ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

தரணி இயக்கத்தில் விஜய்?

மீண்டும் தரணி இயக்கத்தில் நடிக்கிறாராம் விஜய். இந்த செய்திதான் தற்போது இன்டஸ்ட்‌ரியை கலக்கிக் கொண்டிருக்கிறது.
விஜய் நடித்துவரும் வேட்டைக்காரன் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயா‌ரிக்க எஸ்.ஏ. ரா‌ஜ்குமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் தரணி இயக்கத்தில் நடிக்க தீர்மானித்திருக்கிறாராம் விஜய். கில்லி, குருவி படங்களுக்குப் பிறகு இவர்கள் இணையும் இந்தப் படத்தை தயா‌ரிக்கப் போகிறவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

விழாவில் நடிகர் விஜய், சூர்யா

நாதஸ்வரங்கள் முழங்க ஆதவன் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. டைரக்டர் ஷங்கர் வெளியிட திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் பெற்றுக் கொண்டார். விழாவில் நடிகர் விஜய், சூர்யா, சசிக்குமார், விவேக், கவுதம் மேனன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

வாரணம் ஆயிரம் பாடலை கேட்டுட்டு “மாப்பு... ஸாங் சூப்பர்டா” என்று மெசேஜ் அனுப்பினார் விஜய். ஸ்கிரீன்லே ஆதவன் பாடல் ஓடும் போது என்னோட டான்ஸ்சை விஜய் பார்க்கிறாருங்கிற குறுகுறுப்பு இருந்திச்சு. இந்த விழாவுக்கு வந்த அவருக்கு நன்றி” என்றார் சூர்யா.
“சூர்யாவோட ஒவ்வொரு படம் வரும்போது அவரோட அசுர உழைப்பும், பிரமாண்ட வளர்ச்சியும் நல்லா தெரியுது. இந்த படம் பெரிய ஹிட் ஆகணும்” என்று வாழ்த்தினார் விஜய்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

Vijay’s 50th film to start shortly


Vettaikaran, Vijay’s 49th film is in the final stages and the actor is gearing up for his 50th film. Sources reveal that the film’s shooting will commence during the first week of September.After a lot of speculation the director for this new venture has been finalized. S P Rajakumar of Azhagar Malai fame will wield the megaphone for this project. An official announcement is expected soon.It is also said that Yuvan Shankar Raja may compose music for the film.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

''விருமாண்டி'' கெட்டப்பில் விஜய்

இப்போது இந்த கெட்டப்பிலேயே விஜய் தனது படமான வேட்டைக்காரனில் ஒரு பாடலுக்குத் தூள் பரக்கும் நடனமாடியிருக்கிறார். பாபு சிவன் இயக்கும் வேட்டைக்காரனின் பாடல் காட்சி அண்மையில் ஏவி.எம். ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கெட்டப்பில் விஜய் தனது ஜோடி அனுஷ்காவுடன் ஆட்டம் போட்டுள்ள இந்தப் பாடல்தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக். நடன இயக்குனர் பாபு பாஸ்கரின் டிபிக்கலான மூவ்மெண்டுகளை அனயாசமாக ஆடிக்காட்டி அசத்தியிருக்கிறார் விஜய். ரிங்டோனாகவும், டயலர் டோனாகவும் ரசிகர்களின் காதுகளில் ஒலிக்கப் போகும் அந்தப் பாடல் பெரிய அளவில் ஒரு கலக்கு கலக்க வேண்டும் என உத்தேசித்து ஒவ்வொரு அசைவுகளையும் தேர்ந்தெடுத்து தந்துள்ளார் நடன இயக்குனர் பாபு பாஸ்கர்.

