




“படத்திலே எந்த இடத்திலும் கேமிராவை பார்த்து ஹீரோ டயலாக் பேசலை. அந்த விஷயத்திலே விஜய் சார் உட்பட எல்லாரும் கவனமா இருந்தோம்” என்றார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.
“தண்ணியிலே சண்டை, ஆகாயத்திலே சண்டை, நெருப்புக்கு மத்தியிலே சண்டைன்னு பல இடங்களில் ஆக்ஷனில் பின்னி எடுத்திருக்கோம். விஜய் சார் இந்தியாவின் ஜேம்ஸ் பாண்டுன்னு சொல்ற அளவுக்கு படம் இருக்கும்” என்ற பிரபுதேவா, “இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துழைத்த விஜய்க்குதான் நன்றி சொல்லணும்” என்றார் மீண்டும் மீண்டும்!
நயன்தாரா பற்றி ஒன்னுமே சொல்லலியே என்று மற்றொரு நிருபர் ஞாபகப்படுத்த, மீண்டும் மைக் பிடித்தார் பிரபுதேவா! “நடிக்க ஒப்பந்தம் ஆகும்போதே காலையில் ஒன்பது மணிக்கு முன்னே படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டார் அவர். ஆனால் ஒன்பது மணிக்கு வந்தாரென்றால், ஷ§ட்டிங்கில் அவ்வளவு ஆர்வத்தோடு வேலை பார்ப்பார். ரொம்ப நைஸ் ஆர்ட்டிஸ்ட்” என்றார் பிரபுதேவா.
இந்த படத்திலே பஞ்ச் டயலாக் இல்லே. ஆனால், டயலாக்கே பஞ்ச்சா இருக்கும் என்று பிரபுதேவா சொல்லும்போது விஜய் முகத்தில் சிரிப்பை பார்க்க வேண்டுமே! அதுதான் அபூர்வ க்ளிக்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me