ஞாயிறு, 23 நவம்பர், 2008

வாசகர்களின் கருத்துக்கள்

உங்கள் கருத்துக்களை வெளியிட superstarvijayfan@gmail.com

இளையதளபதி விஜய் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி,
விஜயின் ரசிகனாக இருக்க இன்று நான் பெருமைப்படுகிறேன்

எமது ஈழத்தின் சொந்தங்களின் வேதனைகளை நன்றாக அறிந்து அதர்க்காக குரல் கொடுத்து உண்ணாவிரதம் இருப்பதில் பெருமைபடுகிறேன்சினிமாவையும் அப்பாற்பட்டு சமுதாயத்திற்க்கு இறங்கிவந்து தமிழர்களின் பொது நலம் காத்து,விடுதலைக்காக போராடும் ஈழத்தமிழர்க்காக விஜய் குரல் கொடுப்பதில் ஒரு ஈழத்தமிழன் என்ற வகையில் விஜயின் ரசிகனாக இருக்க இன்று நான் பெருமைப்படுகிறேன்.
இப்படிக்கு swiss லிருந்து vijayan.........

தளபதி விஜய் அவர்களுக்கும், சக ரசிக நெஞ்சங்களுக்கும் வணக்கம்,
Subject: இளையதளபதியின் உணர்வு இமயத்தின் உயரம்.

தங்களின் ஈழ தமிழர் மீதான பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. பெயருக்கு வந்தோம் போனோம், வராததுக்கு விளக்கம் கொடுத்தோம் என்று திரை வாழ்வை ஓட்டும் நடிகர்கள் மத்தியில் இளையதளபதியின் உணர்வு இமயத்தின் உயரம், உலகத்தமிழினம் என்றென்றும் தளபதிக்கு கடமைபட்டுள்ளது.
இளையதளபதியின் போராட்டம், ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க வேண்டும், சுய உரிமை போரட்டத்தை தமிழக மக்களின் வாசலுக்கு கொண்டு சென்று உணர்த்த வேண்டுமென வாழ்த்துகிறேன்.
அஞ்சா நெஞ்சுரம் கொண்ட ரசிகர்களாகிய நாம், போர் நிறுத்தம் எனும் அரசியல் மாயையை விடுத்து ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமையை தமிழக சட்ட சபையில் அங்கீகரிக்க கோரி இப்போராட்டத்தை முன்னெடுப்போம்.
ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி!சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம்!தளபதியின் குரலுக்கு செவி கொடு!ஈழ தமிழனை வாழவிடு!
என எம் குரல் வான் தொடட்டும்!.நன்றி.
இப்படிக்கு BHUVAN.......



எங்கள் இளைய தளபதி விஜய் அவர்களுக்கும் இனிய ரசிகர்களுக்கும்,
வணக்கம்,
"தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்" என்பார்களே அதுபோல் எங்கள் தொப்புள் கொடி உறவுகளே நீங்கள் எங்களுக்கு குரல் கொடுத்து வருகிறீர்கள் அதனை இட்டு பெருமகிழ்ச்சியும் எம் எதிர் கால வாழ்வில் சிறு நம்பிகையும் கொள்கிறோம். தாய்க்கு மகனும் அண்ணனுக்கு தம்பியும் நன்றி சொல்வது இல்லையே! அதனால் நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்லப் போவது இல்லை. அனாலும் எங்கள் மட்டற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்து கொள்கிறோம். அதோடு எங்களுக்கான குரலை இன்னும் விரைவுபடுத்துங்கள், எங்கள் வாழ்வுரிமையையும் உலகறிய செய்யுங்கள் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம். அதன் ஒரு பகுதியாக ஈழத்தமிழர்களின் "சுய நிர்ணய உரிமையை" தமிழகச் சட்ட மன்றத்தில் அங்கீகரிக்க கோருங்கள். அது எங்கள் வாழ்வுக்கு நிரந்தர வாழ்வுரிமையைப் பெற்றுத்தரும். மறைந்த எம் "பொன் மனச் செம்மல்", "மக்கள் திலகம்" திரு M.G.R அவர்கள் ஈழதமிழர்களின் மனதில் நிலையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்.அதே போல் எம் இளைய தளபதி விஜய் அவர்களே, நீங்களும் அவர் போல் எம் மக்கள் நலன் பாராட்டி எம் மனதிலும் தமிழீழ வரலாற்றிலும் நீங்கா இடம் பெற வேண்டும் என்று அன்புடன் விரும்புகிறோம்.
"நாடு! அதை நாடு! - அதை நாடாவிட்டால் ஏது வீடு?"

நன்றி,
இப்படிக்குவழுதி பாண்டியன்
கனடாவிலிருந்து.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me