விஜய்யின் 50-வது படத்தில் தமன்னா ஜோடி

பேரரசு, ராஜா என விஜய்யின் 50-வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர்கள் யாரென்ற குழப்பத்திற்கு ஒரு வழியாக விடை கிடைத்துவிட்டது.
ஏவிஎம் தயாரிப்பில் ‘வேட்டைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். தனது 50-வது படம் மெகா கமர்ஷியல் வெற்றியை பார்த்துவிடவேண்டும் என்ற அக்கறையில் இருக்கிறார் இளையதளபதி.பேரரசு, ராஜா இந்த இருவரில் ஒருவர்தான் முடிவாகுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத ஒரு முடிவை எடுத்துள்ளார் விஜய். எஸ்.பி.ராஜ்குமார் பெயரை டிக் அடித்துள்ளார் விஜய். பிரபு படங்கள் சிலவற்றை இயக்கியவர்தான் எஸ்.பி.ராஜ்குமார். தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘அழகர்மலை’ படத்தை இயக்கியுள்ளார். கிராமம் சார்ந்த கதைகளை இயக்குவதுதான் இவரது ஸ்டைல். ஆக விஜய்யின் படமும் கிராமம்- நகரம் கலந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன் ’ போன்ற எம்.ஜி.ஆர் பட தலைப்புகள் பரிசீலனையில் இருந்தாலும் இன்னும் தலைப்பு உறுதி செய்யப்படவில்லை. சங்கிலிமுருகன் படத்தை தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மணிசர்மா இசையமைக்க, எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

Vijay on cover page

inbox 1305, a Chennai-based magazine run by Kiruthiga Udayanidhi Stalin has successfully completed its first year. To commemorate the anniversary, Rain Tree Ecotel Hotel will host an event on August 7th 2009 at 4:30 pm at the hotel premises. inbox 1305 covers a range of subjects including sports, fashion, travel, adventure and food. Soundarya Rajinikanth, the CEO of Ocher Studios will release the first anniversary issue, which features Illaya Thalapathi Vijay on the cover page, will be received by ace photographer and ad filmmaker Sharad Haksar. The magazine donated money to the Anjar Project that was started to educate children and had planted 100 trees with the help of St. Paul’s School, Vepery, Chennai to mark its first anniversary.

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

Vijay apologises to advocates

The ‘Sivakasi’ row that started years ago seems to have reached its end. For, Vijay, the hero of the movie, along with producer A M Rathnam, director Perarasu and comedian M S Baskar, expressed regret in the Madras High Court on Wednesday for ‘hurting the feelings of advocates’ in the film.
He also requested the Court to quash all the 13 defamation cases he is facing over the issue. Following this, Tamil Nadu Advocates Association President S Prabakran accepted the regret and wanted the Court to pass a detail order so as to ensure that no similar incidents occurred in the future.
Advocates in various parts of the State had initiated separate defamation cases against Vijay, Rathnam, Baskar and Perarasu, claiming that the legal fraternity had been depicted in poor light in the film. A Ranipet Court also issued summons and warrants.


சிவகாசி வழக்கு... விஜய் வருத்தம்!

பொதுவா முன்னணி ஹீரோக்கள் நடிச்சு வர்ற படங்களில் குறை கண்டுபிடித்தே பேரு வாங்குற புலவர்கள் அதிகம். கேஸ் போடுவாங்க. போராட்டம் நடத்துவாங்க. திரை மறைவில் என்ன நடக்குமோ? கொஞ்ச நாட்களில் எல்லாம் மறந்து போகும். ஆனால் சிவகாசி படத்திலே வக்கீல்களை இழிவு படுத்துற மாதிரி சில காட்சிகள் அமைந்ததும், அதற்கு எதிராக சிலர் கோர்ட்டுக்கு போனதும் அவ்வளவு ஈசியா முடிந்துவிடுகிற சமாச்சாரமாக இல்லை. இந்த வழக்கின் விசாரணையில் விஜய்க்காக ஆஜரான வக்கீலை செம பிடி பிடித்தார் நீதிபதி. சினிமா என்ற பெயரில் யாரை வேண்டுமானலும், எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாமா என்று கேட்டார் நீதிபதி. இதையெல்லாம் எதிர்பார்க்காத விஜய், நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். விஜய் சார்பாக நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், நான் வழக்கறிஞர்களுக்கு எதிரானவன் அல்ல. சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தால், அது வழக்கறிஞர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.