பேரரசு, ராஜா என விஜய்யின் 50-வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர்கள் யாரென்ற குழப்பத்திற்கு ஒரு வழியாக விடை கிடைத்துவிட்டது.
ஏவிஎம் தயாரிப்பில் ‘வேட்டைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். தனது 50-வது படம் மெகா கமர்ஷியல் வெற்றியை பார்த்துவிடவேண்டும் என்ற அக்கறையில் இருக்கிறார் இளையதளபதி.பேரரசு, ராஜா இந்த இருவரில் ஒருவர்தான் முடிவாகுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத ஒரு முடிவை எடுத்துள்ளார் விஜய். எஸ்.பி.ராஜ்குமார் பெயரை டிக் அடித்துள்ளார் விஜய். பிரபு படங்கள் சிலவற்றை இயக்கியவர்தான் எஸ்.பி.ராஜ்குமார். தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘அழகர்மலை’ படத்தை இயக்கியுள்ளார். கிராமம் சார்ந்த கதைகளை இயக்குவதுதான் இவரது ஸ்டைல். ஆக விஜய்யின் படமும் கிராமம்- நகரம் கலந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன் ’ போன்ற எம்.ஜி.ஆர் பட தலைப்புகள் பரிசீலனையில் இருந்தாலும் இன்னும் தலைப்பு உறுதி செய்யப்படவில்லை. சங்கிலிமுருகன் படத்தை தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மணிசர்மா இசையமைக்க, எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me