also learnt that the actor wanted to avoid the inconvenience that could be caused to public and cut short his meeting. The fans were naturally disappointed that they could not spend more time with their star. As per the plan Vijay was to have distributed various goods to the deserving but this could not be done. It is now learnt that Vijay's PRO P.T.Selva Kumar distributed the stuff the next day on behalf of him.
ரசிகர்களின் கூட்டத்தில் நசுங்கிய விஜய்
அலைகடலாக திரண்ட கூட்டத்தை பார்த்து, தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓடோடி வந்துவிட்டார் விஜய். இடம்- ஓசூர்.
இலவச திருமணம், இலவச உடை, இலவச அரிசி இதை தொடர்ந்து ரசிகர்களின் பெரு முயற்சியால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடம் ஒன்றையும் திறந்து வைத்தார் விஜய். ஓசூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தங்களது கூட்டு முயற்சியால் இந்த பள்ளியை உருவாக்கியிருக்கிறார்கள். இதை திறந்து வைக்க தனது தலைவரை விட்டால் தகுதியான ஆள் ஏது என்று நினைத்திருப்பார்கள் போலும். விஷயத்தை விஜயிடம் சொல்ல, அவரும் மகிழ்வோடு வர சம்மதித்தார்.
இவர் வருதையறிந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டார்கள் ஓசூரில். சில டீன் பெண்களும், இளைஞர்களும் பெங்களூரில் இருந்து கூட விஜயை காண வந்திருந்தார்கள். ஏராளமான ரசிகர்கள் கூடியதால் அந்த இடத்தில் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்பதை அறிந்த விஜய், விறுவிறு என்று மேடையிலிருந்து கிளம்பி விட்டார். போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏற்றப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me