விஜயின் 49வது படமான வேட்டைக்காரனை பாபுசிவன் இயக்குகிறார். ஐம்பதாவது படம் ஜெயம் ராஜாவுக்கு.விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரிப்பு. 49வது படமே இன்னும் தொடங்காத நிலையில் 51வது படத்துக்கு கதை கேட்டிருக்கிறார் இளைய தளபதி. கதை சொன்னவர், லிங்குசாமி. பீமா, பையா படங்கள் ஏற்படுத்திய மெகா இடைவெளியை வீணாக்காமல் புதிய ஸ்கிரிப்ட்டுகள் பல உருவாக்கியிருக்கிறார் லிங்கு. அதில் ஒன்றைத்தான் விஜயிடம் கூறியிருக்கிறார். கதை விஜய்க்குப் பிடித்துப் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெங்கட்பிரபு இயக்கத்தில் கோவா படத்தை தயாரித்துவரும் ஆக்கர் - வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்கள் லிங்குசாமியிடமும் கால்ஷீட் கேட்டுள்ளன. லிங்குசாமியும் தரத் தயார். அனேகமாக அது விஜய் நடிக்கும் படமாக இருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me