வெள்ளி, 30 ஜனவரி, 2009

villu movie wallpaper


சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் விஜய்யை வைத்து 50 வது படத்தை இயக்கப் போகிறார். ஜெயம் ராஜா 50! 50! 50!

ஜெயம் ரவியின் அண்ணனும், வெற்றிப் பட இயக்குநருமான ஜெயம் ராஜா, அடுத்து விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.
கோலிவுட்டின் ஹாட் செய்தியே இதுதான். இப்படம் விஜய்யின் 50வது படம் என்பது கூடுதல் விசேஷம். விஜய்யே இந்தப் படத்தையும் தயாரிக்கவும் செய்கிறார் என்பது போனஸ் செய்தி. விஜய்யின் பொன் விழா படத்தை சித்திக், தரணி ஆகியோரில் ஒருவர்தான் இயக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஜெயம் ராஜா, விஜய்யை இயக்கப் போகிறார் என்ற செய்தியால் கோலிவுட் சர்ப்ரைஸில் ஆழ்ந்துள்ளது. ஆனால் ஜெயம் ராஜாவின் வெற்றிகரமான இயக்கத் திறமையால்தான் அவரை விஜய் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜா தொடர்ந்து நான்கு மெகா ஹிட் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அவர் இயக்கியதே இந்த நான்கு படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜா கடைசியாக இயக்கிய படம் ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம்.

விஜய்யை வைத்து ராஜா இயக்கப் போகும் படம் வழக்கம் போல ரீமேக் படமா அல்லது சொந்தக் கதையா என்பது குறித்து தெரியவில்லை. காரணம், ராஜாவின் இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களுமே ரீமேக் என்பதால்தான். அதேசமயம், விஜய்யும், ரீமேக் படங்களில்தான் பெருமளவில் வெற்றிகளைக் குவித்துள்ளார் என்பதால் இருவரும் இணையும் இப்படமும் நிச்சயம் ரீமேக் படமாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இதுவரை தம்பியை வைத்து மட்டுமே இயக்கி வந்த ராஜா முதல் முறையாக இன்னொரு நடிகரை, அதுவும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் நடிகரை வைத்து இயக்கப் போகிறார். ராஜாவின் திரைப்பட இயக்கத் திறமை குறித்து அறிந்துள்ள விஜய், அவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.


தெலுங்கில் விஜய் படம்
ஆந்திராவில் தெலுங்கு முன்னணி நடிகர்களுக்குள்ள மார்க்கெட் தமிழ் நடிகர்களுக்கும் உள்ளது.
இதன் காரணமாக தமிழில் ஒரு படம் வெளியாகும்போதே தெலுங்கிலும் அப்படம் மொழி மாற்றம் செய்யப்படும். இந்த சுடச்சுட வியாபாரத்தில் விஜயின் சச்சின் படம் எப்படியோ விடுபட்டுவிட்டது.

படம் ஆறினாலும் விஜயின் மா‌ர்க்கெட் இன்னும் சூடாக‌த்தான் இருக்கிறது ஆந்திராவில். அந்த சூட்டில் ஆம்லெட் போட தீர்மானித்திருக்கிறார்கள் சிலர். சச்சின் படம் அதே பெய‌ரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. படத்தில் ஜெனிலியா இருப்பது தயா‌ரிப்பாளருக்கு கூடுதல் நம்பிக்கை. ஆந்திரா முழுக்க அம்மணி பிரபலம். போனஸாக பிபாசா பாசு வேறு இருக்கிறார்.

செவ்வாய், 27 ஜனவரி, 2009

லிங்குசாமி இயக்கத்தில் விஜய்

விஜயின் 49வது படமான வேட்டைக்காரனை பாபுசிவன் இயக்குகிறார். ஐம்பதாவது படம் ஜெயம் ராஜாவுக்கு.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் தயா‌ரிப்பு. 49வது படமே இன்னும் தொடங்காத நிலையில் 51வது படத்துக்கு கதை கேட்டிருக்கிறார் இளைய தளபதி. கதை சொன்னவர், லிங்குசாமி. பீமா, பையா படங்கள் ஏற்படுத்திய மெகா இடைவெளியை வீணாக்காமல் புதிய ஸ்கி‌ரிப்ட்டுகள் பல உருவாக்கியிருக்கிறார் லிங்கு. அதில் ஒன்றை‌த்தான் விஜயிடம் கூறியிருக்கிறார். கதை விஜய்க்குப் பிடித்து‌ப் போனதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. வெங்கட்பிரபு இயக்கத்தில் கோவா படத்தை தயா‌ரித்துவரும் ஆக்கர் - வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்கள் லிங்குசாமியிடமும் கால்ஷீட் கேட்டுள்ளன. லிங்குசாமியும் தர‌த் தயார். அனேகமாக அது விஜய் நடிக்கும் படமாக இருக்கலாம்.

