செவ்வாய், 18 நவம்பர், 2008

பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் மாபெரும் உண்ணாவிரதம்

16/11/2008


இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் - உண்ணாவிரத மேடையில் நடிகர் விஜய் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். 37 இடங்களில் உண்ணாவிரதம் நடப்பதாக தகவல் வந்துள்ளது.
ரசிகர் மன்ற நற் பணி இயக்கத்தினரே இப் போராட்டத்தை நடத்துகின்றனர். இப்படிப்பட்ட ரசிகர்கள் எனக்கு இருப்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே இலங்கையில் தமிழர் படு கொலையை கண்டித்து பல போராட்டங்கள் நடந்துள்ளன. நானும் அவற்றில் பங்கேற்றுள்ளேன். எனது ரசிகர்கள் நடத்துவதால் இந்த உண்ணாவிரதத்திலும் பங்கேற்று இருக்கிறேன். இலங்கையில் நடக்கும் போரினால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். அங்கு போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும். தமிழர்கள் படுகொலை செய் யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதற்காக நாம் இலங்கை சென்று அங்குள்ள இராணுவத்தோடு போர்செய்ய முடியாது. இது போன்ற போராட்டங்கள் மூலம் நம் உணர்வுகளைத் தான் காட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்


சேல்த்தில் விஜய், மற்றும் 8000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டம். தமிழகம் முழுதும் நடிகர் விஜய் நற்பணி மன்றத்தினர் ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் படுகொலைகளை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தனர்.சென்னையில் விஜய் இருக்க மற்ற மாவட்டங்களில் அவரது ரசிகர்கள் இருந்தனர். சேலத்தில் சேலம் விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமையில் கிட்டத்தட்ட 8000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்க எழிச்சியோடு நடந்தது.
தமிழக வேளாண்மை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புதல்வன் சட்டமன்ற உறுப்பினர் ஆ.ராஜா உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். அவர் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பேச அடுத்து வந்து இருந்த பல்வேறு தமிழ் அமைப்புகள் ஈழ்ம் பற்றி பேசினர். புதியன பண்பாட்டு இயக்கத்தின் செந்தில்," ஒரு சிற்று எறும்பை குட தொடர்ந்து அடித்தால் அது கொடுக்கை நிமிர்த்தி திருப்பி தாக்க முற்படும்,ஒரு புழுவை தாக்கினால் குட அது பொறுக்காமல் தன் எதிர்ப்பை காட்டும் அப்படி இருக்க வீரம் செறிந்த தமிழர் இனத்தை பாசிச வெறியோடு சிங்கள அரசு தாக்கும் போது தவிர்க்க இயலாமல் தமிழர்கள் திருப்பி தாக்குகின்றனர். இது வீரம் செறிந்த தமிழ் ஈழத்தின் விடுதலை போராட்டம்.தன் இலக்கை அடையாமல் நிறுத்தாது" என்றார் எழிச்சியோடு இறுதியாக பேசிய மன்ற தலைவர் பார்த்திபன்," இந்தியாவில் பிறந்ததால் வெட்டியாக என் உயிர் போகும் என வருத்தபடுகிறேன். அங்கு என் ஈழத்தில் பிறந்து இருந்தால் என் மக்களுக்காக குண்டு பட்டு என் உயிர் துறந்து இருப்பேன்" என்றார் உணர்ச்சி பொங்க! குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழக இளைஞர் முன்னணி, மற்றும் பல அமைப்பினர் பங்கேற்க மிக இறப்பாக உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிந்தது. சினிமா ரசிகர்களாக இருந்த இளைஞர்கள் நடிகர் விஜயின் ஊக்கதால் ஈழ தமிழர்களுக்காக உன்ன விரதம் இருந்து தொப்புள் கொடி உறவுகளுக்கு ஆதரவு தந்து தமிழர்களாக உயர்ந்
இலங்கை பிரச்சனையை சின்ன வயது முதல் நானும் அறிந்து இருக்கிறேன்நீங்களும் அறிந்து இருப்பீர்கள். கடந்த இரண்டு மாதங்களாக பத்திரிகைகளிலும், டிவியிலும் வருகிற தகவல்களை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நம் ஊரில் விமானம் பறந்து போவதை பார்த்து சிறுவர், சிறுமிகள் உற்சாகத்துடன் கை தட்டுவார்கள். ஆனால் இலங்கையில் ஒரு விமானம் பறந்தாலோ, சிறுவர் சிறுமிகள் எல்லாரும் பயந்து பதுங்கு குழியில் போய் ஒளிந்து கொள்கிறார்கள். நம் வீட்டில் கல் விழுந்தால், கல் வீசியது யார்? என்று அதட்டி கேட்கிறோம். அங்கே வீடுகள் மீது குண்டு விழுகிறது. நம்மால் தட்டிக் கேட்க முடியவில்லை. இலங்கை தமிழர்கள் மூன்று வேளை நிம்மதியாக சாப்பிட வேண்டும். நிம்மதியாக உறங்க வேண்டும்.
இவ்வாறு பேசிய விஜய், நான்கு மணிக்கு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்click here for more images gallery of Vijay fans in support of Sri Lankan Tamils

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me