prabhu Deva realized''Villu "Vijay while his elder brother, Raju Sundaram realizes" Aegan "for Ajith.

villu shooting

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

குருவி படத்திலேயே நல்ல லாபம்

குருவியிலேயே சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் த்ரிஷா வென்றதால் நயன்தாரா ஓதுங்கிக் கொண்டார்.
இந்த ஆசையை தனது அடுத்த படத்தில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். வில்லங்கமா நினைக்காதீங்க... விவரமான செய்தி இதோ!
உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாகத் தயாரித்த குருவி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தவர் நயன்தாரா. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகும், அந்த வாய்ப்பைப் இழந்தார் நயன். ஒருவழியாக குருவி ரிலீசாகி 100 நாட்களை நெருங்குகிறது. படம் குறித்து பலவித விமர்சனங்கள் இருந்தாலும், முதல் படத்திலேயே நல்ல லாபம்தானாம் தயாரிப்பாளருக்கு. இப்போது தனது இரண்டாவது படத்தைத் தயாரிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார்.

நயன்தாரா தமிழில் தொடர்ச்சியாக நடிக்கும் 6-வது மெகா பட்ஜெட் படம் இது. ஏற்கெனவே அஜீத்துடன் ஏகன், விஜய்யுடன் வில்லு, கார்த்தியுடன் ஒரு படம் என பெரிய பெரிய படங்களில் நயன்தான் நாயகி. இப்போது கமலுக்கும் ஜோடியாக மர்மயோகியில் நடிக்கக்கூடும் எனப் பேசப்படுகிறது.
காட்டுல மழை என்பார்களே... இதுதானோ?

விஜய்யுடன் ஆட மறுத்த நமிதா
ஒரு பாடலுக்கு ஆடுவதில்லை என முடிவெடுத்துள்ளார் நமிதா.
விஜய்யுடன் 'அழகிய தமிழ் மகன்', அஜித்துடன் 'பில்லா' என இரு டாப் ஹீரோக்களின் படத்தில் தன்னை தொட்டுக்க ஊறுகாய் அளவுக்கே பயன்படுத்தியதில் நமிதாவுக்கு வருத்தம். போஸ்டர்களில்கூட இவர் முகத்தை போடவில்லை. இதனால், ஒரு பாடலுக்கெல்லாம் ஆடுவதில்லை என்று புதிய கொள்கை முடிவு எடுத்துள்ளார். எத்தனை நாளைக்கு இது நீடிக்கும் என்பது வேறுவிஷயம். இந்த திடீர் கொள்கைப்படி, விஜய்யுடன் ஆட மறுத்தாராம் நமிதா.'வில்லு' படததில் குத்துப் பாட்டு வருகிறதாம். இதில் நடிக்க பிரபுதேவா தரப்பிலிருந்து நமிதாவை அணுகியதாகவும், நமிதா, ஒரு பாடலுக்கெல்லாம் ஆடுவதில்லை என மறுத்ததாகவும் தகவல்

புதன், 6 ஆகஸ்ட், 2008

Villu shooting Switzerland


The crew that has flown to Switzerland to shoot a crucial part of the film will be joined by Ilaya Thalapathi Vijay today. The shoot also includes a couple of songs. Major part of this film will be filmed in Switzerland.The crew finished their fight scenes last week and will be packing off to Switzerland this weekend for 25 days for a romantic duet and a few scenes

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்காமலேயே மிகப்பெரிய இடத்துக்கு உயர்ந்தவர் விஜய்.

பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்காமலேயே மிகப்பெரிய இடத்துக்கு உயர்ந்தவர் விஜய்.
அறிமுக இயக்குனர்களின் படத்தில் நடிக்க விஜய் தயங்கியதில்லை. 'அழகிய தமிழ்மகன்', 'குருவி' என இரு சுமார் படங்களுக்குப் பிறகு 'வில்லு' படத்தில் நடித்து வருகிறவர் அடுத்து அறிமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிப்பது ஆச்சரியம்! வில்லு படத்தை பிரபுதேவா புயல் வேகத்தில் எடுத்து வருகிறார். நயன்தாரா ஜோடி. கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது படம். இது முடிந்ததும் ஏவிஎம் (ஏவிஎம் சரவணனின் சகோதரர் தயாரிப்பு) தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இதற்காக ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கியுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறார்.
விஜய்யை முன்னணிக்கு கொண்டு வந்ததில் அவரது தந்தை இயக்கிய படங்களுக்கும் பங்குண்டு. ஆனால், எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு கால்ஷீட் கொடுக்கும் மனநிலையில் இல்லை விஜய். விஜய்யின் ஐம்பதாவது படத்தையும் வேறு இயக்குனர்தான் இயக்குகிறார். தயாரிப்பு மட்டும் எஸ்.ஏ.சி.யின் வி.வி.கிரியேஷன்ஸ். இதுபற்றிய அறிவிப்பை பிரமாண்டமாக வெளியிட உள்ளார் எஸ்.ஏ.சி.