செவ்வாய், 13 ஜனவரி, 2009

வில்லு - திரைவிமர்சனம்

வில்லுபடம் விஜய்க்கு ஒரு தில்லான பவர் வுல்லான படமாயிருக்கும் என்பதில் சந்தேகமேதுமில்லை.





நடிகன்: விஜய்

நாயகி: நயன்தாரா

இயக்கம்: பிரபுதேவா

தயாரிப்பு: ஐங்கரன் இண்டர் நெஷனல்


இந்தி சோல்ட்ஜ‌‌‌ரின் மேலோட்டமான தழுவலாக வெளிவந்திருக்கிறது வில்லு, விஜய் - பிரபுதேவா கூட்டணியின் இரண்டாவது படமான வில்லு. தந்தைக்கு ஏற்பட்ட இழுக்கை தனயன் துடைத்தெறியும் எளிமையான கதை.

ஒருவ‌‌‌ரி கதைதானே என்று உள்ளே நுழைய முடியாது,
நேர்மையான ராணுவ மேஜர் சரவணன். அவர் தங்களது தேசத்துரோக செயலுக்கு இடையூறாக இருப்பதால் நான்கு ராணுவ அதிகா‌‌‌ரிகள் அவரை சுட்டுக் கொல்கிறார்கள்.

அத்துடன் சரவணன் ஒரு தேசத் துரோகி என அனைவரையும் நம்ப வைக்கிறார்கள். இதன் காரணமாக சரவணனின் இறுதி சடங்கில் நியாயமாக கிடைக்க வேண்டிய ராணுவ ம‌‌‌ரியாதை கிடைக்காமல் போவதுடன், சரவணனின் மனைவி மற்றும் மகனை ஊரார் தள்ளிவைக்கிறார்கள்.

வில்லன்கள் நால்வரும் இப்போது இன்டர்போலால் தேடப்படும் சர்வதேச குற்றவாளிகள். இந்தியா வரும் அவர்களில் ஒருவரை காவல் துறையிடமிருந்து காப்பாற்றுகிறார் விஜய். இன்னொரு வில்லனான பிரகாஷ்ரா‌‌ஜின் மகள் நயன்தாராவை காதலித்து அவரது மாப்பிள்ளை ஆகிறார்.

அவரை விஜய் பழி வாங்கினாரா? அவரது தந்தையின் தேசத் துரோகி களங்கம் துடைக்கப்பட்டதா? நீண்ட கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
மேஜர் சரவணன், அவரது மகன் புகழ் என விஜய்க்கு இரண்டு வேடங்கள்.

காவல்துறையின் கண்காணிப்பை மீறி விஜய் வில்லனை காப்பாற்றும் ஆரம்ப காட்சியில் எழு‌ம் யார் விஜய் என்ற கேள்வியை இறுதிவரை சஸ்பென்சாக கொண்டு சென்றிருப்பது படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிக‌‌‌ரிக்கிறது.

வடிவேலுவை சிம்பன்சி என நினைத்து வெளிநாட்டு போலீஸ் இம்சிப்பது வெடிச்சி‌‌‌ரிப்பு. தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் பலம். மம்மி டாடி, ராமாகிட்ட வில்லை கேட்டேன் பாடல்கள் இளமை பொங்கும் ரகம் என்றால், நீ கோபப்பட்டுப் பார்த்தால் மனதில் தங்கும் ரகம்.

வில்லன்களின் வித்தியாசமான கெட்டப் மாறுவேட போட்டியை நினைவுப்படுத்துகிறது. குறிப்பாக ஆனந்த்ரா‌ஜ், ஸ்ரீமனின் தோற்றம். பிரகாஷ்ரா‌‌ஜின் பலமே வசனம்தான்

பாடல்களுக்கு ஏற்ற நடனத்துடன் விஜய் ஆடியிருப்பது வில்லு படத்துக்கு முக்கிய அம்பாகவுள்ளது.
படத்தில் வரும் நீ கோபப்பட்டால் எனும் பாடலை எதிலும் வராத அளவுக்கு குறும்பு தனமாக ஆடி குழந்தைகளை குளுங்க சிரிக்கவைத்திருக்கிரார் விஜய்.
படத்தின் பலமே நகைச்சுவை கலந்து வயிறு குலுங்க வைத்திருக்கும் பிரவுதேவக்கு ஒரு பூச்சொண்டு.

வில்லுபடம் விஜய்க்கு ஒரு தில்லான பவர் வுல்லான படமாயிருக்கும் என்பதில் சந்தேகமேதுமில்லை.

