நடிகன்: விஜய்
நாயகி: நயன்தாரா
இயக்கம்: பிரபுதேவா
தயாரிப்பு: ஐங்கரன் இண்டர் நெஷனல்
இந்தி சோல்ட்ஜரின் மேலோட்டமான தழுவலாக வெளிவந்திருக்கிறது வில்லு, விஜய் - பிரபுதேவா கூட்டணியின் இரண்டாவது படமான வில்லு. தந்தைக்கு ஏற்பட்ட இழுக்கை தனயன் துடைத்தெறியும் எளிமையான கதை.
ஒருவரி கதைதானே என்று உள்ளே நுழைய முடியாது,
நேர்மையான ராணுவ மேஜர் சரவணன். அவர் தங்களது தேசத்துரோக செயலுக்கு இடையூறாக இருப்பதால் நான்கு ராணுவ அதிகாரிகள் அவரை சுட்டுக் கொல்கிறார்கள்.
அத்துடன் சரவணன் ஒரு தேசத் துரோகி என அனைவரையும் நம்ப வைக்கிறார்கள். இதன் காரணமாக சரவணனின் இறுதி சடங்கில் நியாயமாக கிடைக்க வேண்டிய ராணுவ மரியாதை கிடைக்காமல் போவதுடன், சரவணனின் மனைவி மற்றும் மகனை ஊரார் தள்ளிவைக்கிறார்கள்.
வில்லன்கள் நால்வரும் இப்போது இன்டர்போலால் தேடப்படும் சர்வதேச குற்றவாளிகள். இந்தியா வரும் அவர்களில் ஒருவரை காவல் துறையிடமிருந்து காப்பாற்றுகிறார் விஜய். இன்னொரு வில்லனான பிரகாஷ்ராஜின் மகள் நயன்தாராவை காதலித்து அவரது மாப்பிள்ளை ஆகிறார்.
அவரை விஜய் பழி வாங்கினாரா? அவரது தந்தையின் தேசத் துரோகி களங்கம் துடைக்கப்பட்டதா? நீண்ட கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
மேஜர் சரவணன், அவரது மகன் புகழ் என விஜய்க்கு இரண்டு வேடங்கள்.
காவல்துறையின் கண்காணிப்பை மீறி விஜய் வில்லனை காப்பாற்றும் ஆரம்ப காட்சியில் எழும் யார் விஜய் என்ற கேள்வியை இறுதிவரை சஸ்பென்சாக கொண்டு சென்றிருப்பது படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கிறது.
வடிவேலுவை சிம்பன்சி என நினைத்து வெளிநாட்டு போலீஸ் இம்சிப்பது வெடிச்சிரிப்பு. தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் பலம். மம்மி டாடி, ராமாகிட்ட வில்லை கேட்டேன் பாடல்கள் இளமை பொங்கும் ரகம் என்றால், நீ கோபப்பட்டுப் பார்த்தால் மனதில் தங்கும் ரகம்.
வில்லன்களின் வித்தியாசமான கெட்டப் மாறுவேட போட்டியை நினைவுப்படுத்துகிறது. குறிப்பாக ஆனந்த்ராஜ், ஸ்ரீமனின் தோற்றம். பிரகாஷ்ராஜின் பலமே வசனம்தான்
பாடல்களுக்கு ஏற்ற நடனத்துடன் விஜய் ஆடியிருப்பது வில்லு படத்துக்கு முக்கிய அம்பாகவுள்ளது.
படத்தில் வரும் நீ கோபப்பட்டால் எனும் பாடலை எதிலும் வராத அளவுக்கு குறும்பு தனமாக ஆடி குழந்தைகளை குளுங்க சிரிக்கவைத்திருக்கிரார் விஜய்.
படத்தின் பலமே நகைச்சுவை கலந்து வயிறு குலுங்க வைத்திருக்கும் பிரவுதேவக்கு ஒரு பூச்சொண்டு.
படத்தில் வரும் நீ கோபப்பட்டால் எனும் பாடலை எதிலும் வராத அளவுக்கு குறும்பு தனமாக ஆடி குழந்தைகளை குளுங்க சிரிக்கவைத்திருக்கிரார் விஜய்.
படத்தின் பலமே நகைச்சுவை கலந்து வயிறு குலுங்க வைத்திருக்கும் பிரவுதேவக்கு ஒரு பூச்சொண்டு.
வில்லுபடம் விஜய்க்கு ஒரு தில்லான பவர் வுல்லான படமாயிருக்கும் என்பதில் சந்தேகமேதுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me