விஜய்யின் 49-வது படமான 'வேட்டைக்காரனை' ஏவி.எம் தயாரிக்கிறது. தரணியின் உதவியாளர் பாபு சிவன் படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் அசினை எப்படியும் நடிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கும் அசினும் வேட்டைக்காரனில் நடிக்க ஆர்வமாக உள்ளார். தற்போது 'லண்டன் ட்ரீம்ஸ்' படத்துக்காக லண்டனில் இருக்கும் அசின், படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை வந்து பாபு சிவனிடம் கதை கேட்கிறார்.
விஜய் தற்போது நடித்து வரும் 'வில்லு' பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. 'வில்லு' திரைக்கு வரும் முன்பே 'வேட்டைக்காரன்' படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். பிப்ரவரியிலிருந்து இந்திப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால்தான் இந்த அவசரம்.
இது ஒரு புறம் இருக்க அசினுக்கு வேட்டைக்காரனுக்காக இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நிஜமானால் அதிக சம்பளம் வாங்கும் நடிகை பட்டியலில் நயன்தாரா பின்னுக்கு தள்ளப்படுவார்.
1 கருத்து:
2 crores is too much..
கருத்துரையிடுக
talk me