'வில்லு' ரிலீஸ்: திரையரங்குகளில் திருவிழா

சனி, 10 ஜனவரி, 2009

சொல்லுக்கு அரிச்சந்திரன் 'வில்லு'க்கு விஜய்

villu Trailer

உம்’, ‘ஊஹூம்’ என்று ஒற்றை வரியில் பதில் அளிக்கும் விஜய் கூட, கலகலப்பூட்டினார் வில்லு பிரஸ்மீட்டில்! நாலு வரியில் ஒரு கதையை சொல்லி, இதுதானே வில்லு கதை என்றார் நிருபர் ஒருவர். “அட, நாங்க சொல்ற கதையை விட, நீங்க சொன்னது நல்லாயிருக்கே” என்று போட்டு தாக்கினார் இளைய தளபதி. மேலும் சில விவரங்களை அவிழ்த்துவிட்ட நிருபரை பார்த்து, “இன்டர்நெட்டில் பாட்டு ரிலீஸ் பண்ணியது இவராயிருக்குமோ” என்று பிரபுதேவா சொல்ல, ஏரியாவே கலகலப்பானது.
“படத்திலே எந்த இடத்திலும் கேமிராவை பார்த்து ஹீரோ டயலாக் பேசலை. அந்த விஷயத்திலே விஜய் சார் உட்பட எல்லாரும் கவனமா இருந்தோம்” என்றார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.
“தண்ணியிலே சண்டை, ஆகாயத்திலே சண்டை, நெருப்புக்கு மத்தியிலே சண்டைன்னு பல இடங்களில் ஆக்ஷனில் பின்னி எடுத்திருக்கோம். விஜய் சார் இந்தியாவின் ஜேம்ஸ் பாண்டுன்னு சொல்ற அளவுக்கு படம் இருக்கும்” என்ற பிரபுதேவா, “இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துழைத்த விஜய்க்குதான் நன்றி சொல்லணும்” என்றார் மீண்டும் மீண்டும்!
நயன்தாரா பற்றி ஒன்னுமே சொல்லலியே என்று மற்றொரு நிருபர் ஞாபகப்படுத்த, மீண்டும் மைக் பிடித்தார் பிரபுதேவா! “நடிக்க ஒப்பந்தம் ஆகும்போதே காலையில் ஒன்பது மணிக்கு முன்னே படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டார் அவர். ஆனால் ஒன்பது மணிக்கு வந்தாரென்றால், ஷ§ட்டிங்கில் அவ்வளவு ஆர்வத்தோடு வேலை பார்ப்பார். ரொம்ப நைஸ் ஆர்ட்டிஸ்ட்” என்றார் பிரபுதேவா.
இந்த படத்திலே பஞ்ச் டயலாக் இல்லே. ஆனால், டயலாக்கே பஞ்ச்சா இருக்கும் என்று பிரபுதேவா சொல்லும்போது விஜய் முகத்தில் சிரிப்பை பார்க்க வேண்டுமே! அதுதான் அபூர்வ க்ளிக்!

புதன், 7 ஜனவரி, 2009

உலகமெங்கும் ஜனவரி 12ம் திகதி முதல் வில்லு பொங்கல்

villu new gallery

Villu's release announced
Vijay's Pongal release Villu recently went through the censor scissors and escaped majorly unscathed with a UA certificate. According to sources, the movie was viewed by censor officials on Saturday the January 3rd. It is also learnt that the movie will be released on January 12th, a couple of days ahead of Pongal to enable it to cash in on the holiday season.
Villu is directed by Prabhu Deva, who is also behind Vijay's hit flick Pokkiri. The movie will also be crucial to Nayan's existence who is desperate for a hit after delivering two fiascos back to back. Villu is scored by the Telugu music director Devi Sri Prasad.Based on the buzz from the sets, Vijay, in a lighter vein, quipped that he was relieved that the cameo played by Prabu Deva in the movie was not that of a dance master –because that would mean the character Vijay plays in Villu would have to learn tough steps! Besides, the comedy track, written by Prabhu Deva had even Vadivelu in splits in the sets, insiders swear.

It’s indeed a wonderful news for everyone who is waiting to watch the most thrilling and racy action movie. Vijay’s long awaited villu is releasing on 12th of January. Prabhu Deva, Vijay team has already given super-dooper hit movie Pokkiri. So the team is on great expectation to achieve 100% more than Pokkiri. Villu has Glamorous Nayanthara and Hilarious Vadivelu to add more hope. Villu music penned by Devi Sri Prasad has become super hit and when the movies releases it will become the most sought music. As for Vijay Fans it’s 12th January, a great day to celebrate Vijay’s next hit!

Villu certified U/A

Villu the most expected movie for Pongal was out for censored last Saturday. This Vijay, Nayanthara starrer was given U/A certification by the censor board. Villu has heavily packed action scenes that will raise Goosebumps for sure. “Vaigaippuyal” Vadivelu’s rib tickling comedy will make us laugh like crazy. Prakash Raj does the baddie and he will for sure steal our heart with his phenomenal acting talents. Just wait and watch Vijay in Action on 12th January! Until then keep watching this space for more tit-bits and interesting facts on villu.

வியாழன், 1 ஜனவரி, 2009

இளையதளபதி விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2009 2009 2009 !!!