வியாழன், 6 ஆகஸ்ட், 2009

Vijay apologises to advocates

The ‘Sivakasi’ row that started years ago seems to have reached its end. For, Vijay, the hero of the movie, along with producer A M Rathnam, director Perarasu and comedian M S Baskar, expressed regret in the Madras High Court on Wednesday for ‘hurting the feelings of advocates’ in the film.
He also requested the Court to quash all the 13 defamation cases he is facing over the issue. Following this, Tamil Nadu Advocates Association President S Prabakran accepted the regret and wanted the Court to pass a detail order so as to ensure that no similar incidents occurred in the future.
Advocates in various parts of the State had initiated separate defamation cases against Vijay, Rathnam, Baskar and Perarasu, claiming that the legal fraternity had been depicted in poor light in the film. A Ranipet Court also issued summons and warrants.


சிவகாசி வழக்கு... விஜய் வருத்தம்!

பொதுவா முன்னணி ஹீரோக்கள் நடிச்சு வர்ற படங்களில் குறை கண்டுபிடித்தே பேரு வாங்குற புலவர்கள் அதிகம். கேஸ் போடுவாங்க. போராட்டம் நடத்துவாங்க. திரை மறைவில் என்ன நடக்குமோ? கொஞ்ச நாட்களில் எல்லாம் மறந்து போகும். ஆனால் சிவகாசி படத்திலே வக்கீல்களை இழிவு படுத்துற மாதிரி சில காட்சிகள் அமைந்ததும், அதற்கு எதிராக சிலர் கோர்ட்டுக்கு போனதும் அவ்வளவு ஈசியா முடிந்துவிடுகிற சமாச்சாரமாக இல்லை. இந்த வழக்கின் விசாரணையில் விஜய்க்காக ஆஜரான வக்கீலை செம பிடி பிடித்தார் நீதிபதி. சினிமா என்ற பெயரில் யாரை வேண்டுமானலும், எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாமா என்று கேட்டார் நீதிபதி. இதையெல்லாம் எதிர்பார்க்காத விஜய், நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். விஜய் சார்பாக நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், நான் வழக்கறிஞர்களுக்கு எதிரானவன் அல்ல. சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தால், அது வழக்கறிஞர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me